கோவையில் பணம் கொடுக்கல் வாங்கல் தகராறு – இளைஞர் கத்தியால் குத்தி கொலை..!

கோவையில் பணம் கொடுக்கல் வாங்கல் தகராறில், திருமண அலங்கார நிறுவன உரிமையாளர் குத்திக்கொலை செய்யப்பட்ட சம்பவம் தொடர்பாக, குனியமுத்தூர் போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.


கோவை: கோவையில் பணம் கொடுக்கல் வாங்கல் தகராறில், திருமண அலங்கார நிறுவன உரிமையாளர் குத்திக்கொலை செய்யப்பட்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியது.

கோவை சுந்தராபுரம் சிட்கோவை சேர்ந்தவர் சந்தோஷ் குமார் (34).திருமணம் ஆகி 4 வயது மகன் உள்ளார். மேலும் சந்தோஷ் குமார் திருமண அலங்கார பணிகள் செய்யும் நிறுவனம் வைத்துள்ளார்.

இவர் கடந்த 8 மாதங்களுக்கு முன் குனியமுத்தூர் பகுதியை சேர்ந்த மணிகண்டன் என்பவரது நிறுவனத்தில் பணியாற்றி வந்தார். அப்போது மணிகண்டன் சந்தோஷ்குமாரிடம் ரூ.4 லட்சம் கடனாக வாங்கியதாகத் தெரிகிறது. அதில் ரூ.3 லட்சம் மணிகண்டன் திருப்பி செலுத்திய நிலையில், 1 லட்சம் நிலுவையில் இருந்துள்ளது.

இதுகுறித்து நேற்று மதியம் மணிகண்டன், சந்தோஷ் குமார் இருவரும் பேசிய போது வாக்குவாதம் ஏற்பட்டதாக தெரிகிறது. பிறகு 1 லட்சத்திற்கு மணிகண்டன் செக் கொடுத்துள்ளார். இந்நிலையில் நேற்று மணிகண்டனின் சகோதரர் சுதிர் (29), என்பவர் சந்தோஷை போனில் அழைத்து செக்கை கொடுத்து விட்டு பணமாக வாங்கிச்செல்லுமாறு கூறியுள்ளார்.

இதையடுத்து, சந்தோஷ் குமார் தனது நண்பர் முரளி மனோகர் என்பவருடன் குனியமுத்தூர் பி.கே.புதூர் பகுதியில் உள்ள சுதிர் வீட்டுக்குச் சென்றுள்ளார்.அப்போது சுதிர் சந்தோஷ் குமார் இடையே தகராறு ஏற்பட்டுள்ளது. சுதிருடன் இருந்த இளைய சகோதரர் ஸ்ரீ ஹரிசந்தோஷ்குமாரை பிடித்துள்ளார்.

அப்போது சுதிர் மறைத்து வைத்திருந்த கத்தியால் குத்தியுள்ளார். தடுக்கச் சென்ற முரளி மனோகர் மீது கத்தியால் குத்தியதில் காயம் ஏற்பட்டது. இதையடுத்து சுதிர், ஸ்ரீ ஹரி அங்கிருந்து தப்பிய நிலையில், படுகாயத்துடன் சரிந்து விழுந்த சந்தோஷ்குமாரை முரளி மனோகர் காரில் அழைத்துக் கொண்டு அருகே உள்ள தனியார் மருத்துவமனையில் சேர்த்தார்.

ஆனால் அவரது நிலைமை கவலைக்கிடமாக மாறியதால் மேல் சிகிச்சைக்காக கோவை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். அங்கு சிகிச்சை பலனின்றி பரிதாபமாக உயிரிழந்தார். சம்பவம் குறித்து தகவலறிந்து வந்த குனியமுத்தூர் போலீசார் விசாரணை மேற்கொண்டனர்.

இதையடுத்து, ஸ்ரீ ஹரியை போலீசார் கைது செய்தனர். மேலும் தப்பிச் சென்று தலைமறைவான சுதிரை தேடி வருகின்றனர். பண தகராறில் இளைஞரை கத்தியால் குத்தி கொலை செய்த சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

Newsletter

கோவையில் தொடங்கிய இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் மக்கள் சந்திப்பு நடைப்பயணம்

மத்திய அரசின் மக்கள் விரோதக் கொள்கைகளை எதிர்த்தும், தொழிலாளர்களுக்கு எதிராக கொண்டு வரப்பட்டுள்ள தொழிலாளர் சட்டங்களை திரு...

தங்க நகை வழிப்பறி வழக்கு: குற்றவாளிக்கு 7 ஆண்டு சிறை; ரூ.5,000 அபராதம் - கோவை நீதிமன்றம் தீர்ப்பு

கடந்த 2020 ஆம் ஆண்டு கோவையில் 100 கிராம் தங்க நகையை கத்தி முனையில் வழிப்பறி செய்த வழக்கில் குற்றம் நிரூபிக்கப்பட்ட இளைஞர...

கிணத்துக்கடவு அருகே வாலிபர் கொடூரக் கொலை

கோவை மாவட்டம் பொள்ளாச்சியை அடுத்த சிக்கலாம்பாளையம் பகுதியைச் சேர்ந்த அஸ்வின் (22) என்ற வாலிபாரின் வீட்டிற்குள் நள்ளிரவில...

அரசூர் துணை மின் நிலையத்தில் நாளை (07.08.2026) மின்தடை

கோவையில் அரசூர் துணை மின் நிலையத்தில் நாளை காலை 9 மணி முதல் மாலை 5 மணி வரை மாதாந்திர பராமரிப்பு பணிகள் நடைபெறுவதால் செல்...

கதிர்நாயக்கன்பாளையம் துணை மின் நிலையத்தில் நாளை (07.08.2026) மின்தடை

கோவை கதிர்நாயக்கன்பாளையம் துணை மின் நிலையத்தில் நாளை மாதாந்திர பராமரிப்பு பணிகள் காலை 9 முதல் மாலை 5 மணி வரை நடைபெறும்....

பேருந்தில் கல்லூரி மாணவிக்கு பாலியல் தொல்லை; கோவையில் காவலர் கைது

பொள்ளாச்சியில் இருந்து கோவை வந்த பேருந்தில் பயணித்த கல்லூரி மாணவிக்கு பாலியல் தொல்லை அளித்ததாக, போத்தனூர் காவல் நிலைய கு...