பவானிசாகர் அணை நீர் படிப்பு பகுதிகளில் உள்ள லிங்காபுரம், மொக்கை மேடு, சிறுமுகை ஆலங்கொம்பு, பகுதிகளில் உள்ள மக்கள் எச்சரிக்கையாக இருக்க வேண்டும் என்றும் எக்காரணத்திற்காகவும் ஆற்றில் யாரும் இறங்க கூடாது என்று கேட்டுக் கொண்டுள்ளனர்.
கோவை: பில்லூர்
நீர்பிடிப்பு பகுதிகளான அப்பர் பவானி அவிலாஞ்சி, மஞ்சூர், குந்தா உள்ளிட்ட பகுதிகளில் கன மழை காரணமாக நேற்று காலை 81 அடியாக இருந்த பில்லூர் அணையின் நீர்மட்டம் ஒரே நாளில் கிடுகிடு என உயர்ந்து 96 அடியைஎட்டியது.
கனமழை காரணமாக, அணைக்கு வினாடிக்கு 20 ஆயிரம் கன அடி நீர் வந்து கொண்டிருந்த காரணத்தினால், அணையின் நீர்மட்டம் உயர்ந்து நள்ளிரவு 12 மணி அளவில் முழு கொள்ளளவை எட்டியது 100 அடி கொள்ளளவு கொண்ட அணை தற்போது 97 அடியை எட்டிய காரணத்தினால் அணையின் பாதுகாப்பு கருதி வரக்கூடிய தண்ணீர் முழுமையாக பவானி ஆற்றில் திறந்து விடப்பட்டுள்ளது.
இன்று காலை நிலவரப்படி, அணைக்கு 13 ஆயிரம் கன அடி தண்ணீர் வந்து கொண்டிருக்கிறது என்றும் மின் உற்பத்தி மூலமாகவும் மேல் மதகு வழியாகவும் வினாடிக்கு 12 ஆயிரம் கன அடி தண்ணீர் பவானி ஆற்றில் திறந்து விடப்படுகிறது என்று அறிவிக்கப்பட்டுள்ளது. மேலும், கோவை குடிநீர் திட்டத்திற்காக ஆயிரம் கன அடி தண்ணீர் எடுக்கப்படுகிறது.
தற்போது அணை திறக்கப்பட்டுள்ள காரணத்தினால், அணையில் இருந்து திறக்கப்படும் முழுமையான தண்ணீர் பவானிசாகர் அணைக்கு சென்று சேரும். இந்த நிலையில், தற்போது மாயாறு மற்றும் பவானி ஆற்றிலும் அதிகளவு வெள்ளப் பெருக்கு ஏற்பட்டுள்ளதால், பவானிசாகர் அணை நீர் படிப்பு பகுதிகளில் உள்ள லிங்காபுரம், மொக்கை மேடு, சிறுமுகை, ஆலங்கொம்பு பகுதிகளில் உள்ள மக்கள் எச்சரிக்கையாக இருக்குமாறு காவல்துறை மற்றும் வருவாய் துறை மூலமாக கேட்டுக் கொண்டுள்ளனர்.
பொதுமக்கள், எக்காரணத்தைக் கொண்டும் பவானி ஆற்றில் இறங்க வேண்டாம், குளிக்க, துணி துவைக்க செல்ல வேண்டாம் என்றும் கேட்டுக் கொண்டுள்ளனர். அசம்பாவித சம்பவங்கள் ஏதாவது ஏற்பட்டால் உடனடியாக காவல்துறை, வருவாய் துறையை தொடர்பு கொள்ளவும் கேட்டுக் கொண்டுள்ளனர்.
மழை பெய்து பவானி ஆற்றில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளதால், அதிகாரிகள் தீவிரமாக நீர்வரத்தை கண்காணித்து வருகின்றனர்.