கேரள மாநிலம் அட்டப்பாடி பகுதியில் சாலை வசதி இல்லாததால் குழந்தையின் சடலத்தை தூக்கி கொண்டு வனப்பகுதியில் வந்த தந்தையின் வீடியோ வைரல்..!

அரசு மருத்துவமனையில் இருந்து ஆம்புலன்ஸ் மூலம் சொந்த ஊருக்கு வந்தவர்கள். 4-கிலோ மீட்டர் தொலைவில் உள்ள அவர்களது கிராமத்திற்கு செல்ல சாலை வசதி இல்லாததால் குழந்தையின் சடலத்தை கையில் ஏந்தியபடி வனப்பகுதி வழியாகவும் தொங்கு பாலம் வழியாகவும் கிராமத்தை சென்றடைந்த தந்தையின் வீடியோ வைரலாகி வருகிறது.


கோவை: சாலை வசதி இல்லாததால் குழந்தையின் சடலத்தை தூக்கி கொண்டு வனப்பகுதியில் வந்த தந்தையின் வீடியோ வைரலாகி வருகிறது.

கோவை மாவட்டம் ஆனைகட்டி அடுத்த கேரள மாநிலம் அட்டப்பாடி பகுதி முருகலா பழங்குடியின கிராமத்தை சேர்ந்தவர்கள் ஐயப்பன், சரஸ்வதி தம்பதியினர். இவர்களுக்கு பிறந்து நான்கு மாதங்களே ஆன சஜேஸ்வரி என்ற பெண் குழந்தைக்கு உடல் நலக்குறைவு ஏற்பட்டு பாலக்காடு அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதித்துள்ளனர்.

அங்கு சிகிச்சை பலனின்றி குழந்தை உயிரிழந்ததையடுத்து பிரேத பரிசோதனைக்கு பின்னர் தம்பதியினரிடம் குழந்தையை ஒப்படைத்துள்ளனர்.



பாலக்காடு அரசு மருத்துவமனையில் ஆம்புலன்ஸ் மூலம் அவர்கள் சொந்த ஊருக்கு வந்துள்ளனர்.



அப்போது தாடிக்கொண்டு என்ற பகுதி வரை மட்டுமே சாலை வசதி இருந்ததால் அங்கிருந்து 4 கிலோ மீட்டர் தொலைவில் உள்ள அவர்களது கிராமத்திற்குக் குழந்தையின் சடலத்தை கையில் ஏந்தியபடி ஐயப்பன் வனப்பகுதி வழியாகவும் தொங்கு பாலம் வழியாகவும் கிராமத்தை சென்றடைந்துள்ளார்.



அந்த காட்சிகளை அவருடன் வந்த சிலர் வீடியோவாக எடுத்து சமூக வலைத்தளங்களில் பதிவிட்டுள்ளனர். தற்போது அந்த காட்சிகள் வைரலாகி வருகிறது.

Newsletter

கோவையில் தொடங்கிய இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் மக்கள் சந்திப்பு நடைப்பயணம்

மத்திய அரசின் மக்கள் விரோதக் கொள்கைகளை எதிர்த்தும், தொழிலாளர்களுக்கு எதிராக கொண்டு வரப்பட்டுள்ள தொழிலாளர் சட்டங்களை திரு...

தங்க நகை வழிப்பறி வழக்கு: குற்றவாளிக்கு 7 ஆண்டு சிறை; ரூ.5,000 அபராதம் - கோவை நீதிமன்றம் தீர்ப்பு

கடந்த 2020 ஆம் ஆண்டு கோவையில் 100 கிராம் தங்க நகையை கத்தி முனையில் வழிப்பறி செய்த வழக்கில் குற்றம் நிரூபிக்கப்பட்ட இளைஞர...

கிணத்துக்கடவு அருகே வாலிபர் கொடூரக் கொலை

கோவை மாவட்டம் பொள்ளாச்சியை அடுத்த சிக்கலாம்பாளையம் பகுதியைச் சேர்ந்த அஸ்வின் (22) என்ற வாலிபாரின் வீட்டிற்குள் நள்ளிரவில...

அரசூர் துணை மின் நிலையத்தில் நாளை (07.08.2026) மின்தடை

கோவையில் அரசூர் துணை மின் நிலையத்தில் நாளை காலை 9 மணி முதல் மாலை 5 மணி வரை மாதாந்திர பராமரிப்பு பணிகள் நடைபெறுவதால் செல்...

கதிர்நாயக்கன்பாளையம் துணை மின் நிலையத்தில் நாளை (07.08.2026) மின்தடை

கோவை கதிர்நாயக்கன்பாளையம் துணை மின் நிலையத்தில் நாளை மாதாந்திர பராமரிப்பு பணிகள் காலை 9 முதல் மாலை 5 மணி வரை நடைபெறும்....

பேருந்தில் கல்லூரி மாணவிக்கு பாலியல் தொல்லை; கோவையில் காவலர் கைது

பொள்ளாச்சியில் இருந்து கோவை வந்த பேருந்தில் பயணித்த கல்லூரி மாணவிக்கு பாலியல் தொல்லை அளித்ததாக, போத்தனூர் காவல் நிலைய கு...