தொடர்ந்து அடுத்தடுத்து புதிய மேம்பாலத்தில் மூன்று பேர் விபத்தில் உயிரிழந்த நிலையில் மாநகர காவல் ஆணையாளர் பாலகிருஷ்ணன், வாகன ஓட்டுனர்கள் பாதுகாப்பாக பயணிக்க வேறு என்னென்ன நடவடிக்கை எடுக்கலாம் என்பது குறித்து நெடுஞ்சாலைத்துறை அதிகாரிகளுடன் ஆலோசனை மேற்கொண்டார்.
கோவை: கோவை ராமநாதபுரம் - சுங்கம் மேம்பாலத்தில் 40 அடி உயரத்தில் இருந்து விழுந்த இரு சக்கர வாகன ஓட்டி சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார். மேம்பாலம் திறக்கப்பட்ட ஒரே மாதத்தில், 3 பேர் உயிரிழந்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளனர்.
கோவை ராமநாதபுரம் - சுங்கம் இடையே நெடுஞ்சாலை துறை சார்பில் ரூ.253 கோடி மதிப்பீட்டில் 3.3 கிலோ மீட்டர் தூரத்திற்கு உயர் மட்ட மேம்பாலம் கட்டப்பட்டது. இந்த மேம்பாலத்தை கடந்த ஜூன் 11 ஆம் தேதி மக்கள் பயன்பாட்டுக்கு திறந்து வைக்கப்பட்டது. மேம்பாலம் போக்குவரத்திற்கு துவங்கப்பட்ட இரண்டு நாட்களில் இருசக்கர வாகனத்தில் வேகமாக சென்ற 28 வயதான பிரஷாந்த் என்ற இளைஞர் ஒருவர் தடுப்பு சுவர் மீது மோதி உயிரிழந்தார்.
இந்நிலையில், கடந்த 10 நாட்களுக்கு முன்பு அதே பகுதியில் அதிவேகமாக இரு சக்கரத்தில் இருசக்கர வாகனத்தில் வந்த ஈரோடு மாவட்டத்தை சேர்ந்த 24 வயதான ஹரிஹரன் என்பவர் தடுப்பு சுவர் மீது மோதி பாலத்தில் இருந்து கீழே விழுந்து பரிதாபமாக உயிரிழந்தார். தொடர்ந்து விபத்துக்கள் நடைபெற்று வந்த நிலையில் மாநகர காவல் ஆணையர் பாலகிருஷ்ணன் உத்தரவின் பேரில் போக்குவரத்து துணை ஆணையாளர் மற்றும் நெடுஞ்சாலை துறை அதிகாரிகள் மேம்பாலத்தில் ஆய்வு மேற்கொண்டனர்.

மேலும், முதல் கட்டமாக மேம்பால சாலையில் இரும்பு பேரிக்காடுகள், வேக தடுப்புகள் அமைக்கப்பட்டது. அதனைத் தொடர்ந்து, எட்டு இடங்களில் வேகத்தடைகள் அமைக்கப்பட்டது. மேலும், வேகக்கட்டுப்பாடு தொடர்பான அறிவிப்பு பலகைகள்,சாலையில் ஒளிரும் விளக்குகள் ஆகியவை பொருத்தப்பட்டது. இருப்பினும் அதிவேகமாக வாகனங்களை இயக்குவதும் விபத்துக்கான காரணமாக இருப்பதால் பொதுமக்கள் மேம்பாலத்தில் செல்லும்போது மிதமான வேகத்தில் செல்லுமாறு போலீசார் விழிப்புணர்வு ஏற்படுத்தி வந்தனர்.
இந்நிலையில், இன்று காலை இருசக்கர வாகனத்தில் சிங்காநல்லூர் நோக்கி சென்ற டவுன்ஹால் தாமஸ் வீதியை சேர்ந்த ஆனந்தகுமார் (51) என்பவர் சுங்கம் அருகே வந்த போது கட்டுப்பாட்டை இழந்து மேம்பால தடுப்புச் சுவர் மீது மோதி சுமார் 40 அடி உயரத்தில் இருந்து கீழே விழுந்தார். இதில், அவர் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தார்.
தொடர்ந்து அடுத்தடுத்து புதிய மேம்பாலத்தில் மூன்று பேர் விபத்தில் உயிரிழந்த நிலையில் மாநகர காவல் ஆணையாளர் பாலகிருஷ்ணன் மீண்டும் இன்று மேம்பாலத்தில் ஆய்வு மேற்கொண்டார். வாகன ஓட்டுனர்கள் பாதுகாப்பாக பயணிக்க வேறு என்னென்ன நடவடிக்கை எடுக்கலாம் என்பது குறித்து நெடுஞ்சாலைத்துறை அதிகாரிகளுடன் ஆலோசனை மேற்கொண்டார்.