சிங்கப்பூரில் வேலை - இளைஞர்களிடம் பணம் சுருட்டிய தனியார் நிறுவன அதிகாரி கோவையில் கைது..!

மோசடியில் ஈடுபட்ட தனியார் நிறுவனத்தின் அதிகாரியை போலீசார் இன்று கைது செய்தனர். அவரிடம் இருந்து மோசடி பணம் ரூ.21-லட்சம், மற்றும் சொகுசு கார் பறிமுதல் செய்யப்பட்டது.


கோவை: சிங்கப்பூருக்கு வேலை வாங்கித் தருவதாக கூறி 170-பேருடம் லட்சக்கணக்கில் மோசடி செய்த தனியார் நிறுவன அதிகாரியை போலீசார் கைது செய்தனர்.

கோவை, ஈரோடு, மதுரை, மற்றும் கேரளா மாநிலம் பாலக்காடு உள்ளிட்ட பல்வேறு பகுதிகளை சேர்ந்த 50-க்கும் மேற்பட்டோர் கடந்த சில நாட்களுக்கு முன்பு மாவட்ட எஸ்.பி. அலுவலகத்தில் புகார் மனு அளித்தனர்.

அதில், கோவையை அடுத்த வடவள்ளி மருதமலை சாலையில் வெளிநாட்டு வேலைக்கு ஆட்களை அனுப்பும் தனியார் நிறுவனம் செயல்பட்டு வந்தது. இந்த நிறுவனத்தின் சார்பில் கடந்த மே மாதம் 22-ந் தேதியும், 29-ந் தேதியும் சிங்கப்பூர் வேலைக்கு ஆட்கள் எடுப்பதாக அறிவித்தனர்.

அதில், உள்ள செல்போன் எண்ணை தொடர்பு கொண்டு பேசிய போது சிங்கப்பூரில் பிரபல கம்பெனிக்கு மாதம் ரூ.3-லட்சம் சம்பளத்தில் வேலை இருப்பதாகவும், சிவில் என்ஜினீயர், சூப்பர்வைசர், பிட்டர் உள்ளிட்ட பணிகளுக்கு ஆட்கள் தேர்வு செய்யப்படுவதாகவும் தெரிவித்தனர்.

மேலும், வடவள்ளி ஏஜென்சி அலுவலகத்தில் நேரில் சென்று விசாரித்த போது விசா, பயண கட்டணம் உள்ளிட்டவற்றுக்குப் பணம் செலுத்த வேண்டும் என்று தெரிவித்தனர். இதனை நம்பி ஆண்கள், பெண்கள் என 150 க்கும் மேற்பட்டோர் அவர்கள் சொன்ன வேலைக்கு தகுந்தவாறு ரூ.1 லட்சம், முதல் ரூ.2 லட்சம் வரை என ஆன்லைன் மூலமாகவும் நேரிலும் பணம் செலுத்தினர்.

பின்னர், தங்களது செல்போன் எண்ணுக்கு சிங்கப்பூர் நிறுவனத்தில் வேலை தயாராகிவிட்டது என போலியாக குறுந்தகவல் அனுப்பியுள்ளனர். இது தொடர்பாக ஏஜென்சி நிறுவனத்தை செல்போனில் தொடர்பு கொள்ள முயற்சித்த போது சுவிட்ச் ஆப் செய்யப்பட்டிருந்தது.

நேரில் சென்று பார்த்தபோது அலுவலகம் பூட்டப்பட்டு இருந்தது. விசாரித்ததில் ஏஜென்சி நிறுவனத்தின் உரிமையாளராக ராமமூர்த்தி, அதிகாரி மோகன கிருஷ்ணன், மற்றும் ஊழியர்கள் சரண்யா, ஜோதி ஆகியோர் சுமார் 170 பேரிடம் லட்சக்கணக்கில் மோசடி செய்துவிட்டு தலைமறைவானது தெரியவந்தது.

அவர்கள் மீது நடவடிக்கை எடுத்து எங்கள் பணத்தை திருப்பி தர நடவடிக்கை எடுக்க வேண்டும் என மனுவில் தெரிவித்தனர். புகார் அடிப்படையில், மாவட்ட குற்றப்பிரிவு போலீஸ் ஆய்வாளர் ராஜேஸ்வரி மற்றும் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டனர்.

இந்த நிலையில், மோசடியில் ஈடுபட்ட அந்த நிறுவனத்தின் அதிகாரி கோவில் பாளையத்தைச் சேர்ந்த மோகன கிருஷ்ணன் (42) என்பவரை போலீசார் இன்று கைது செய்தனர். அவரிடம் இருந்து மோசடி பணம் ரூ.21 லட்சம், மற்றும் சொகுசு கார் பறிமுதல் செய்யப்பட்டது.

கைதான மோகனகிருஷ்ணன் மீது பல மோசடி வழக்குகள் உள்ளன. நிறுவனத்தின் உரிமையாளரான ராமமூர்த்தி உள்ளிட்ட 3-பேரை போலீசார் தீவிரமாக தேடி வருகின்றனர்.

Newsletter

கோவையில் தொடங்கிய இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் மக்கள் சந்திப்பு நடைப்பயணம்

மத்திய அரசின் மக்கள் விரோதக் கொள்கைகளை எதிர்த்தும், தொழிலாளர்களுக்கு எதிராக கொண்டு வரப்பட்டுள்ள தொழிலாளர் சட்டங்களை திரு...

தங்க நகை வழிப்பறி வழக்கு: குற்றவாளிக்கு 7 ஆண்டு சிறை; ரூ.5,000 அபராதம் - கோவை நீதிமன்றம் தீர்ப்பு

கடந்த 2020 ஆம் ஆண்டு கோவையில் 100 கிராம் தங்க நகையை கத்தி முனையில் வழிப்பறி செய்த வழக்கில் குற்றம் நிரூபிக்கப்பட்ட இளைஞர...

கிணத்துக்கடவு அருகே வாலிபர் கொடூரக் கொலை

கோவை மாவட்டம் பொள்ளாச்சியை அடுத்த சிக்கலாம்பாளையம் பகுதியைச் சேர்ந்த அஸ்வின் (22) என்ற வாலிபாரின் வீட்டிற்குள் நள்ளிரவில...

அரசூர் துணை மின் நிலையத்தில் நாளை (07.08.2026) மின்தடை

கோவையில் அரசூர் துணை மின் நிலையத்தில் நாளை காலை 9 மணி முதல் மாலை 5 மணி வரை மாதாந்திர பராமரிப்பு பணிகள் நடைபெறுவதால் செல்...

கதிர்நாயக்கன்பாளையம் துணை மின் நிலையத்தில் நாளை (07.08.2026) மின்தடை

கோவை கதிர்நாயக்கன்பாளையம் துணை மின் நிலையத்தில் நாளை மாதாந்திர பராமரிப்பு பணிகள் காலை 9 முதல் மாலை 5 மணி வரை நடைபெறும்....

பேருந்தில் கல்லூரி மாணவிக்கு பாலியல் தொல்லை; கோவையில் காவலர் கைது

பொள்ளாச்சியில் இருந்து கோவை வந்த பேருந்தில் பயணித்த கல்லூரி மாணவிக்கு பாலியல் தொல்லை அளித்ததாக, போத்தனூர் காவல் நிலைய கு...