சித்திரைச்சாவடி அணையில் வழிந்தோடும் நீர், சிறுவாணி நீர் பிடிப்பு பகுதிகளில் பெய்து வரும் கனமழையால் நொய்யலாற்றில் வெள்ளப்பெருக்கு..!

மேற்கு தொடர்ச்சி மலை மற்றும் சிறுவாணி நீர் பிடிப்பு பகுதிகளில் கனமழை பொழிந்து வருகிறது. இதனால், நொய்யல் ஆற்றில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளது. நொய்யல் ஆற்றின் தடுப்பணைகளில் ஒன்றான சித்திரைச்சாவடி அணையில் ஓராண்டுக்குப் பின் தண்ணீர் ஆர்ப்பரித்து ஓடுகின்றன.



கோவை: சித்திரை சாவடி அணையில் வழிந்தோடும் நீர், சிறுவாணி நீர் பிடிப்பு பகுதிகளில் பெய்து வரும் கனமழையால் நொய்யலாற்றில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளது.



கேரளாவில் தென்மேற்கு பருவமழை தீவிரமடைந்துள்ளது. இந்நிலையில் கேரள - தமிழகத்தில் பல்வேறு மாவட்டங்களில் கனமழை பெய்து வருகிறது.

மேற்குத் தொடர்ச்சி மலைப் பகுதியை ஒட்டிய நீலகிரி, கோவை, திருப்பூர், தேனி உள்ளிட்ட பல்வேறு மாவட்டங்களில் அதீத மழை பெய்யும் என வானிலை ஆய்வு நடுவம் தெரிவித்துள்ள நிலையில் கடந்த சில தினங்களாக மழை பொழிவு என்பது அதிகரித்துள்ளது.

இந்நிலையில், கோவை மாவட்டம் வால்பாறை பகுதியில் பெய்துவரும் கனமழை காரணமாக பள்ளி கல்லூரிகளுக்கு விடுமுறை அளித்து மாவட்ட நிர்வாகம் உத்தரவிட்டுள்ளது. மேலும், மேற்குத் தொடர்ச்சி மலை மற்றும் சிறுவாணி நீர் பிடிப்பு பகுதிகளில் கனமழை பொழிந்து வருகிறது.

இதனால், நொய்யல் ஆற்றில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளது.



நொய்யல் ஆற்றின் தடுப்பணைகளில் ஒன்றான சித்திரைச்சாவடி அணையில் ஓராண்டுக்குப் பின் தண்ணீர் ஆர்ப்பரித்து ஓடுகின்றன. இதனால் விவசாயிகள் பொதுமக்கள் தண்ணீர் பஞ்சம் இருக்காது என மகிழ்ச்சி அடைந்திருக்கின்றனர்.



புறநகர் மட்டுமின்றி அனைவருக்கும் இந்த வெள்ளப்பெருக்கு பேருதவியாக இருக்கும் என்கின்றனர். குறிப்பாக நிலத்தடி நீர்மட்டம் உயர்வு கிணற்றில் தண்ணீர் ஊற்று உள்ளிட்டவற்றால் பொதுமக்களின் குடிநீர் தேவையும் விவசாய பாசனத்திற்கான தண்ணீரும் தட்டுப்பாடுகள் இன்றி கிடைக்கும் என பொதுமக்கள் நம்புகின்றனர்.

கோவையில், உள்ள குளங்கள் மற்றும் ஏரிகள் இந்த ஆற்றின் வெள்ளப்பெருக்கால் நிரம்ப ஆரம்பித்திருக்கின்றன. ஒருபுறம் மழையால் மக்கள் மகிழ்ச்சியாக இருந்தாலும் இயற்கை ஒரு எச்சரிக்கை அடித்திருக்கிறது.

நெகிழிக் குப்பைகளை சுற்றுலாப் பயணிகள் சிறுவாணி பகுதியில் தூக்கி எறிந்து வந்த நிலையில் அவை அனைத்தும் ஒரு சேர்ந்து சித்திரைச்சாவடி அணையில் ஒதுங்கி இருக்கின்றன. இது போன்று தொடர்ந்து நெகிழிக் குப்பைகள் வீசப்பட்டால் அது மனிதர்களுக்கு முரணானது என்பதனை அது சொல்லாமல் சொல்லி இருக்கின்றது.

எனவே, பொதுமக்கள் பொறுப்புடன் நடந்து கொள்ளத் தேவையும் ஏற்பட்டிருக்கும் நிலையில் கரையோரப் பகுதிகளில் ஆழமான பகுதிகளில் பொதுமக்கள் செல்ல கூடாது என அதிகாரிகள் பொதுமக்கள் கிராமவாசிகளை வாய்மொழில் உத்தரவிலே பிறப்பித்திருக்கின்றனர்.

Newsletter

கோவையில் தொடங்கிய இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் மக்கள் சந்திப்பு நடைப்பயணம்

மத்திய அரசின் மக்கள் விரோதக் கொள்கைகளை எதிர்த்தும், தொழிலாளர்களுக்கு எதிராக கொண்டு வரப்பட்டுள்ள தொழிலாளர் சட்டங்களை திரு...

தங்க நகை வழிப்பறி வழக்கு: குற்றவாளிக்கு 7 ஆண்டு சிறை; ரூ.5,000 அபராதம் - கோவை நீதிமன்றம் தீர்ப்பு

கடந்த 2020 ஆம் ஆண்டு கோவையில் 100 கிராம் தங்க நகையை கத்தி முனையில் வழிப்பறி செய்த வழக்கில் குற்றம் நிரூபிக்கப்பட்ட இளைஞர...

கிணத்துக்கடவு அருகே வாலிபர் கொடூரக் கொலை

கோவை மாவட்டம் பொள்ளாச்சியை அடுத்த சிக்கலாம்பாளையம் பகுதியைச் சேர்ந்த அஸ்வின் (22) என்ற வாலிபாரின் வீட்டிற்குள் நள்ளிரவில...

அரசூர் துணை மின் நிலையத்தில் நாளை (07.08.2026) மின்தடை

கோவையில் அரசூர் துணை மின் நிலையத்தில் நாளை காலை 9 மணி முதல் மாலை 5 மணி வரை மாதாந்திர பராமரிப்பு பணிகள் நடைபெறுவதால் செல்...

கதிர்நாயக்கன்பாளையம் துணை மின் நிலையத்தில் நாளை (07.08.2026) மின்தடை

கோவை கதிர்நாயக்கன்பாளையம் துணை மின் நிலையத்தில் நாளை மாதாந்திர பராமரிப்பு பணிகள் காலை 9 முதல் மாலை 5 மணி வரை நடைபெறும்....

பேருந்தில் கல்லூரி மாணவிக்கு பாலியல் தொல்லை; கோவையில் காவலர் கைது

பொள்ளாச்சியில் இருந்து கோவை வந்த பேருந்தில் பயணித்த கல்லூரி மாணவிக்கு பாலியல் தொல்லை அளித்ததாக, போத்தனூர் காவல் நிலைய கு...