மாநில அரசு திட்டங்களை சரிவர செய்வது இல்லை என குற்றச்சாட்டு உள்ளது - கோவையில் மத்திய நிதித்துறை இணை அமைச்சர் பகவத் கிஷன் ராவ் பேட்டி..!

மத்திய அரசு பல்வேறு மக்கள் நலத் திட்டங்களுக்கு நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டும் மாநில அரசு திட்டங்களை சரிவரச் செய்வது இல்லை என குற்றச்சாட்டு உள்ளது என மத்திய நிதித்துறை இணை அமைச்சர் பகவத் கிஷன் ராவ் தெரிவித்துள்ளார்.



கோவை: மத்திய அரசு அமல்படுத்தியுள்ள பல்வேறு மக்கள் நலத் திட்டங்களின் செயல்பாடுகள் குறித்து கோவை மாவட்டத்தில் ஆய்வு மேற்கொள்வதற்காக மத்திய நிதித்துறை இணை அமைச்சர் பகவத் கிஷன் ராவ் கோவை வந்துள்ளார்.

முன்னதாக, கோவையில் உள்ள தனியார் ஹோட்டலில் பாரதிய ஜனதா கட்சி நிர்வாகிகள் ஆலோசனை கூட்டம் மத்திய இணை அமைச்சர் தலைமையில் நடைபெற்றது.

இக்கூட்டத்தில் மத்திய அரசின் எட்டு ஆண்டுகால சாதனைகள் குறித்து எடுத்துரைக்கப்பட்டது. மேலும், கோவை மாவட்டத்தில் மத்திய அரசு திட்டங்கள் செயல்படுத்தப்படும் முறை குறித்து கட்சி நிர்வாகிகளிடம் கேட்டறிந்தார்.



இதனைத் தொடர்ந்து செய்தியாளர்களை சந்தித்த அவர், நரேந்திர மோடி பிரதமராக பதவியேற்று எட்டு ஆண்டுகளை நிறைவு செய்துள்ளார் எனவும், இந்த எட்டு ஆண்டுகளில் நாட்டின் வளர்ச்சியில் பல்வேறு மாற்றங்கள் ஏற்பட்டுள்ளது எனவும் தெரிவித்தார்.

சமூகத்தின் பல்வேறு பிரிவினரும் பயன்பெறும் வகையில் ஏராளமான வளர்ச்சித் திட்டங்கள் செயல்படுத்தப்பட்டு வருவதாகவும் தெரிவித்தார். எரிவாயு இணைப்பு இல்லாத ஏழை மக்களுக்காகக் கொண்டுவரப்பட்ட மத்திய அரசின் உஜ்வாலா திட்டத்தின் மூலம் நாட்டில் 9-கோடி குடும்பங்கள் பயன் அடைந்துள்ளனர் என கூறினார்.

விவசாயிகளுக்கான பிரதம மந்திரியின் நிதி உதவி திட்டத்தில் சுமார் 11-கோடியே 50-லட்சம் விவசாயிகளுக்கு ஆண்டுதோறும் 6-ஆயிரம் ரூபாய் நிதி உதவி பெற்று பயனடைந்து வருவதாகவும் தெரிவித்தார். பிரதம மந்திரியின் கரிப் கல்யாண் திட்டத்தின் மூலம் கடந்த 15-மாதங்களாக நாட்டில் வறுமைக் கோட்டுக்குக் கீழ் உள்ள மக்கள் கோதுமை, அரிசி மற்றும் பருப்பு ஆகியவற்றை இலவசமாக பெற்று வருகின்றனர் என கூறினார்.

மேலும், புதிய தொழில் தொடங்குபவர்களை ஊக்குவிக்கும் வகையில் எட்டு வருடங்களுக்கு முன் தொடங்கப்பட்ட முத்ரா கடன் திட்டத்தின் மூலம் பிணையில்லா கடன் வழங்கப்பட்டு பலர் தொழில் தொடங்கி முன்னேறி வருவதாக தெரிவித்தார்.

குறிப்பாகத் தெருவோரங்களில் கடை வைத்திருப்பவர்களும் வியாபாரிகளும் பிணை கொடுக்க முடியாத சூழலில் உள்ளவர்கள் என தெரிவித்த அவர், இவர்களுக்கான பிரதம மந்திரி சுய நிதி திட்டத்தின் மூலம் லட்சக்கணக்கானோர் பயனடைந்து உள்ளதாகக் கூறினார்.

மேலும் நாட்டின் 75 வது சுதந்திர பொன்விழா ஆண்டை கொண்டாடும் வேளையில் இன்றும் தண்ணீர் இணைப்பு இல்லாத நகர மற்றும் ஊரக பகுதிகள் உள்ளதாகவும், இதற்காக, பாரத பிரதமரின் ஜல்ஜீவன் திட்டத்தின் கீழ் அனைத்து பகுதிகளில் உள்ள வீடுகளிலும் குடிநீர் இணைப்பு வழங்கப்பட்டு அனைவருக்கும் குடிநீர் கிடைப்பது உறுதி செய்யப்பட்டு வருவதாகவும் தெரிவித்தார்.

இது போன்ற மத்திய அரசின் பல்வேறு நலத்திட்டங்கள் எவ்வாறு மாவட்டத்தில் செயல்படுத்தப்பட்டு வருகிறது என்பது குறித்து பாஜக நிர்வாகிகளுடன் ஆலோசனை கூட்டம் நடத்தப்பட்டதாகவும் தெரிவித்தார். இன்று நடந்த கூட்டத்தில் கோவை மாநகரில் உள்ள சாலை பிரச்சனை, திடக்கழிவு மேலாண்மை, பாதாள சாக்கடை திட்டப் பணிகளில் உள்ள கோளாறுகள் குறித்து எடுத்துரைக்கப்பட்டதாகவும் சொத்து வரி உயர்த்தப்பட்டது குறித்தும் கூறப்பட்டது என தெரிவித்தார்.

விமான நிலைய விரிவாக்கம் என்பது இந்த நகருக்கு மிகவும் தேவையானது எனவும் இதில் ஒரு சில விஷயங்கள் மத்திய அரசையும் மாநில அரசையும் சார்ந்துள்ளது எனவும் இருவரும் இணைந்து செயல்பட வேண்டும் என தெரிவித்தார்.

மத்திய அரசு நேரடியாக மக்களைச் சந்தித்து வழங்க வேண்டிய நலத்திட்டங்களையும் வழங்கி வருவதாகவும் ஒரு சிலவற்றை மாநில அரசின் மூலமாகவும் வழங்கி வருவதாகவும் கூறினார். மேலும் அனைத்து நலத்திட்டங்களும் மக்களை சென்றடைய வேண்டும் என்பது மத்திய அரசின் எண்ணம் என கூறினார்.

பெட்ரோல் டீசல் விலையில் ஏற்கனவே மத்திய அரசால் இருமுறை வரிகள் குறைக்கப்பட்டுள்ளது எனவும் மத்திய அரசு வாட் வரியை குறைத்தது ஆனால் மாநில அரசுகள் குறைக்க வில்லை என தெரிவித்தார். மத்திய அரசு பல்வேறு மக்கள் நலத் திட்டங்களுக்கு நிதி ஒதுக்கீடு செய்யபட்டும் மாநில அரசுத் திட்டங்களை சரிவரச் செய்வது இல்லை என குற்றச்சாட்டு உள்ளதாகவும் கூறினார்.

எனவே, இது குறித்து ஆய்வு செய்வதற்காக மாவட்ட அதிகாரிகள், உள்ளாட்சி பிரதிநிதிகள் மற்றும் திட்டத்தின் பயனாளிகளை நேரடியாக சந்தித்து கருத்துக்கள் பெறப்பட உள்ளதாகவும் அதனடிப்படையில் உரிய நடவடிக்கை திட்டமிடப்படும் என தெரிவித்தார்.



இந்நிகழ்வில் பாஜக கோவை மாவட்ட தலைவர் பாலாஜி உத்தமன், மூத்த நிர்வாகி கனகசபாபதி உட்பட கோவை மாவட்ட பாஜக நிர்வாகிகள் உடனிருந்தனர்.

Newsletter

உலக புகையிலை ஒழிப்பு தினம்: போத்தனூர்-வெள்ளலூர் பகுதியில் காவல்துறை விழிப்புணர்வு முகாம்

உலக புகையிலை ஒழிப்பு தினத்தையொட்டி கோவை போத்தனூர் காவல் நிலையத்தின் சார்பில் வெள்ளலூர் குடியிருப்பு பகுதியில் போதைப்பொரு...

பேரூர் கோவிலில் ரூ.1.40 கோடி புதிய திருத்தேர்: பாலக்கால் பூஜையுடன் திருப்பணி தொடக்கம்

கோவை பேரூர் பட்டீஸ்வரர் கோவிலில் ரூ.1.40 கோடி மதிப்பீட்டில் புதிய திருத்தேர் அமைக்கும் திருப்பணிக்கான பாலக்கால் பூஜை நடை...

கோவையில் நெடுஞ்சாலைத்துறை வளர்ச்சி திட்டங்கள் குறித்து அமைச்சர் ஆதவ் அர்ஜுனா ஆய்வு

கோவை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் பொதுப்பணித்துறை அமைச்சர் ஆதவ் அர்ஜுனா நெடுஞ்சாலைத்துறை வளர்ச்சி திட்ட பணிகள் குறித்து...

கோவையில் சர்வதேச மாநாட்டில் சிறந்த அறிவியல் சிந்தனைகளுக்கு ரூ.1 லட்சம் பரிசு

கோவை தொழில்நுட்பக் கல்லூரியில் ஜூன் 3 முதல் 5 வரை நடைபெறும் AMCEHA 2026 சர்வதேச மாநாட்டில், சிறந்த அறிவியல் சிந்தனை மற்ற...

கோவை நேரு உள்விளையாட்டு அரங்கில் அமைச்சர் ஆதவ் அர்ஜுனா ஆய்வு

கோவையில் விளையாட்டு மற்றும் பொதுப்பணி துறை அமைச்சர் ஆதவ் அர்ஜுனா நேரு உள்விளையாட்டு அரங்கில் கபடி வீரர்களைச் சந்தித்து அ...

கோவையில் தடை செய்யப்பட்ட புகையிலை பொருட்கள் பறிமுதல்; 4 பேர் கைது

கோவை மாநகரில் தடை செய்யப்பட்ட குட்கா மற்றும் புகையிலைப் பொருட்கள் விற்பனையை தடுக்க போலீசார் நடத்திய சோதனையில், வெவ்வேறு...