அதிமுக நிலை மன வருத்தம் அளிக்கிறது - கவலைப்படும் அகில இந்திய பார்வர்ட் பிளாக் கட்சியின் அகில இந்திய துணை தலைவர் கதிரவன்..!

அதிமுகவின் ஒற்றை தலைமை விவகாரம் தற்போது சங்கடத்தை ஏற்படுத்துவதாகவும், எம்ஜிஆர் உருவாக்கி ஜெயலலிதா வளர்த்த கட்சியின் நிலை கண்டு அகில இந்திய பார்வர்ட் பிளாக் கட்சி மன வருத்தம் அடைவதாகவும் திருப்பூரில் பேட்டியளித்தார்.


திருப்பூர்: எம்ஜிஆர் உருவாக்கிய ஜெயலலிதா வளர்த்த அதிமுகவின் தற்போதைய நிலை மன வருத்தத்தை ஏற்படுத்துவதாக அகில இந்திய பார்வர்ட் பிளாக் கட்சியின் அகில இந்தியத் துணைத் தலைவர் கதிரவன் திருப்பூரில் பேட்டியளித்தார்.

அகில இந்திய பார்வர்ட் பிளாக் கட்சியின் திருப்பூர் மாவட்ட நிர்வாகிகள் ஆலோசனைக் கூட்டம் திருப்பூர் கொங்கு மெயின் ரோடு பகுதிகளில் உள்ள அகில இந்திய பார்வர்ட் பிளாக் கட்சியின் மாவட்ட அலுவலகத்தில் நடைபெற்றது.

இதில், சிறப்பு விருந்தினராக அகில இந்திய பார்வர்ட் பிளாக் கட்சியின் அகில இந்திய துணைத் தலைவர் கதிரவன் கலந்து கொண்டார்.



அப்போது செய்தியாளர்களை சந்தித்த அவர் அதிமுகவின் ஒற்றை தலைமை விவகாரம் தற்போது சங்கடத்தை ஏற்படுத்துவதாகவும், எம்ஜிஆர் உருவாக்கி ஜெயலலிதா வளர்த்த கட்சியின் நிலை கண்டு அகில இந்திய பார்வர்ட் பிளாக் கட்சி மன வருத்தம் அடைவதாகவும் மத்திய அரசின் அக்னிபாத் திட்டம் என்பது மத்திய அரசின் செலவில் பயிற்சி கொடுக்கப்பட்டு இளைஞர்களை பாஜகவிற்கு சேர்க்கும் முயற்சி எனவும் தெரிவித்தார்.

நூல் விலை உயர்வால் திருப்பூர் மற்றும் கோவை உள்ளிட்ட மாவட்டங்களில் பின்னலாடை தொழில் மற்றும் தொழிலாளர்கள் பெருமளவு பாதிக்கப்பட்டுள்ளதால் மத்திய மாநில அரசுகள் இதனை கவனத்தில் கொண்டு உடனடி நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும் எனவும், அதிமுகவின் ஒற்றை தலைமை விவகாரத்தில் முக்குலத்தோரை பிரதிபலிப்பவர்கள் எவரும் இல்லை என்ற நிலை இருப்பதாகவும் அதனை அகில இந்திய பார்வர்ட் பிளாக் கட்சி நிவர்த்தி செய்யும் எனவும் தெரிவித்தார்.

பல்வேறு மாநிலங்களில் பாஜகவினர் பணத்தைக் கொடுத்து சட்டமன்ற உறுப்பினர்களை விலைக்கு வாங்கி ஜனநாயகத்தை சீர்குலைக்கும் முயற்சியில் ஈடுபட்டு வருவதாகவும் விரைவில் பாஜக வீழ்ச்சியை சந்திக்கும் எனவும் தெரிவித்தார்.

Newsletter

கோவையில் தொடங்கிய இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் மக்கள் சந்திப்பு நடைப்பயணம்

மத்திய அரசின் மக்கள் விரோதக் கொள்கைகளை எதிர்த்தும், தொழிலாளர்களுக்கு எதிராக கொண்டு வரப்பட்டுள்ள தொழிலாளர் சட்டங்களை திரு...

தங்க நகை வழிப்பறி வழக்கு: குற்றவாளிக்கு 7 ஆண்டு சிறை; ரூ.5,000 அபராதம் - கோவை நீதிமன்றம் தீர்ப்பு

கடந்த 2020 ஆம் ஆண்டு கோவையில் 100 கிராம் தங்க நகையை கத்தி முனையில் வழிப்பறி செய்த வழக்கில் குற்றம் நிரூபிக்கப்பட்ட இளைஞர...

கிணத்துக்கடவு அருகே வாலிபர் கொடூரக் கொலை

கோவை மாவட்டம் பொள்ளாச்சியை அடுத்த சிக்கலாம்பாளையம் பகுதியைச் சேர்ந்த அஸ்வின் (22) என்ற வாலிபாரின் வீட்டிற்குள் நள்ளிரவில...

அரசூர் துணை மின் நிலையத்தில் நாளை (07.08.2026) மின்தடை

கோவையில் அரசூர் துணை மின் நிலையத்தில் நாளை காலை 9 மணி முதல் மாலை 5 மணி வரை மாதாந்திர பராமரிப்பு பணிகள் நடைபெறுவதால் செல்...

கதிர்நாயக்கன்பாளையம் துணை மின் நிலையத்தில் நாளை (07.08.2026) மின்தடை

கோவை கதிர்நாயக்கன்பாளையம் துணை மின் நிலையத்தில் நாளை மாதாந்திர பராமரிப்பு பணிகள் காலை 9 முதல் மாலை 5 மணி வரை நடைபெறும்....

பேருந்தில் கல்லூரி மாணவிக்கு பாலியல் தொல்லை; கோவையில் காவலர் கைது

பொள்ளாச்சியில் இருந்து கோவை வந்த பேருந்தில் பயணித்த கல்லூரி மாணவிக்கு பாலியல் தொல்லை அளித்ததாக, போத்தனூர் காவல் நிலைய கு...