கோவை பொள்ளாச்சி மற்றும் சுற்றுவட்டார பகுதிகளில் 7-வது நாளாக தொடர்ந்து பெய்து வரும் தென்மேற்கு பருவமழை..!

7-வது நாளாக இன்றும் மழை தொடர்ந்து பெய்து வருவதால் பள்ளி, கல்லூரி, மற்றும் பணிக்குச் செல்லும் பொதுமக்கள் கடுமையாக அவதிப்பட்டு வருகின்றனர். மழை காரணமாக பொதுமக்களின் இயல்பு வாழ்க்கை வெகுவாக பாதிக்கப்பட்டுள்ளது.


கோவை: கோவை பொள்ளாச்சி மற்றும் சுற்றுவட்டார பகுதிகளில் 7-வது நாளாக தொடர்ந்து பெய்து வரும் தென்மேற்கு பருவமழையால் பொதுமக்களின் இயல்பு வாழ்க்கை பாதிக்கப்பட்டுள்ளது.

தமிழகத்தில் கடந்த ஒரு வாரத்திற்கு மேலாக தென்மேற்கு பருவமழை தீவிரமடைந்து பெய்து வருகிறது. இதில், குறிப்பாக கோவை மாவட்டம் பொள்ளாச்சி மற்றும் சுற்றுவட்டார பகுதிகளில் இரவு பகலாக மழை தொடர்ந்து பெய்து வருகிறது.



பொள்ளாச்சி, ஆனைமலை, ஆழியாறு, கிணத்துக்கடவு உள்ளிட்ட பகுதிகளில் பலத்த காற்றுடன் பெய்த மழையால் சாலைகள் வெள்ளக்காடாக மாறியுள்ளது.



தொடர்ந்து 7-வது நாளாக இன்றும் மழை தொடர்ந்து பெய்து வருவதால் பள்ளி, கல்லூரி, மற்றும் பணிக்குச் செல்லும் பொதுமக்கள் கடுமையாக அவதிப்பட்டு வருகின்றனர். மழை காரணமாக பொதுமக்களின் இயல்பு வாழ்க்கை வெகுவாக பாதிக்கப்பட்டுள்ளது.

இன்று காலை நிலவரப்படி பெருவாரிப்பள்ளம் பகுதியில், 26 மி.மீ, பொள்ளாச்சியில் 21 மில்லி மீட்டர், தூணக்கடவு பகுதியில் 17 மில்லி மீட்டர், மணக்கடவு பகுதியில் 15 மில்லி மீட்டர் நெகமம் பகுதியில் 13 மில்லி மீட்டரும் மழை அளவு பதிவாகி உள்ளதாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

Newsletter

கோவையில் தொடங்கிய இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் மக்கள் சந்திப்பு நடைப்பயணம்

மத்திய அரசின் மக்கள் விரோதக் கொள்கைகளை எதிர்த்தும், தொழிலாளர்களுக்கு எதிராக கொண்டு வரப்பட்டுள்ள தொழிலாளர் சட்டங்களை திரு...

தங்க நகை வழிப்பறி வழக்கு: குற்றவாளிக்கு 7 ஆண்டு சிறை; ரூ.5,000 அபராதம் - கோவை நீதிமன்றம் தீர்ப்பு

கடந்த 2020 ஆம் ஆண்டு கோவையில் 100 கிராம் தங்க நகையை கத்தி முனையில் வழிப்பறி செய்த வழக்கில் குற்றம் நிரூபிக்கப்பட்ட இளைஞர...

கிணத்துக்கடவு அருகே வாலிபர் கொடூரக் கொலை

கோவை மாவட்டம் பொள்ளாச்சியை அடுத்த சிக்கலாம்பாளையம் பகுதியைச் சேர்ந்த அஸ்வின் (22) என்ற வாலிபாரின் வீட்டிற்குள் நள்ளிரவில...

அரசூர் துணை மின் நிலையத்தில் நாளை (07.08.2026) மின்தடை

கோவையில் அரசூர் துணை மின் நிலையத்தில் நாளை காலை 9 மணி முதல் மாலை 5 மணி வரை மாதாந்திர பராமரிப்பு பணிகள் நடைபெறுவதால் செல்...

கதிர்நாயக்கன்பாளையம் துணை மின் நிலையத்தில் நாளை (07.08.2026) மின்தடை

கோவை கதிர்நாயக்கன்பாளையம் துணை மின் நிலையத்தில் நாளை மாதாந்திர பராமரிப்பு பணிகள் காலை 9 முதல் மாலை 5 மணி வரை நடைபெறும்....

பேருந்தில் கல்லூரி மாணவிக்கு பாலியல் தொல்லை; கோவையில் காவலர் கைது

பொள்ளாச்சியில் இருந்து கோவை வந்த பேருந்தில் பயணித்த கல்லூரி மாணவிக்கு பாலியல் தொல்லை அளித்ததாக, போத்தனூர் காவல் நிலைய கு...