நடப்பாண்டில் 50-ஆயிரம் விவசாயிகளுக்கு இலவச மின்சார இணைப்பு - வேளாண்துறை அமைச்சர் எம்.ஆர்.கே பன்னீர்செல்வம்..!

திமுக ஆட்சி பொறுப்பேற்ற ஒரு வருடத்தில் ஒரு லட்சம் விவசாயிகளுக்கு இலவச மின்சாரம் வழங்கப்பட்ட நிலையில், அடுத்த வருடம் 50-ஆயிரம் விவசாயிகளுக்கு இலவச மின்சாரம் வழங்க இலக்கு நிர்ணயிக்கப்பட்டுள்ளதாக வேளாண்துறை அமைச்சர் எம்.ஆர்.கே பன்னீர்செல்வம் தெரிவித்துள்ளார்.



கோவை: கொடிசியா வளாகத்தில் அக்ரி இன்டெக்ஸ் 2022-சர்வதேச அளவிலான விவசாய கண்காட்சியை வேளாண்மை மற்றும் உழவர் நலத்துறை அமைச்சர் பன்னீர்செல்வம் மின்சாரம் மதுவிலக்கு மற்றும் ஆயத்தீர்வைத் துறை அமைச்சர் செந்தில் பாலாஜி ஆகியோர் கலந்து கொண்டு கண்காட்சியை தொடங்கி வைத்து பார்வையிட்டனர்.



இந்த நிகழ்ச்சியில், சிறப்புரையாற்றிய அமைச்சர் செந்தில் பாலாஜி, கோவையின் தொழில் முனைவோர்கள் மாவட்ட வளர்ச்சிக்கான சிறப்பான பங்காற்றி வருகின்றனர். வேளாண்மைக்கு என தனி பட்ஜெட் கொடுத்தவர் முதல்வர் ஸ்டாலின். விவசாயிகளுக்கு இலவச மின்சாரம் என்பதை துரிதமாக செயல்படுத்தி வருபவர் தமிழக முதலமைச்சர் ஸ்டாலின்.



ஒரே ஆண்டில் 1 லட்சம் விவசாயிகள் பயன் அடைந்துள்ளனர். 2 லட்சம் விவசாயிகள் பயன் பெற உள்ளனர். முதலமைச்சர் தொடங்கி வைப்பதாக இருந்தது. கொரோனாவால் வர முடியாததால் வேளாண் அமைச்சரை அனுப்பி வைத்துள்ளார் என தெரிவித்தார்.



பின்னர் உரையாற்றிய அமைச்சர் எம் ஆர் கே பன்னீர்செல்வம் வேளாண்மை திமுக ஆட்சியில் மதிக்கப்படுகிறது. வேளாண்மைக்கு என தனி பட்ஜெட் தாக்கல் செய்தவர் ஸ்டாலின் தான். கொரோனவில் மருத்துவர்களை போலவே விடாது உழைத்தவர்கள் விவசாயிகளே. விவசாயத்தை நவீன மயமாக்க வேண்டும்.



Pant அணிந்தவர்களும் விவசாயம் செய்யும் நிலை மாறியுள்ளது. ஒரு லட்சம் விவசாயிகளுக்கு 6 மாதங்களில் இலவச மின்சாரம் வழங்கி மின்சார துறை அமைச்சர் சாதனை புரிந்துள்ளார். இலவச மின்சாரத்திற்காக சுமார் பல ஆயிரம் கோடியை தமிழக வேளாண் துறை வழங்கி வருகிறது.

நீலகிரி மழை பாதிப்புகளை பார்வையிட வருவாய் துறை மற்றும் மின் துறை அமைச்சர்களை முதல்வர் நேரில் செல்ல உத்தரவிட்டுள்ளார் என தெரிவித்தார்.

செய்தியாளர்களை சந்தித்த எம் ஆர் கே பன்னீர்செல்வம், இந்த கண்காட்சியை தொடங்கி வைப்பதில் ஒரு விவசாயி ஆக மகிழ்ச்சி அடைகிறேன், விவசாயி ஆகிய எங்களை போன்றவர்களுக்கு புது தொழில்நுட்பம் மற்றும் புதிய கண்டுபிடிப்புகளை தெரிந்து கொள்ளவும் அறிந்து கொள்ளவும் இது போன்ற கண்காட்சி உதவியாக இருக்கும், தொழில் அதிபர்கள் இன்றைய தினம் வேட்டியை கட்டிக்கொண்டு இந்த நிகழ்ச்சியில் கலந்து கொண்டு உள்ளனர்.



எனவே வேளாண்மை மதிக்கப்படுகிறது, வேளாண் துறைக்கு முதல்வர் தனி பட்ஜெட் அறிவித்து உள்ளார் உழவர்களுக்கு எல்லாம் இந்த அரசாங்கத்தால் மதிக்கப்டுகிறோம் என்ற உணர்வு விவசாயிகளுக்கு ஏற்பட்டு உள்ளது, அதை மெருகூட்டும் வகையில் புதிய கருவிகள் அறிமுகப்படுத்தப்பட்டு உள்ளது நவீன தொழில்நுட்பம் போன்றவற்றை விவசாயிகள் தெரிந்து கொள்ளும் வகையில் இந்த கண்காட்சி அமைக்கப்பட்டு உள்ளது.

பாம்பு கடித்து இறப்பவர்களுக்கு மருத்துவ உதவி, இரவு நேரத்தில் மோட்டார் இயக்கம் போன்றவற்றிற்கு இழப்பீடு அரசாங்கத்தால் கொடுக்கப்படுகிறது, மோட்டார்களை வீட்டில் இருந்தே இயக்குவதற்கான கருவிகள் அறிமுகப்படுத்தப்பட்டு 10 ஆயிரம் விவசாயிகளுக்கு சோதனை முறையில் கொடுக்கப்பட்டு உள்ளது.

விவசாயிகளுக்கு எப்போதும் எல்லாமுமே போராட்டம் தான், தென்னை விவசாயிகளுக்கு நெல் புகை, வண்டு கடி மற்றும் வெள்ளை ஈக்கள் போன்றவற்றை கட்டுப்படுத்த மனித வளத்துறை மற்றும் வேளாண் பல்கலைக்கழகம் மூலம் ஆராய்ச்சி பணிகளை ஆரம்பித்து உள்ளோம், பூச்சி தாக்குதல் ஆரம்பித்த உடனே மருந்துகளை தெளிக்க ஆலோசனை கூறுகிறோம் இப்போது 15 கோடி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.

இயற்கை விவசாயம் கொண்டு வரவேண்டும் என்ற எண்ணம் மக்கள் மத்தியில் வந்து உள்ளது, அதை கொண்டு வர வேண்டும் என்பதற்காக 1 லட்சம் விவசாயிகள் மும் வந்து உள்ளனர், இயற்கை விவசாயம் செய்ய 3 ஆண்டுகள் தொடர்ச்சியாக பயன்பாட்டுக்கு வந்து மருந்துடைய தாக்கம் இல்லாமல் பயிர் வளரும், அதற்கு இயற்கை உரங்கள் மானியத்துடன் கொடுக்கப்படுகிறது, கோவையை போன்ற மாவட்ட அளவில் நடத்துகின்ற பணியை அந்தந்த மாவட்ட ஆட்சியர்கள் முன்னெடுத்து உள்ளனர்.

இந்த ஆண்டு 50 ஆயிரம் மின் இணைப்பு கொடுக்கப்படும் என சட்டமன்றத்தில் அறிவித்து உள்ளேன், ஆனால் 6 மாதத்தில் 1 லட்சம் மின் இணைப்பு என்பதை அறிவித்தது முதல்வர், ஆனால் முடியாது என்றனர், அதை முடித்து காட்டியவர் முதல்வர் என தெரிவித்தார்.



இந்த நிகழ்ச்சியில், கோவை மாவட்ட ஆட்சியர் ஜி.எஸ்.சமீரன், கோவை மாநகராட்சி ஆணையாளர் பிரதாப் கோவை மேயர் கல்பனா ஆனந்த் குமார், தமிழ்நாடு வேளாண் பல்கலைக்கழக துணைவேந்தர் கீதா லட்சுமி கொடிசியா நிர்வாகிகள் உட்பட பலர் கலந்து கொண்டனர்.



Newsletter

உலக புகையிலை ஒழிப்பு தினம்: போத்தனூர்-வெள்ளலூர் பகுதியில் காவல்துறை விழிப்புணர்வு முகாம்

உலக புகையிலை ஒழிப்பு தினத்தையொட்டி கோவை போத்தனூர் காவல் நிலையத்தின் சார்பில் வெள்ளலூர் குடியிருப்பு பகுதியில் போதைப்பொரு...

பேரூர் கோவிலில் ரூ.1.40 கோடி புதிய திருத்தேர்: பாலக்கால் பூஜையுடன் திருப்பணி தொடக்கம்

கோவை பேரூர் பட்டீஸ்வரர் கோவிலில் ரூ.1.40 கோடி மதிப்பீட்டில் புதிய திருத்தேர் அமைக்கும் திருப்பணிக்கான பாலக்கால் பூஜை நடை...

கோவையில் நெடுஞ்சாலைத்துறை வளர்ச்சி திட்டங்கள் குறித்து அமைச்சர் ஆதவ் அர்ஜுனா ஆய்வு

கோவை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் பொதுப்பணித்துறை அமைச்சர் ஆதவ் அர்ஜுனா நெடுஞ்சாலைத்துறை வளர்ச்சி திட்ட பணிகள் குறித்து...

கோவையில் சர்வதேச மாநாட்டில் சிறந்த அறிவியல் சிந்தனைகளுக்கு ரூ.1 லட்சம் பரிசு

கோவை தொழில்நுட்பக் கல்லூரியில் ஜூன் 3 முதல் 5 வரை நடைபெறும் AMCEHA 2026 சர்வதேச மாநாட்டில், சிறந்த அறிவியல் சிந்தனை மற்ற...

கோவை நேரு உள்விளையாட்டு அரங்கில் அமைச்சர் ஆதவ் அர்ஜுனா ஆய்வு

கோவையில் விளையாட்டு மற்றும் பொதுப்பணி துறை அமைச்சர் ஆதவ் அர்ஜுனா நேரு உள்விளையாட்டு அரங்கில் கபடி வீரர்களைச் சந்தித்து அ...

கோவையில் தடை செய்யப்பட்ட புகையிலை பொருட்கள் பறிமுதல்; 4 பேர் கைது

கோவை மாநகரில் தடை செய்யப்பட்ட குட்கா மற்றும் புகையிலைப் பொருட்கள் விற்பனையை தடுக்க போலீசார் நடத்திய சோதனையில், வெவ்வேறு...