கோவை பொள்ளாச்சி பகுதியில் 5-வயது சிறுமியை பாலியல் வன்புணர்வு செய்த நபர் போக்சோ சட்டத்தில் கைது..!

சிறுமியின் தாயார் அனைத்து மகளிர் காவல் நிலையத்தில் புகார் அளித்ததின் பேரில், போலீசார் விசாரணை செய்ததில் சிறுமியை பாலியல் வன்புணர்வு செய்தது உறுதி செய்யப்பட்டு, 47-வயது கூலித் தொழிலாளியை போக்சோ சட்டத்தில் கைது செய்தனர்.


கோவை: பொள்ளாச்சி பகுதியில் 5-வயது சிறுமியை பாலியல் வன்புணர்வு செய்த நபர் போக்சோ சட்டத்தில் கைது செய்யப்பட்டுள்ளார்.

பொள்ளாச்சியை அடுத்த கோட்டூர் அருகே ஒரு கிராமத்தில் 5-வயது சிறுமியின் தாய் சிறுமியை வீட்டில் விட்டுவிட்டு வேலைக்கு சென்றுள்ளார்.

மாலை அவர் வீடு திரும்பி போது அதே பகுதியைச் சேர்ந்த 47-வயது கூலித் தொழிலாளி ஒருவர் வீட்டுக்குள் இருந்து வெளியே வந்ததை கண்டுள்ளார். பின்னர், சிறுமியிடம் சென்று விசாரித்தபோது, அந்த நபர் அவரிடம் தவறாக நடந்து கொண்டதாக தெரிவித்துள்ளார்.

இதையடுத்து சிறுமியின் தாயார் அனைத்து மகளிர் காவல் நிலையத்தில் புகார் அளித்ததின் பேரில், போலீசார் விசாரணை செய்ததில் சிறுமியை பாலியல் வன்புணர்வு செய்தது உறுதி செய்யப்பட்டது.

இதையடுத்து அந்த நபர் மீது போக்சோ சட்டத்தின் கீழ் வழக்குப்பதிவு செய்த போலீசார் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி அவரை சிறையில் அடைத்தார்.

Newsletter

உலக புகையிலை ஒழிப்பு தினம்: போத்தனூர்-வெள்ளலூர் பகுதியில் காவல்துறை விழிப்புணர்வு முகாம்

உலக புகையிலை ஒழிப்பு தினத்தையொட்டி கோவை போத்தனூர் காவல் நிலையத்தின் சார்பில் வெள்ளலூர் குடியிருப்பு பகுதியில் போதைப்பொரு...

பேரூர் கோவிலில் ரூ.1.40 கோடி புதிய திருத்தேர்: பாலக்கால் பூஜையுடன் திருப்பணி தொடக்கம்

கோவை பேரூர் பட்டீஸ்வரர் கோவிலில் ரூ.1.40 கோடி மதிப்பீட்டில் புதிய திருத்தேர் அமைக்கும் திருப்பணிக்கான பாலக்கால் பூஜை நடை...

கோவையில் நெடுஞ்சாலைத்துறை வளர்ச்சி திட்டங்கள் குறித்து அமைச்சர் ஆதவ் அர்ஜுனா ஆய்வு

கோவை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் பொதுப்பணித்துறை அமைச்சர் ஆதவ் அர்ஜுனா நெடுஞ்சாலைத்துறை வளர்ச்சி திட்ட பணிகள் குறித்து...

கோவையில் சர்வதேச மாநாட்டில் சிறந்த அறிவியல் சிந்தனைகளுக்கு ரூ.1 லட்சம் பரிசு

கோவை தொழில்நுட்பக் கல்லூரியில் ஜூன் 3 முதல் 5 வரை நடைபெறும் AMCEHA 2026 சர்வதேச மாநாட்டில், சிறந்த அறிவியல் சிந்தனை மற்ற...

கோவை நேரு உள்விளையாட்டு அரங்கில் அமைச்சர் ஆதவ் அர்ஜுனா ஆய்வு

கோவையில் விளையாட்டு மற்றும் பொதுப்பணி துறை அமைச்சர் ஆதவ் அர்ஜுனா நேரு உள்விளையாட்டு அரங்கில் கபடி வீரர்களைச் சந்தித்து அ...

கோவையில் தடை செய்யப்பட்ட புகையிலை பொருட்கள் பறிமுதல்; 4 பேர் கைது

கோவை மாநகரில் தடை செய்யப்பட்ட குட்கா மற்றும் புகையிலைப் பொருட்கள் விற்பனையை தடுக்க போலீசார் நடத்திய சோதனையில், வெவ்வேறு...