குழந்தையின் உடல் நலம் சீராகி ஆரோக்கியமாக இருப்பதால், குழந்தை பராமரிப்பிற்காக மாவட்ட குழந்தைகள் பாதுகாப்பு அலுவலரிடம் முதல்வர் மற்றும் உதவி இருப்பிட மருத்துவ அதிகாரிகள் முன்னிலையில் ஒப்படைக்கப்பட்டது.
கோவை: கோவையில் புதரில் வீசப்பட்ட பச்சிளம் பெண் குழந்தையின் உடல்நிலை தேறியதால் குழந்தைகள் பாதுகாப்பு துறையில் ஒப்படைக்கப்பட்டது.
கோவை மாவட்டம், SIHS காலனி பகுதியில் கடந்த ஜூன்-8 காலை 7.00-மணியளவில் பச்சிளம் பெண் குழந்தை ஒன்று அங்குள்ள புதர் ஒன்றில் கண்டெடுக்கப்பட்டு, கோவை அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனையில் சிறப்பு சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டது.
முதல்வர் நிர்மலா தலைமையில், குழந்தைகள் மருத்துவம் துறை தலைவர் கீதாஞ்சலி, செவிலியர்களின் தொடர் பராமரிப்பில் பச்சிளம் குழந்தைகள் பிரிவில் சிகிச்சை அளிக்கப்பட்டு வந்தது.

தற்போது குழந்தையின் உடல் நலம் தேறிய நிலையில் எடை 1.5-கிலோவிலிருந்து, 2.06-கிலோவாக உயர்ந்தது. மேலும் குழந்தையின் உடல் நலம் சீராகி ஆரோக்கியமாக இருப்பதால், குழந்தை பராமரிப்புக்காக மாவட்ட குழந்தைகள் பாதுகாப்பு அலுவலரிடம் முதல்வர் மற்றும் உதவி இருப்பிட மருத்துவ அதிகாரிகள் முன்னிலையில் ஒப்படைக்கப்பட்டது.