கோவை பொள்ளாச்சி அருகே மாமியாரை அரிவாளால் வெட்டிய மருமகன் கைது: தலைமறைவாக உள்ள நண்பனுக்கு போலீஸ் வலை..!

விவாகரத்து தொடர்பாக நடந்த வாக்குவாதத்தில் மாமியாரை அரிவாளால் வெட்டிய மருமகனை புகாரின் பேரில், கோட்டூர் போலீசார் வழக்குப்பதிவு செய்து கைது செய்தனர். மேலும், தலைமறைவாக உள்ள அவரது நண்பரை தேடி வருகின்றனர்.


கோவை: பொள்ளாச்சி அருகே மாமியாரை அரிவாளால் வெட்டிய மருமகன் கைது செய்யப்பட்டு, தலைமறைவாக உள்ள அவரது நண்பரை போலீசார் தேடி வருகின்றனர்.

பொள்ளாச்சி அருகே உள்ள ஒடையகுளம் பகுதியைச் சேர்ந்தவர் சந்தோஷ்(32) தென்னை மட்டை வியாபாரம் செய்து வருகிறார். இவர் கடந்த 2018-ம் ஆண்டு கோட்டூரை சேர்ந்த உதயகுமார்- நித்தியலட்சுமி ஆகியோரது மகள் சிவப்பிரியா என்பவரை காதலித்து திருமணம் செய்து கொண்டுள்ளார்.

சந்தோஷ் அடிக்கடி குடித்துவிட்டு வீட்டுக்கு வருவதாக தெரிகிறது. இதனால், அவரது மனைவியின் தாய் நித்தியலட்சுமி தனது மகளுக்கு விவாகரத்து கேட்டு பொள்ளாச்சி நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்ததாக கூறப்படுகிறது.

இந்நிலையில், நேற்று முன்தினம் சந்தோஷ் மற்றும் அவரது நண்பர் சரவணகுமார் ஆகியோர் கோட்டூரில் நித்தியலட்சுமி நடத்தி வரும் கடைக்கு சென்று, விவாகரத்து தொடர்பாக வாக்குவாதத்தில் ஈடுபட்டதாக தெரிகிறது.

அப்போது, ஏற்பட்ட தகராறின் போது சந்தோஷ் மறைத்து வைத்திருந்த அரிவாளை எடுத்து நித்தியலட்சுமி மீது சரமாரியாக தாக்கியுள்ளார். இதில் அவரது தலை மற்றும் கைகளில் காயங்கள் ஏற்பட்டது. பின்னர் அருகில் இருந்தவர்கள் அவரை மீட்டு பொள்ளாச்சி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.

அங்கிருந்து மேல் சிகிச்சைக்காக கோவையில் உள்ள தனியார் மருத்துவமனையில் அவர் அனுமதிக்கப்பட்டுள்ளார். இது தொடர்பாக அவர் கொடுத்த புகாரின் பேரில், கோட்டூர் போலீசார் வழக்குப் பதிவு செய்து சந்தோஷை கைது செய்தனர். மேலும், தலைமறைவாக உள்ள அவரது நண்பர் சரவணகுமார் என்பவரை தேடி வருகின்றனர்.

Newsletter

கோவையில் தொடங்கிய இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் மக்கள் சந்திப்பு நடைப்பயணம்

மத்திய அரசின் மக்கள் விரோதக் கொள்கைகளை எதிர்த்தும், தொழிலாளர்களுக்கு எதிராக கொண்டு வரப்பட்டுள்ள தொழிலாளர் சட்டங்களை திரு...

தங்க நகை வழிப்பறி வழக்கு: குற்றவாளிக்கு 7 ஆண்டு சிறை; ரூ.5,000 அபராதம் - கோவை நீதிமன்றம் தீர்ப்பு

கடந்த 2020 ஆம் ஆண்டு கோவையில் 100 கிராம் தங்க நகையை கத்தி முனையில் வழிப்பறி செய்த வழக்கில் குற்றம் நிரூபிக்கப்பட்ட இளைஞர...

கிணத்துக்கடவு அருகே வாலிபர் கொடூரக் கொலை

கோவை மாவட்டம் பொள்ளாச்சியை அடுத்த சிக்கலாம்பாளையம் பகுதியைச் சேர்ந்த அஸ்வின் (22) என்ற வாலிபாரின் வீட்டிற்குள் நள்ளிரவில...

அரசூர் துணை மின் நிலையத்தில் நாளை (07.08.2026) மின்தடை

கோவையில் அரசூர் துணை மின் நிலையத்தில் நாளை காலை 9 மணி முதல் மாலை 5 மணி வரை மாதாந்திர பராமரிப்பு பணிகள் நடைபெறுவதால் செல்...

கதிர்நாயக்கன்பாளையம் துணை மின் நிலையத்தில் நாளை (07.08.2026) மின்தடை

கோவை கதிர்நாயக்கன்பாளையம் துணை மின் நிலையத்தில் நாளை மாதாந்திர பராமரிப்பு பணிகள் காலை 9 முதல் மாலை 5 மணி வரை நடைபெறும்....

பேருந்தில் கல்லூரி மாணவிக்கு பாலியல் தொல்லை; கோவையில் காவலர் கைது

பொள்ளாச்சியில் இருந்து கோவை வந்த பேருந்தில் பயணித்த கல்லூரி மாணவிக்கு பாலியல் தொல்லை அளித்ததாக, போத்தனூர் காவல் நிலைய கு...