கோவையில் தனியார் விடுதிக்குள் புகுந்து தொழிலதிபரை நிர்வாணமாக்கி பணம் கேட்டு மிரட்டிய மர்ம கும்பல் - போலீஸ் தீவிர விசாரணை.

கோவை ரேஸ்கோர்ஸ் பகுதியைச் சேர்ந்த தொழில் அதிபர் ஒருவர், காந்திபுரத்தில் உள்ள விடுதியில் ஆயுர்வேத சிகிச்சைக்கு அழைத்த ஒரு பெண்ணுடன் தங்கியிருந்தார். அப்போது 3 பேர் கொண்ட ரவுடிக் கும்பல் அவர்கள் லஅறைக்குள் அத்துமீறி நுழைந்தனர். இருவரையும் நிர்வாணமாக்கி மிரட்டியதாக தெரிகிறது.


கோவை: கோவை தனியார் விடுதியில் பெண்ணுடன் தங்கி இருந்த தொழில் அதிபரை நிர்வாணமாக்கி ரூ.5 லட்சம் கேட்டு மிரட்டிய ரவுடி கும்பலை போலீஸ் தேடி வருகின்றனர்.

கோவை ரேஸ்கோர்ஸ் பகுதியைச் சேர்ந்தவர் 63 வயது தொழில் அதிபர். கடந்த 11-ந் தேதி இவர் காந்திபுரத்தில் உள்ள பிரபல விடுதியில் ஆயுர்வேத சிகிச்சைக்கு அழைத்த ஒரு பெண்ணுடன் தங்கியிருந்தார். அப்போது, 3 பேர் கொண்ட ரவுடிக் கும்பல் அவர்கள் தங்கியிருந்த அறைக்குள் அத்துமீறி நுழைந்தனர்.

பின்னர், அந்த தொழில் அதிபரையும் உடன் தங்கியிருந்த பெண்ணையும் மிரட்டியதாக தெரிகிறது. பின்னர், அவர்கள் 2 பேரையும் நிர்வாணமாக நிற்க வைத்து செல்போனில் புகைப்படம் மற்றும் வீடியோ எடுத்துள்ளனர். அந்த வீடியோவை காட்டி, இதனை உங்கள் குடும்பத்தினருக்கும், வெளி உலகத்தினருக்கும் அனுப்பாமல் இருக்க வேண்டும் என்றால் ரூ.5 லட்சம் பணம் தர வேண்டும் என்று மிரட்டினர்.

அதற்கு அந்த தொழில் அதிபர், தற்போது என்னிடம் பணம் இல்லை எனக் கூறி உள்ளார். உடனே அவர் கையில் இருந்த ரூ.1000 மற்றும் ஏ.டி.எம். கார்டை பறித்துக் கொண்ட அவர்கள் நாங்கள் கேட்கும்போது எங்களுக்கு ரூ.5 லட்சம் பணம் வர வேண்டும் என கூறி அங்கிருந்து தப்பிச் சென்றனர்.

மிரட்டலுக்கு ஆளான தொழில் அதிபர் அருகில் உள்ள காந்திபுரம் காட்டூர் போலீஸ் நிலையத்துக்கு சென்று புகார் அளித்தார். தொழில் அதிபருடன் தங்கியிருந்த பெண்ணுக்கும், அந்த மோசடி கும்பலுக்கும் தொடர்பு இருக்கலாம் என்றும் தொழில் அதிபரிடம் அதிக பணம் இருப்பதை அறிந்து அந்த பெண், சரியான நேரம் பார்த்து அந்த கும்பலை அங்கு வரவழைத்து தங்கள் திட்டத்தை நிறைவேற்றி இருக்கலாம் என்றும் கூறப்படுகிறது.

இதனால் தொழில் அதிபருடன் சென்ற பெண் யார், எந்த ஊரைச் சேர்ந்தவர் என்பது பற்றி போலீசார் விசாரித்து வருகிறார்கள். அந்த பெண்ணை பிடித்தால் உண்மை வெளியே வரும் என்பதால்,அந்த பெண்ணை தேடும் பணியில் போலீசார் தீவிரமாக ஈடுபட்டு உள்ளனர்.

மேலும் தொழில் அதிபர் தங்கியிருந்த ஓட்டலில் பதிவாகி உள்ள கண்காணிப்பு கேமராவில் பதிவான காட்சிகளையும் போலீசார் ஆய்வு செய்து குற்றவாளிகளின் உருவம் பதிவாகி உள்ளதா? எனவும் ஆய்வு செய்து வருகின்றனர்.

இந்த சம்பவத்தில் ஈடுபட்ட மோசடி கும்பல் இதேபோல் பல தொழில்அதிபர்களை மிரட்டி பணம் பறித்து இருக்கலாம் என்ற கோணத்திலும் போலீசார் விசாரணையை தீவிரப்படுத்தியுள்ளனர்.

Newsletter

உலக புகையிலை ஒழிப்பு தினம்: போத்தனூர்-வெள்ளலூர் பகுதியில் காவல்துறை விழிப்புணர்வு முகாம்

உலக புகையிலை ஒழிப்பு தினத்தையொட்டி கோவை போத்தனூர் காவல் நிலையத்தின் சார்பில் வெள்ளலூர் குடியிருப்பு பகுதியில் போதைப்பொரு...

பேரூர் கோவிலில் ரூ.1.40 கோடி புதிய திருத்தேர்: பாலக்கால் பூஜையுடன் திருப்பணி தொடக்கம்

கோவை பேரூர் பட்டீஸ்வரர் கோவிலில் ரூ.1.40 கோடி மதிப்பீட்டில் புதிய திருத்தேர் அமைக்கும் திருப்பணிக்கான பாலக்கால் பூஜை நடை...

கோவையில் நெடுஞ்சாலைத்துறை வளர்ச்சி திட்டங்கள் குறித்து அமைச்சர் ஆதவ் அர்ஜுனா ஆய்வு

கோவை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் பொதுப்பணித்துறை அமைச்சர் ஆதவ் அர்ஜுனா நெடுஞ்சாலைத்துறை வளர்ச்சி திட்ட பணிகள் குறித்து...

கோவையில் சர்வதேச மாநாட்டில் சிறந்த அறிவியல் சிந்தனைகளுக்கு ரூ.1 லட்சம் பரிசு

கோவை தொழில்நுட்பக் கல்லூரியில் ஜூன் 3 முதல் 5 வரை நடைபெறும் AMCEHA 2026 சர்வதேச மாநாட்டில், சிறந்த அறிவியல் சிந்தனை மற்ற...

கோவை நேரு உள்விளையாட்டு அரங்கில் அமைச்சர் ஆதவ் அர்ஜுனா ஆய்வு

கோவையில் விளையாட்டு மற்றும் பொதுப்பணி துறை அமைச்சர் ஆதவ் அர்ஜுனா நேரு உள்விளையாட்டு அரங்கில் கபடி வீரர்களைச் சந்தித்து அ...

கோவையில் தடை செய்யப்பட்ட புகையிலை பொருட்கள் பறிமுதல்; 4 பேர் கைது

கோவை மாநகரில் தடை செய்யப்பட்ட குட்கா மற்றும் புகையிலைப் பொருட்கள் விற்பனையை தடுக்க போலீசார் நடத்திய சோதனையில், வெவ்வேறு...