கோவை மாநகராட்சியில் 4-நாளில் ரூ.4.5-கோடி சொத்து வரி வசூல்..!

8-ம் தேதி 1.23-கோடி ரூபாய் வசூலானது. இரு நாட்கள் விடுமுறைக்கு பின், நேற்று முன்தினம், 1.59-கோடி ரூபாய், நேற்று ஒரு கோடியே, 42-லட்சத்து, 58-ஆயிரத்து, 419-ரூபாய் என, நான்கு நாட்களில் மட்டும், 4.56-கோடி ரூபாய் வசூலாகியுள்ளது.


கோவை: சொத்து வரி மற்றும் குப்பை கட்டணம் வசூலில், கோவை மாநகராட்சி நிர்வாகம் தீவிரம் காட்டி வருகிறது.

சீராய்வுக்காக நிறுத்தி வைக்கப்பட்டிருந்த சொத்து வரி வசூல் மீண்டும் துவங்கியுள்ள நிலையில், நான்கு நாட்களில், 4.5 கோடி ரூபாய் வசூலிக்கப்பட்டுள்ளது.

கோவை மாநகராட்சியில் சொத்து வரி சீராய்வு நடவடிக்கைகளால், கடந்த மூன்று மாதங்களாக, வரி வசூல் செய்யப்படவில்லை. மாநில அரசின் வழிகாட்டுதலின்படி, சொத்து வரியை உயர்த்தி மாநகராட்சியில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.

அதன்பின், கடந்த, 7-ம் தேதியிலிருந்து மீண்டும் சொத்து வரி வசூல் துவங்கியுள்ளது. முதல் நாளான 7-ம் தேதி, 32-லட்சம் ரூபாய் சொத்து வரி வசூலிக்கப்பட்டது.

தொடர்ந்து, 8-ம் தேதி 1.23-கோடி ரூபாய் வசூலானது. இரு நாட்கள் விடுமுறைக்கு பின், நேற்று முன்தினம், 1.59-கோடி ரூபாய், நேற்று ஒரு கோடியே, 42-லட்சத்து, 58-ஆயிரத்து, 419-ரூபாய் என, நான்கு நாட்களில் மட்டும், 4.56-கோடி ரூபாய் வசூலாகியுள்ளது.

குப்பை கட்டணமாக, முதல் நாளில் 1.90-லட்சம் ரூபாய்; 2-ம் நாளில் 6.90-லட்சம் ரூபாய்; 3-ம் நாளில் 8- லட்சம் ரூபாய்; 4-ம் நாளில் 6.80-லட்சம் ரூபாய் என, நான்கு நாட்களில், 17.60 லட்சம் ரூபாய் வசூலாகி இருக்கிறது.

Newsletter

கோவையில் தொடங்கிய இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் மக்கள் சந்திப்பு நடைப்பயணம்

மத்திய அரசின் மக்கள் விரோதக் கொள்கைகளை எதிர்த்தும், தொழிலாளர்களுக்கு எதிராக கொண்டு வரப்பட்டுள்ள தொழிலாளர் சட்டங்களை திரு...

தங்க நகை வழிப்பறி வழக்கு: குற்றவாளிக்கு 7 ஆண்டு சிறை; ரூ.5,000 அபராதம் - கோவை நீதிமன்றம் தீர்ப்பு

கடந்த 2020 ஆம் ஆண்டு கோவையில் 100 கிராம் தங்க நகையை கத்தி முனையில் வழிப்பறி செய்த வழக்கில் குற்றம் நிரூபிக்கப்பட்ட இளைஞர...

கிணத்துக்கடவு அருகே வாலிபர் கொடூரக் கொலை

கோவை மாவட்டம் பொள்ளாச்சியை அடுத்த சிக்கலாம்பாளையம் பகுதியைச் சேர்ந்த அஸ்வின் (22) என்ற வாலிபாரின் வீட்டிற்குள் நள்ளிரவில...

அரசூர் துணை மின் நிலையத்தில் நாளை (07.08.2026) மின்தடை

கோவையில் அரசூர் துணை மின் நிலையத்தில் நாளை காலை 9 மணி முதல் மாலை 5 மணி வரை மாதாந்திர பராமரிப்பு பணிகள் நடைபெறுவதால் செல்...

கதிர்நாயக்கன்பாளையம் துணை மின் நிலையத்தில் நாளை (07.08.2026) மின்தடை

கோவை கதிர்நாயக்கன்பாளையம் துணை மின் நிலையத்தில் நாளை மாதாந்திர பராமரிப்பு பணிகள் காலை 9 முதல் மாலை 5 மணி வரை நடைபெறும்....

பேருந்தில் கல்லூரி மாணவிக்கு பாலியல் தொல்லை; கோவையில் காவலர் கைது

பொள்ளாச்சியில் இருந்து கோவை வந்த பேருந்தில் பயணித்த கல்லூரி மாணவிக்கு பாலியல் தொல்லை அளித்ததாக, போத்தனூர் காவல் நிலைய கு...