கோவை பூ மார்க்கெட்டில் மாநகராட்சி ஆணையாளர் திடீர் ஆய்வு - நமக்கு நாமே திட்ட மதிப்பீட்டு பணிகளை தீவிரப்படுத்த உத்தரவு..!

கோவை மாநகராட்சி மேற்கு மண்டலம், 72-வது வார்டுக்குட்பட்ட பூ மார்க்கெட் அருகே உள்ள பழைய பூ மார்க்கெட் பகுதிக்கு கோவை மாநகராட்சி ஆணையாளர் மு.பிரதாப், நேரில் பார்வையிட்டு ஆய்வு செய்தார்.


கோவை: கோவை பூ மார்க்கெட்டில் மாநகராட்சி ஆணையாளர் திடீர் ஆய்வு மேற்கொண்டு, நமக்கு நாமே திட்ட மதிப்பீட்டு பணிகளை தீவிரப்படுத்த உத்தரவிட்டார்.

கோவை மாநகராட்சி மேற்கு மண்டலம், 72-வது வார்டுக்குட்பட்ட பூ மார்க்கெட் அருகே உள்ள பழைய பூ மார்க்கெட் பகுதிக்கு கோவைமாநகராட்சி ஆணையாளர் மு.பிரதாப், நேரில் பார்வையிட்டு ஆய்வு செய்தார்.



அப்போது பழைய பூ மார்க்கெட்டில் உள்ள 140-மேடை கடைகள், புதிதாக மழைநீர் வடிகால் அமைத்தல், புதிய மின் விளக்குகள் அமைத்தல் மற்றும் கழிவறைகள் அமைத்தல் உள்ளிட்ட பணிகளை, நமக்கு நாமே திட்டத்தின் கீழ் மேற்கொள்ள உரிய திட்ட மதிப்பீடு தயாரித்து பணிகளை விரைவாக மேற்கொள்ள வேண்டும் என்பது குறித்து சம்பந்தப்பட்ட மாநகராட்சி பொறியாளருக்கு உத்தரவிட்டார்.



இந்த ஆய்வின் போது மேற்கு மண்டல தலைவர் கே.ஏ.தெய்வயானை தமிழ்மறை, மாமன்ற உறுப்பினர் கார்த்திக் செல்வராஜ், மேற்கு மண்டல உதவி ஆணையாளர் சரவணன், உதவி செயற்பொறியாளர் ஹேமலதா, உதவி நகரமைப்பு அலுவலர் கலாவதி உதவி பொறியாளர் கமலக்கண்ணன், மண்டல சுகாதார அலுவலர் பரமசிவம், சுகாதார ஆய்வாளர் சலேத் மற்றும் மாநகராட்சி அலுவலர்கள், பூ மார்க்கெட் வியாபார சங்கத்தினர் ஆகியோர் இருந்தனர்.

Newsletter

உலக புகையிலை ஒழிப்பு தினம்: போத்தனூர்-வெள்ளலூர் பகுதியில் காவல்துறை விழிப்புணர்வு முகாம்

உலக புகையிலை ஒழிப்பு தினத்தையொட்டி கோவை போத்தனூர் காவல் நிலையத்தின் சார்பில் வெள்ளலூர் குடியிருப்பு பகுதியில் போதைப்பொரு...

பேரூர் கோவிலில் ரூ.1.40 கோடி புதிய திருத்தேர்: பாலக்கால் பூஜையுடன் திருப்பணி தொடக்கம்

கோவை பேரூர் பட்டீஸ்வரர் கோவிலில் ரூ.1.40 கோடி மதிப்பீட்டில் புதிய திருத்தேர் அமைக்கும் திருப்பணிக்கான பாலக்கால் பூஜை நடை...

கோவையில் நெடுஞ்சாலைத்துறை வளர்ச்சி திட்டங்கள் குறித்து அமைச்சர் ஆதவ் அர்ஜுனா ஆய்வு

கோவை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் பொதுப்பணித்துறை அமைச்சர் ஆதவ் அர்ஜுனா நெடுஞ்சாலைத்துறை வளர்ச்சி திட்ட பணிகள் குறித்து...

கோவையில் சர்வதேச மாநாட்டில் சிறந்த அறிவியல் சிந்தனைகளுக்கு ரூ.1 லட்சம் பரிசு

கோவை தொழில்நுட்பக் கல்லூரியில் ஜூன் 3 முதல் 5 வரை நடைபெறும் AMCEHA 2026 சர்வதேச மாநாட்டில், சிறந்த அறிவியல் சிந்தனை மற்ற...

கோவை நேரு உள்விளையாட்டு அரங்கில் அமைச்சர் ஆதவ் அர்ஜுனா ஆய்வு

கோவையில் விளையாட்டு மற்றும் பொதுப்பணி துறை அமைச்சர் ஆதவ் அர்ஜுனா நேரு உள்விளையாட்டு அரங்கில் கபடி வீரர்களைச் சந்தித்து அ...

கோவையில் தடை செய்யப்பட்ட புகையிலை பொருட்கள் பறிமுதல்; 4 பேர் கைது

கோவை மாநகரில் தடை செய்யப்பட்ட குட்கா மற்றும் புகையிலைப் பொருட்கள் விற்பனையை தடுக்க போலீசார் நடத்திய சோதனையில், வெவ்வேறு...