கோவை பொள்ளாச்சியில் அடிக்கடி விபத்து ஏற்படுத்தும் சேதமடைந்த ஜமீன் ஊத்துக்குளி-நல்லூர் சாலையால் வாகன ஓட்டிகள் அவதி..!

அடிக்கடி விபத்துகளை ஏற்படுத்தும் இந்த சேதமடைந்த தார் சாலையை சீரமைக்க வேண்டும் என்று பொதுமக்கள் மற்றும் வாகன ஓட்டிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.


கோவை: பொள்ளாச்சியில் அடிக்கடி விபத்து ஏற்படுத்தும் சேதமடைந்த ஜமீன் ஊத்துக்குளி-நல்லூர் சாலையால் வாகன ஓட்டிகள் அவதி அடைந்துள்ளனர்.

பொள்ளாச்சி பாலக்காடு ரோடு நல்லூர் கிராமத்தில் இருந்து, பொள்ளாச்சி மீன்கரை ரோடு ஜமீன் ஊத்துக்குளி வரையில் 2.5 கிலோமீட்டர் தூரம் பிரதான இணைப்பு சாலை உள்ளது. இந்த வழியாக அரசு பேருந்துகள் மட்டும் இன்றி, கனரக வாகன போக்குவரத்து மற்றும் பொதுமக்கள் போக்குவரத்து அதிக அளவில் உள்ளது.

இங்குள்ள தார் சாலைகள் பல ஆண்டுகளாக சீரமைக்கப்படாமல் உள்ளதால், பல இடங்களில் குழிகள் ஏற்பட்டு சாலைகள் சேதமடைந்துள்ளது. இதில் குறிப்பாக நல்லூரிலிருந்து சாலை தொடங்கும் இடத்தில் தார்ச்சாலை முற்றிலுமாக சேதமடைந்து உள்ளதால் வாகன ஓட்டிகள் கடுமையாக அவதிப்பட்டு வருகின்றனர்.



மேலும், கிருஷ்ணா குளம் அருகே உள்ள டாஸ்மாக் எதிரே உள்ள சாலையில், ஆபத்தான வளைவு பகுதியில், குழிகள் ஏற்பட்டுள்ளதால் அடிக்கடி விபத்து ஏற்பட்டு வருவதாகவும் புகார் எழுந்துள்ளது. எனவே அடிக்கடி விபத்துகளை ஏற்படுத்தும் இந்த சேதமடைந்த தார் சாலையை சீரமைக்க வேண்டும் என்று பொதுமக்கள் மற்றும் வாகன ஓட்டிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

Newsletter

உலக புகையிலை ஒழிப்பு தினம்: போத்தனூர்-வெள்ளலூர் பகுதியில் காவல்துறை விழிப்புணர்வு முகாம்

உலக புகையிலை ஒழிப்பு தினத்தையொட்டி கோவை போத்தனூர் காவல் நிலையத்தின் சார்பில் வெள்ளலூர் குடியிருப்பு பகுதியில் போதைப்பொரு...

பேரூர் கோவிலில் ரூ.1.40 கோடி புதிய திருத்தேர்: பாலக்கால் பூஜையுடன் திருப்பணி தொடக்கம்

கோவை பேரூர் பட்டீஸ்வரர் கோவிலில் ரூ.1.40 கோடி மதிப்பீட்டில் புதிய திருத்தேர் அமைக்கும் திருப்பணிக்கான பாலக்கால் பூஜை நடை...

கோவையில் நெடுஞ்சாலைத்துறை வளர்ச்சி திட்டங்கள் குறித்து அமைச்சர் ஆதவ் அர்ஜுனா ஆய்வு

கோவை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் பொதுப்பணித்துறை அமைச்சர் ஆதவ் அர்ஜுனா நெடுஞ்சாலைத்துறை வளர்ச்சி திட்ட பணிகள் குறித்து...

கோவையில் சர்வதேச மாநாட்டில் சிறந்த அறிவியல் சிந்தனைகளுக்கு ரூ.1 லட்சம் பரிசு

கோவை தொழில்நுட்பக் கல்லூரியில் ஜூன் 3 முதல் 5 வரை நடைபெறும் AMCEHA 2026 சர்வதேச மாநாட்டில், சிறந்த அறிவியல் சிந்தனை மற்ற...

கோவை நேரு உள்விளையாட்டு அரங்கில் அமைச்சர் ஆதவ் அர்ஜுனா ஆய்வு

கோவையில் விளையாட்டு மற்றும் பொதுப்பணி துறை அமைச்சர் ஆதவ் அர்ஜுனா நேரு உள்விளையாட்டு அரங்கில் கபடி வீரர்களைச் சந்தித்து அ...

கோவையில் தடை செய்யப்பட்ட புகையிலை பொருட்கள் பறிமுதல்; 4 பேர் கைது

கோவை மாநகரில் தடை செய்யப்பட்ட குட்கா மற்றும் புகையிலைப் பொருட்கள் விற்பனையை தடுக்க போலீசார் நடத்திய சோதனையில், வெவ்வேறு...