அரசு நிர்ணயித்த விலையை விட குறைந்த விலைக்கு கொப்பரை கொள்முதல் - பொள்ளாச்சி சட்டமன்ற உறுப்பினர் ஜெயராமன் குற்றச்சாட்டு..!

அரசு நிர்ணயித்த விலையை விட குறைந்த விலைக்கு கொள்முதல் செய்வதால், கொப்பரை விவசாயிகள் பாதிக்கப்படுவார்கள் எனவே கொப்பரை கொள்முதல் காலத்தை நீடித்து உடனடியாக கொள்முதல் செய்ய வேண்டும் இல்லை என்றால் போராட்டங்கள் நடத்தப்படும் என்று தெரிவித்தார்.


கோவை: தேங்காய் விலை வீழ்ச்சியை கட்டுப்படுத்துவது உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி பல்லடம் சாலையில் விவசாயிகள் சார்பில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.

ஆர்ப்பாட்டத்தில் கலந்து கொண்ட பொள்ளாச்சி சட்டமன்ற உறுப்பினர் ஜெயராமன் செய்தியாளர்களுக்கு அளித்த பேட்டியின் போது, தமிழகத்தில் கொரோனா உச்சக்கட்டத்தில் இருந்த போது தேங்காய் விலை வீழ்ச்சி ஏற்படவில்லை, உணவு விடுதிகள் இல்லாத போதும், திருமண நிகழ்ச்சிகள் இல்லாத போதும் கூட தேங்காய் விலை 20-ரூபாய்க்கு விற்பனை செய்யப்பட்டது.



ஆனால் 20-ஆண்டுகள் இல்லாத விலை வீழ்ச்சி ஏற்பட்டு, தற்போது தேங்காய் ரூ.6-ரூபாய்க்கு விற்பனை செய்யப்படுகிறது.

அதே போல் 3-ரூபாய்க்கு விற்பனை செய்யப்பட்ட தேங்காய் மட்டை இப்போது 40-பைசாவுக்கு விற்பனை ஆகிறது. இந்த விலை வீழ்ச்சி விவசாயிகள் வாழ்வாதாரத்தை கேள்விக்குறியாக்கி உள்ளது என, குற்றம் சாட்டிய பொள்ளாச்சி ஜெயராமன்,

தென்னை நார் தொழிற்சாலைகளில் உற்பத்தி செய்யப்படும் நார், காயர் பித்து போன்ற ஏற்றுமதி பொருட்கள் கண்டெய்னர் வசதி இல்லாததால் தேக்கமடைந்து, கடுமையான விலை வீழ்ச்சி ஏற்பட்டுள்ளது.

எனவே மத்திய மாநில அரசுகள் உடனடியாக தென்னை நாற்பொருள்கள் ஏற்றுமதி செய்ய கண்டெய்னர் வசதியை ஏற்படுத்தி தர வேண்டும். விவசாயிகளிடமிருந்து கொப்பரை கொள்முதல் செய்யப்பட்டு ஒரு மாதத்திற்கு மேலாகியும் விவசாயிகளுக்கு பணம் வழங்கப்படவில்லை, இதனால், விவசாயிகள் வெளி மார்க்கெட்டுக்கு செல்ல வேண்டிய நிலை ஏற்பட்டுள்ளது.

அரசு நிர்ணயித்த விலையை விட குறைந்த விலைக்கு கொள்முதல் செய்வதால், கொப்பரை விவசாயிகள் பாதிக்கப்படுகிறார்கள் எனவே கொப்பரை கொள்முதல் காலத்தை நீடித்து உடனடியாக கொள்முதல் செய்ய வேண்டும், இல்லை என்றால் போராட்டங்கள் நடத்தப்படும் என்று தெரிவித்தார்.

Newsletter

கோவையில் தொடங்கிய இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் மக்கள் சந்திப்பு நடைப்பயணம்

மத்திய அரசின் மக்கள் விரோதக் கொள்கைகளை எதிர்த்தும், தொழிலாளர்களுக்கு எதிராக கொண்டு வரப்பட்டுள்ள தொழிலாளர் சட்டங்களை திரு...

தங்க நகை வழிப்பறி வழக்கு: குற்றவாளிக்கு 7 ஆண்டு சிறை; ரூ.5,000 அபராதம் - கோவை நீதிமன்றம் தீர்ப்பு

கடந்த 2020 ஆம் ஆண்டு கோவையில் 100 கிராம் தங்க நகையை கத்தி முனையில் வழிப்பறி செய்த வழக்கில் குற்றம் நிரூபிக்கப்பட்ட இளைஞர...

கிணத்துக்கடவு அருகே வாலிபர் கொடூரக் கொலை

கோவை மாவட்டம் பொள்ளாச்சியை அடுத்த சிக்கலாம்பாளையம் பகுதியைச் சேர்ந்த அஸ்வின் (22) என்ற வாலிபாரின் வீட்டிற்குள் நள்ளிரவில...

அரசூர் துணை மின் நிலையத்தில் நாளை (07.08.2026) மின்தடை

கோவையில் அரசூர் துணை மின் நிலையத்தில் நாளை காலை 9 மணி முதல் மாலை 5 மணி வரை மாதாந்திர பராமரிப்பு பணிகள் நடைபெறுவதால் செல்...

கதிர்நாயக்கன்பாளையம் துணை மின் நிலையத்தில் நாளை (07.08.2026) மின்தடை

கோவை கதிர்நாயக்கன்பாளையம் துணை மின் நிலையத்தில் நாளை மாதாந்திர பராமரிப்பு பணிகள் காலை 9 முதல் மாலை 5 மணி வரை நடைபெறும்....

பேருந்தில் கல்லூரி மாணவிக்கு பாலியல் தொல்லை; கோவையில் காவலர் கைது

பொள்ளாச்சியில் இருந்து கோவை வந்த பேருந்தில் பயணித்த கல்லூரி மாணவிக்கு பாலியல் தொல்லை அளித்ததாக, போத்தனூர் காவல் நிலைய கு...