கோவை தமிழ்நாடு வேளாண்மை‌ பல்கலைக்கழகத்தில்‌ வணிக முறையிலான காய்கறி மற்றும்‌ பழப்பொருட்கள்‌ தயாரிக்கும்‌ பயிற்சி..!

தமிழ்நாடு வேளாண்மைப்‌ பல்கலைக்கழகத்தில்‌ “வணிகமுறையிலான காய்கறி மற்றும்‌ பழப்பொருட்கள்‌ தயாரித்தல்‌” பயிற்சி 19.07.2022 மற்றும்‌ 20.07.2022 ஆகிய இரண்டு நாட்களில்‌ காலை 9.30 மணி முதல்‌ மாலை 4.00 மணி வரை நடைபெறும்‌.


கோவை: கோவை தமிழ்நாடு வேளாண்மை‌ பல்கலைக்கழகத்தில்‌ வணிக முறையிலான காய்கறி மற்றும்‌ பழப்பொருட்கள்‌ தயாரிக்கும்‌ பயிற்சி அளிக்கப்படுகிறது.

கோவை, தமிழ்நாடு வேளாண்மைப்‌ பல்கலைக்கழகத்தில்‌ “வணிகமுறையிலான காய்கறி மற்றும்‌ பழப்பொருட்கள்‌ தயாரித்தல்‌” பயிற்சி 19.07.2022 மற்றும்‌ 20.07.2022 ஆகிய இரண்டு நாட்களில்‌ காலை 9.30 மணி முதல்‌ மாலை 4.00 மணி வரை நடைபெறும்‌.

கீழ்கண்ட உணவு பொருட்களை தயாரிப்பதற்கு பயிற்சி வழங்கப்படும்‌.

அவையாவன:-

* உலர வைக்கப்பட்ட காய்கறிகள்‌ மற்றும்‌ பழங்கள்‌ (Dehydrated vegetables and fruits)

* ஊறுகாய்‌ (Pickles)

* ஊறுகனி (Candy‌)

* பலவகை பழ ஜாம்‌ (Mixed Fruit jam)

* பழப்பார்‌ (Fruit bar)

* பழரசம்‌ (Squash)

* பழ மிட்டாய்‌ (Fruit toffee)

* தயார்‌ நிலைபானம்‌ (Ready - to - serve beverage)

ஆர்வமுள்ளவர்கள்‌ ரூ.1,770 (ரூ.1500 +GST 18% ) - பயிற்சி முதல்‌ நாளன்று செலுத்த வேண்டும்‌.

பயிற்சி நடைபெறும்‌ இடம்:-‌ அறுவடை பின்சார்‌ தொழில்நுட்ப மையம்‌,

வேளாண்‌ பொறியியல்‌ கல்லூரி மற்றும்‌ ஆராய்ச்சி நிலையம்‌,

தமிழ்நாடு வேளாண்மைப்‌ பல்கலைக்கழகம்‌,

கோயம்புத்தூர்‌ - 641 003.

பேருந்து நிறுத்தம்‌ வாயில்‌ எண்‌.7, தமிழ்நாடு வேளாண்மை பல்கலைக்கழகம்‌, மருதமலை

சாலை வழியாக, கோயம்புத்தூர்‌-641003.

மேலும்,‌ விபரங்களுக்கு தொடர்பு கொள்ள வேண்டிய முகவரி:

பேராசிரியர்‌ மற்றும்‌ தலைவர்‌,

அறுவடை பின்சார்‌ தொழில்நுட்ப மையம்,

வேளாண்மைப்‌ பொறியியல்‌ கல்லூரி மற்றும்‌ ஆராய்ச்சி நிலையம்‌,

தமிழ்நாடு வேளாண்மைப்‌ பல்கலைக்கழகம்‌,

கோயமுத்தூர்‌

தொலைபேசி எண்‌ 0422-6611268.

Newsletter

உலக புகையிலை ஒழிப்பு தினம்: போத்தனூர்-வெள்ளலூர் பகுதியில் காவல்துறை விழிப்புணர்வு முகாம்

உலக புகையிலை ஒழிப்பு தினத்தையொட்டி கோவை போத்தனூர் காவல் நிலையத்தின் சார்பில் வெள்ளலூர் குடியிருப்பு பகுதியில் போதைப்பொரு...

பேரூர் கோவிலில் ரூ.1.40 கோடி புதிய திருத்தேர்: பாலக்கால் பூஜையுடன் திருப்பணி தொடக்கம்

கோவை பேரூர் பட்டீஸ்வரர் கோவிலில் ரூ.1.40 கோடி மதிப்பீட்டில் புதிய திருத்தேர் அமைக்கும் திருப்பணிக்கான பாலக்கால் பூஜை நடை...

கோவையில் நெடுஞ்சாலைத்துறை வளர்ச்சி திட்டங்கள் குறித்து அமைச்சர் ஆதவ் அர்ஜுனா ஆய்வு

கோவை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் பொதுப்பணித்துறை அமைச்சர் ஆதவ் அர்ஜுனா நெடுஞ்சாலைத்துறை வளர்ச்சி திட்ட பணிகள் குறித்து...

கோவையில் சர்வதேச மாநாட்டில் சிறந்த அறிவியல் சிந்தனைகளுக்கு ரூ.1 லட்சம் பரிசு

கோவை தொழில்நுட்பக் கல்லூரியில் ஜூன் 3 முதல் 5 வரை நடைபெறும் AMCEHA 2026 சர்வதேச மாநாட்டில், சிறந்த அறிவியல் சிந்தனை மற்ற...

கோவை நேரு உள்விளையாட்டு அரங்கில் அமைச்சர் ஆதவ் அர்ஜுனா ஆய்வு

கோவையில் விளையாட்டு மற்றும் பொதுப்பணி துறை அமைச்சர் ஆதவ் அர்ஜுனா நேரு உள்விளையாட்டு அரங்கில் கபடி வீரர்களைச் சந்தித்து அ...

கோவையில் தடை செய்யப்பட்ட புகையிலை பொருட்கள் பறிமுதல்; 4 பேர் கைது

கோவை மாநகரில் தடை செய்யப்பட்ட குட்கா மற்றும் புகையிலைப் பொருட்கள் விற்பனையை தடுக்க போலீசார் நடத்திய சோதனையில், வெவ்வேறு...