'தேங்காய் விலை வீழ்ச்சி' கோவை பொள்ளாச்சியில் தமிழ்நாடு தென்னை உற்பத்தியாளர்கள் சங்க கூட்டமைப்பு சார்பில் கவன ஈர்ப்பு ஆர்ப்பாட்டம்..!

தமிழகத்தில் உள்ள ரேஷன் கடைகளில் பாமாயிலுக்கு பதிலாக தேங்காய் எண்ணெய் வழங்கவும், சத்துணவு திட்டத்தில் தேங்காய் எண்ணெயைப் பயன்படுத்த நடவடிக்கை எடுக்க வேண்டும் உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.


கோவை: தேங்காய் விலை வீழ்ச்சியை கட்டுப்படுத்த வேண்டும், உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி பொள்ளாச்சியில் தென்னை உற்பத்தியாளர்கள் சார்பில் கவன ஈர்ப்பு ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.

தேங்காய் விலை வீழ்ச்சியை கட்டுப்படுத்த வேண்டும், கொப்பரை கொள்முதல் விலையை குறைந்தபட்ச ஆதார விலை 1 கிலோவுக்கு 105.90 லிருந்து ரூ.150 க்கு மத்திய அரசு உயர்த்த வேண்டும். தமிழக அரசு விவசாயிகளிடம் இருந்து நேரடியாக தேங்காய் கொள்முதல் செய்ய வேண்டும்.

தமிழகத்தில் உள்ள ரேஷன் கடைகளில் பாமாயிலுக்கு பதிலாக தேங்காய் எண்ணெய் வழங்கவும், சத்துணவு திட்டத்தில் தேங்காய் எண்ணெய்யைப் பயன்படுத்தவும் நடவடிக்கை எடுக்க வேண்டும், உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி தமிழ்நாடு தென்னை உற்பத்தியாளர்கள் சங்க கூட்டமைப்பு சார்பில் பொள்ளாச்சி-பல்லடம் சாலை ராஜேஸ்வரி திடலில் கவன ஈர்ப்பு ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.



இந்த ஆர்ப்பாட்டத்தில், கோவை திருப்பூர் மாவட்டத்தை சேர்ந்த ஆயிரக்கணக்கான விவசாயிகள் கலந்து கொண்டனர். ஆர்ப்பாட்டத்தின் போது தேங்காய் விலை வீழ்ச்சியை கட்டுப்படுத்த வேண்டும் உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி விவசாயிகள் கண்டன கோஷங்கள் எழுப்பினர்.



ஆர்ப்பாட்டத்தில் பொள்ளாச்சி சட்டமன்ற உறுப்பினர் பொள்ளாச்சி ஜெயராமன், வால்பாறை சட்டமன்ற உறுப்பினர் அமுல் கந்தசாமி, கிணத்துக்கடவு சட்டமன்ற உறுப்பினர் தாமோதரன் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.

Newsletter

கோவையில் தொடங்கிய இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் மக்கள் சந்திப்பு நடைப்பயணம்

மத்திய அரசின் மக்கள் விரோதக் கொள்கைகளை எதிர்த்தும், தொழிலாளர்களுக்கு எதிராக கொண்டு வரப்பட்டுள்ள தொழிலாளர் சட்டங்களை திரு...

தங்க நகை வழிப்பறி வழக்கு: குற்றவாளிக்கு 7 ஆண்டு சிறை; ரூ.5,000 அபராதம் - கோவை நீதிமன்றம் தீர்ப்பு

கடந்த 2020 ஆம் ஆண்டு கோவையில் 100 கிராம் தங்க நகையை கத்தி முனையில் வழிப்பறி செய்த வழக்கில் குற்றம் நிரூபிக்கப்பட்ட இளைஞர...

கிணத்துக்கடவு அருகே வாலிபர் கொடூரக் கொலை

கோவை மாவட்டம் பொள்ளாச்சியை அடுத்த சிக்கலாம்பாளையம் பகுதியைச் சேர்ந்த அஸ்வின் (22) என்ற வாலிபாரின் வீட்டிற்குள் நள்ளிரவில...

அரசூர் துணை மின் நிலையத்தில் நாளை (07.08.2026) மின்தடை

கோவையில் அரசூர் துணை மின் நிலையத்தில் நாளை காலை 9 மணி முதல் மாலை 5 மணி வரை மாதாந்திர பராமரிப்பு பணிகள் நடைபெறுவதால் செல்...

கதிர்நாயக்கன்பாளையம் துணை மின் நிலையத்தில் நாளை (07.08.2026) மின்தடை

கோவை கதிர்நாயக்கன்பாளையம் துணை மின் நிலையத்தில் நாளை மாதாந்திர பராமரிப்பு பணிகள் காலை 9 முதல் மாலை 5 மணி வரை நடைபெறும்....

பேருந்தில் கல்லூரி மாணவிக்கு பாலியல் தொல்லை; கோவையில் காவலர் கைது

பொள்ளாச்சியில் இருந்து கோவை வந்த பேருந்தில் பயணித்த கல்லூரி மாணவிக்கு பாலியல் தொல்லை அளித்ததாக, போத்தனூர் காவல் நிலைய கு...