இந்து கோவில்களின் சொத்தை நிர்வகிப்பதற்கு தனி வாரியம் அமைக்க வேண்டும் - திருப்பூரில் இந்து முன்னணி மாநில தலைவர் காடேஸ்வரா சுப்பிரமணியம் பேட்டி..!

இந்து கோவில்களின் சொத்தை நிர்வகிப்பதற்கு தனி வாரியம் அமைக்க வேண்டும். அப்படி இல்லாவிட்டால் இந்து கோவில்களை அரசுடைமையாக்கியது போல் கிறிஸ்தவர்கள் மற்றும் இஸ்லாமியர்களின் ஆலயங்களையும் அரசுடைமையாக்க வேண்டும் என தெரிவித்துள்ளார்.


திருப்பூர்: இந்து கோவில்களின் சொத்தை நிர்வகிப்பதற்கு தனி வாரியம் அமைக்க வேண்டும் என திருப்பூரில் இந்து முன்னணி மாநில தலைவர் காடேஸ்வரா சுப்ரமணியம் தெரிவித்துள்ளார்.

இந்து முன்னணி சார்பில் இந்துக்களின் உரிமை மீட்க பிரச்சார பயணம் மேற்கொள்ளப்பட்டு வருகிறது. அதன்படி மாநில தலைவர் காடேஸ்வரா சுப்ரமணியம் தலைமையில் பிரச்சார பயணம் கடந்த மாதம் 28 ஆம் தேதி திருச்செந்தூரிலிருந்து தொடங்கியது.



அதனை தொடர்ந்து பல்வேறு மாவட்டங்களுக்குச் சென்று விட்டு இந்த பிரச்சார பயணம் இன்று திருப்பூர் வந்தடைந்தது.



இது குறித்து திருப்பூரில் இன்று செய்தியாளர்களிடம் பேசிய, இந்து முன்னணி மாநில தலைவர் காடேஸ்வரா சுப்ரமணியம், இந்துக்கள் உரிமை மீட்பு பிரச்சாரம் கடந்த ஜூன் 28ம் தேதி திருச்செந்தூரில் துவங்கியது. தற்போது 17 வது நாளாகத் திருப்பூர் வந்துள்ளோம்.

இங்கு இந்த பிரச்சாரம் குறித்த பொதுக்கூட்டம் நடக்கிறது. இந்துக்கள் உரிமை மீட்பு பிரச்சாரம் தொடங்கிய நாள் முதலே அனைத்து மாவட்டங்களிலும் அமோக வரவேற்பு உள்ளது. இந்துக்களுக்கு ஏற்படும் பல்வேறு பிரச்சனைகள் குறித்து பிரச்சாரம் செல்லும் இடங்களிலும் மக்கள் மனுக்கள் அளித்து வருகின்றனர்.

இந்து கோவில்களின் உரிமை மீட்கப்பட்ட வேண்டும். இந்து கோவில்களின் சொத்துக்களில் வரும் வருமானங்களை அரசு எடுத்துக் கொள்கிறது. ஆனால் கிறிஸ்தவ ஆலயங்கள் முஸ்லிம்களின் மசூதிகளில் வரும் வருமானங்களை அவர்களின் தனி அமைப்புகள் நிர்வகிக்கிறது.

எனவே இந்து கோவில்களின் சொத்தை நிர்வகிப்பதற்கு தனி வாரியம் அமைக்க வேண்டும் அப்படி இல்லாவிட்டால் இந்து கோவில்களை அரசுடைமையாக்கியது போல் கிறிஸ்தவர்கள் மற்றும் இஸ்லாமியர்களின் ஆலயங்களையும் அரசுடைமையாக்க வேண்டும். பள்ளிகளில் கிறிஸ்தவ, இஸ்லாமிய மாணவர்களுக்கு கிடைக்கும் உதவித்தொகைகள் இந்து மாணவர்களுக்கு கிடைப்பதில்லை. அரசு பள்ளிகளில் இந்து மாணவர்களின் உதவித்தொகை பறிக்கப்படுகிறது.



தமிழகத்தில் இந்து கோயில்களின் சொத்துக்கள் ஆக்கிரமிக்கப்பட்டுள்ளது. அதை மீட்க தமிழக அரசு துரித நடவடிக்கை எடுக்க வேண்டும். எந்தெந்த கோவில்களின் சொத்துக்கள் ஆக்கிரமிக்கப்பட்டுள்ளது என்ற பட்டியல் எங்களிடம் உள்ளது அதை இந்து சமய அறநிலையத்துறை அமைச்சரிடம் வழங்கவும் நாங்கள் தயாராக இருக்கிறோம். எனவே அரசு உடனடியாக இந்து கோவில்களில் ஆக்கிரமிப்பு சொத்துக்களை மீட்க வேண்டும். போலி பாஸ்போர்ட் தயாரிப்பு குறித்து உரிய விசாரணை நடத்தி குற்றவாளிகளை உடனடியாக அரசு கைது செய்ய வேண்டும்.

இந்துக்களின் உரிமை மீட்க பிரச்சார பயணத்தில் பல்வேறு இடர்பாடுகள் இடைஞ்சல்களை சந்திக்க நேர்ந்தது இருப்பினும் இந்த பயணம் வெற்றிகரமாக முடிக்கப்படும். திருப்பூர் 15 வேலம்பாளையம் பகுதியில் அனுமதியின்றி செயல்பட்டு வந்த பள்ளிவாசலை மூட நீதிமன்றம் உத்தரவிட்டது. ஆனால் அதை செயல்படுத்த அரசு அதிகாரிகள் காலதாமதம் செய்துள்ளனர்.

திருப்பூரில் நடந்த சம்பவத்தில், இஸ்லாமியர்களுக்கு ஆதரவாக காவல் துறையும் திருப்பூர் தெற்கு சட்டமன்ற உறுப்பினரும் செயல்பட்டு உள்ளனர் அவர்கள் மீது உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றார்.

Newsletter

கோவையில் தொடங்கிய இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் மக்கள் சந்திப்பு நடைப்பயணம்

மத்திய அரசின் மக்கள் விரோதக் கொள்கைகளை எதிர்த்தும், தொழிலாளர்களுக்கு எதிராக கொண்டு வரப்பட்டுள்ள தொழிலாளர் சட்டங்களை திரு...

தங்க நகை வழிப்பறி வழக்கு: குற்றவாளிக்கு 7 ஆண்டு சிறை; ரூ.5,000 அபராதம் - கோவை நீதிமன்றம் தீர்ப்பு

கடந்த 2020 ஆம் ஆண்டு கோவையில் 100 கிராம் தங்க நகையை கத்தி முனையில் வழிப்பறி செய்த வழக்கில் குற்றம் நிரூபிக்கப்பட்ட இளைஞர...

கிணத்துக்கடவு அருகே வாலிபர் கொடூரக் கொலை

கோவை மாவட்டம் பொள்ளாச்சியை அடுத்த சிக்கலாம்பாளையம் பகுதியைச் சேர்ந்த அஸ்வின் (22) என்ற வாலிபாரின் வீட்டிற்குள் நள்ளிரவில...

அரசூர் துணை மின் நிலையத்தில் நாளை (07.08.2026) மின்தடை

கோவையில் அரசூர் துணை மின் நிலையத்தில் நாளை காலை 9 மணி முதல் மாலை 5 மணி வரை மாதாந்திர பராமரிப்பு பணிகள் நடைபெறுவதால் செல்...

கதிர்நாயக்கன்பாளையம் துணை மின் நிலையத்தில் நாளை (07.08.2026) மின்தடை

கோவை கதிர்நாயக்கன்பாளையம் துணை மின் நிலையத்தில் நாளை மாதாந்திர பராமரிப்பு பணிகள் காலை 9 முதல் மாலை 5 மணி வரை நடைபெறும்....

பேருந்தில் கல்லூரி மாணவிக்கு பாலியல் தொல்லை; கோவையில் காவலர் கைது

பொள்ளாச்சியில் இருந்து கோவை வந்த பேருந்தில் பயணித்த கல்லூரி மாணவிக்கு பாலியல் தொல்லை அளித்ததாக, போத்தனூர் காவல் நிலைய கு...