கோவை பொள்ளாச்சி அருகே ஆசிரியர் வீட்டில் 44.5-சவரன் நகை மற்றும் 20-லட்சம் பணம் கொள்ளை..!

புகாரின் பேரில் மாவட்ட காவல்துறை கண்காணிப்பாளர் பத்ரி நாராயணன் உத்தரவின்படி, தாலுகா காவல் நிலைய ஆய்வாளர் தலைமையில் 3-தனிப்படைகள் அமைத்து கொள்ளையர்களை தேடி வருகின்றனர்.


கோவை: பொள்ளாச்சி அருகே ஆசிரியர் வீட்டில் 44.5 சவரன் நகை மற்றும் 20 லட்சம் பணம் கொள்ளை போன சம்பவம் தொடர்பாக, 3 தனிப்படை அமைத்து போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

பொள்ளாச்சி அருகே உள்ள கோவை ரோடு நஞ்சேகவுண்டன் புதூர் பகுதியை சேர்ந்தவர் சரவணகுமார் (49). இவர் பழனியில் உள்ள அரசு பள்ளியில் ஆசிரியராக பணியாற்றி வருகிறார்.

இவரது மனைவி ஜெயசித்ரா(48), ரியல் எஸ்டேட் தொழில் செய்து வருகிறார். இவர்களது, மகளின் பூப்பு நீராட்டு விழா நிகழ்ச்சிக்காக சொந்த ஊரான பழனிக்கு கடந்த ஞாயிற்றுக்கிழமை 10ஆம் தேதி அன்று குடும்பத்துடன் சென்றனர்.



இந்நிலையில், திங்கட்கிழமை காலை வீட்டில் பணியாற்றிக்கொண்டிருந்த காவலர் வீட்டின் கதவுகள் உடைக்கப்பட்டு இருப்பதை கண்டு சரவணகுமார் மற்றும் போலீசாருக்கு தகவல் கொடுத்தார். தகவலை அடுத்து ஊர் திரும்பிய சரவணகுமார் மற்றும் குடும்பத்தினர், வீட்டில் சென்று பார்த்தபோது, பீரோவில் இருந்த 44.5 சவரன் தங்க நகைகள் மற்றும் சுமார் 20 லட்சம் பணம் கொள்ளை போனது தெரியவந்தது.

இதையடுத்து, சரவணகுமாரின் மனைவி ஜெயசித்ரா கொடுத்த புகாரின் பேரில், வடக்கிபாளையம் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

மேலும் மாவட்ட காவல்துறை கண்காணிப்பாளர் பத்ரி நாராயணன் உத்தரவின் பேரில், தாலுகா காவல் நிலைய ஆய்வாளர் சாந்தி தலைமையில் 3 தனிப்படைகள் அமைத்து கொள்ளையர்களை தேடி வருகின்றனர்.

Newsletter

உலக புகையிலை ஒழிப்பு தினம்: போத்தனூர்-வெள்ளலூர் பகுதியில் காவல்துறை விழிப்புணர்வு முகாம்

உலக புகையிலை ஒழிப்பு தினத்தையொட்டி கோவை போத்தனூர் காவல் நிலையத்தின் சார்பில் வெள்ளலூர் குடியிருப்பு பகுதியில் போதைப்பொரு...

பேரூர் கோவிலில் ரூ.1.40 கோடி புதிய திருத்தேர்: பாலக்கால் பூஜையுடன் திருப்பணி தொடக்கம்

கோவை பேரூர் பட்டீஸ்வரர் கோவிலில் ரூ.1.40 கோடி மதிப்பீட்டில் புதிய திருத்தேர் அமைக்கும் திருப்பணிக்கான பாலக்கால் பூஜை நடை...

கோவையில் நெடுஞ்சாலைத்துறை வளர்ச்சி திட்டங்கள் குறித்து அமைச்சர் ஆதவ் அர்ஜுனா ஆய்வு

கோவை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் பொதுப்பணித்துறை அமைச்சர் ஆதவ் அர்ஜுனா நெடுஞ்சாலைத்துறை வளர்ச்சி திட்ட பணிகள் குறித்து...

கோவையில் சர்வதேச மாநாட்டில் சிறந்த அறிவியல் சிந்தனைகளுக்கு ரூ.1 லட்சம் பரிசு

கோவை தொழில்நுட்பக் கல்லூரியில் ஜூன் 3 முதல் 5 வரை நடைபெறும் AMCEHA 2026 சர்வதேச மாநாட்டில், சிறந்த அறிவியல் சிந்தனை மற்ற...

கோவை நேரு உள்விளையாட்டு அரங்கில் அமைச்சர் ஆதவ் அர்ஜுனா ஆய்வு

கோவையில் விளையாட்டு மற்றும் பொதுப்பணி துறை அமைச்சர் ஆதவ் அர்ஜுனா நேரு உள்விளையாட்டு அரங்கில் கபடி வீரர்களைச் சந்தித்து அ...

கோவையில் தடை செய்யப்பட்ட புகையிலை பொருட்கள் பறிமுதல்; 4 பேர் கைது

கோவை மாநகரில் தடை செய்யப்பட்ட குட்கா மற்றும் புகையிலைப் பொருட்கள் விற்பனையை தடுக்க போலீசார் நடத்திய சோதனையில், வெவ்வேறு...