தோட்ட தொழிலாளர்கள் மழையின் காரணமாக தேயிலை தோட்டத்தில் வேலை செய்ய முடியாத காரணத்தால் பகுதி நேர விடுமுறை அளிக்க நிர்வாகத்திடம் விடுத்த கோரிக்கையை, எஸ்டேட் நிர்வாகம் மறுத்ததால் சுமார் 50-க்கும் மேற்பட்டவர்கள் முற்றுகையிட்டனர்.
கோவை: கோவை வால்பாறையில் தேயிலை தோட்டத்தில் வேலை செய்யும் தொழிலாளர்கள் தொழிலாளர் நல அலுவலகத்தை முற்றுகையிட்டனர்.
கோவை மாவட்டம் வால்பாறை எஸ்டேட் பகுதிகளில் கனமழை பெய்து வருகிறது. தேயிலைத் தோட்டத்தில் வேலை செய்யும் தொழிலாளர்கள் காலை 8-மணி முதல் மாலை 5-மணி வரை தேயிலைத் தோட்டத்தில் தேயிலை பறிக்கும்பணியில் ஈடுபட்டு வருகிறார்கள்.
அதிக மழை பெய்வதால் எஸ்டேட் நிர்வாகம்தொழிலாளர்களுக்கு விடுமுறையோ அல்லது பகுதி நேர விடுமுறையோ அளிக்கலாம். ஆனால்,அக்காமலை எஸ்டேட் தேயிலைத் தோட்டம் தொழிலாளர்கள் மழையின் காரணமாக தேயிலைத் தோட்டத்தில் வேலை செய்ய முடியாத காரணத்தால் பகுதி நேர விடுமுறை அளிக்க நிர்வாகத்திடம் கேட்டுள்ளனர்.
எஸ்டேட் நிர்வாகம் மறுத்ததால் சுமார் 50-க்கும் மேற்பட்டவர்கள் வால்பாறையில் உள்ள தொழிலாளர் நலத்துறை அலுவலகத்தை முற்றுகையிட்டனர். வட்டாட்சியர் தலைமையில், நகர மன்ற தலைவர் அழகு சுந்தர வள்ளி, 12- வார்டு உறுப்பினர் அன்பரசன் ஆகியோர்கள்எஸ்டேட் நிர்வாகத்திடம் பேசி 3-மணி அளவில் விடுமுறை அளிக்க சம்மதம் தெரிவித்துள்ளனர்.