கோவை மாநகராட்சியில் 'நகரங்களின் தூய்மைக்கான மக்கள் இயக்கம்' சார்பில் மரக்கன்றுகள் நடும் பணி தொடக்கம்..!

வார்டு எண்.68 க்குட்பட்ட வடகோவை மாநகராட்சி மேல்நிலைப்பள்ளி வளாகத்தில் நகரங்களின் தூய்மைக்கான மக்கள் இயக்கம் சார்பில் தூய்மை தூதுவர்கள் மரக்கன்றுகள் நடும் பணியினை மேயர், மாநகராட்சி ஆணையாளர் ஆகியோர் தொடங்கி வைத்தார்கள்.


கோவை: கோவை மாநகராட்சியில் 'நகரங்களின் தூய்மைக்கான மக்கள் இயக்கம்' சார்பில் மரக்கன்றுகள் நடும் பணியை மேயர் கல்பனா ஆனந்தகுமார், மாநகராட்சி ஆணையாளர் மு.பிரதாப் ஆகியோர் தொடங்கி வைத்தனர்.



கோவை மாநகராட்சி மத்திய மண்டலம், வார்டு எண்.68 க்குட்பட்ட வடகோவை மாநகராட்சி மேல்நிலைப் பள்ளியில் நகரங்களின் தூய்மைக்கான மக்கள் இயக்கம் சார்பில் விழிப்புணர்வு ஓவியத்தை மேயர் கல்பனா ஆனந்தகுமார், தொடங்கி வைத்தார்.



இதையடுத்து, மாநகராட்சி மத்திய மண்டலம், வார்டு எண்.68 க்குட்பட்ட வடகோவை மாநகராட்சி மேல்நிலைப் பள்ளியில் நகரங்களின் தூய்மைக்கான மக்கள் இயக்கம் சார்பில் விழிப்புணர்வு வாசகங்கள் மற்றும் ஓவியப் போட்டிகளில் வெற்றி பெற்றவர்களுக்கு மேயர் கல்பனா ஆனந்தகுமார், மாநகராட்சி ஆணையாளர் மு.பிரதாப் ஆகியோர் பரிசுகள் வழங்கினார்.

பின்னர், கோவை மாநகராட்சி மத்திய மண்டலம், வார்டு எண்.68 க்குட்பட்ட வடகோவை மாநகராட்சி மேல்நிலைப்பள்ளி வளாகத்தில் நகரங்களின் தூய்மைக்கான மக்கள் இயக்கம் சார்பில் தூய்மை தூதுவர்கள் மரக்கன்றுகள் நடும் பணியினை மேயர் கல்பனா ஆனந்தகுமார், மாநகராட்சி ஆணையாளர் மு.பிரதாப் ஆகியோர் தொடங்கி வைத்தார்கள்.



இந்நிகழ்வில், மாநகராட்சி ஆணையாளர் மு.பிரதாப், துணை மேயர் ரா.வெற்றிசெல்வன், மாநகராட்சி துணை ஆணையாளர் மோ.ஷர்மிளா, மத்திய மண்டல தலைவர் மீனா லோகு, பொது சுகாதாரக் குழு தலைவர் பெ.மாரிச்செல்வன், பணிக்குழு தலைவர் சாந்தி முருகன், மாமன்ற உறுப்பினர்கள் கமலாவதி போஸ், பிரபா ரவீந்திரன், வித்யா, நகர்நல அலுவலர் பிரதீப் வா.கிருஷ்ணகுமார், உதவி நகர் நல அலுவலர் ராம்குமார், சுகாதார ஆய்வாளர்கள் சந்திரன், முருகன், ஜெரால்டு சத்ய புனிதன் ஆகியோர் உடன் இருந்தனர்.

Newsletter

உலக புகையிலை ஒழிப்பு தினம்: போத்தனூர்-வெள்ளலூர் பகுதியில் காவல்துறை விழிப்புணர்வு முகாம்

உலக புகையிலை ஒழிப்பு தினத்தையொட்டி கோவை போத்தனூர் காவல் நிலையத்தின் சார்பில் வெள்ளலூர் குடியிருப்பு பகுதியில் போதைப்பொரு...

பேரூர் கோவிலில் ரூ.1.40 கோடி புதிய திருத்தேர்: பாலக்கால் பூஜையுடன் திருப்பணி தொடக்கம்

கோவை பேரூர் பட்டீஸ்வரர் கோவிலில் ரூ.1.40 கோடி மதிப்பீட்டில் புதிய திருத்தேர் அமைக்கும் திருப்பணிக்கான பாலக்கால் பூஜை நடை...

கோவையில் நெடுஞ்சாலைத்துறை வளர்ச்சி திட்டங்கள் குறித்து அமைச்சர் ஆதவ் அர்ஜுனா ஆய்வு

கோவை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் பொதுப்பணித்துறை அமைச்சர் ஆதவ் அர்ஜுனா நெடுஞ்சாலைத்துறை வளர்ச்சி திட்ட பணிகள் குறித்து...

கோவையில் சர்வதேச மாநாட்டில் சிறந்த அறிவியல் சிந்தனைகளுக்கு ரூ.1 லட்சம் பரிசு

கோவை தொழில்நுட்பக் கல்லூரியில் ஜூன் 3 முதல் 5 வரை நடைபெறும் AMCEHA 2026 சர்வதேச மாநாட்டில், சிறந்த அறிவியல் சிந்தனை மற்ற...

கோவை நேரு உள்விளையாட்டு அரங்கில் அமைச்சர் ஆதவ் அர்ஜுனா ஆய்வு

கோவையில் விளையாட்டு மற்றும் பொதுப்பணி துறை அமைச்சர் ஆதவ் அர்ஜுனா நேரு உள்விளையாட்டு அரங்கில் கபடி வீரர்களைச் சந்தித்து அ...

கோவையில் தடை செய்யப்பட்ட புகையிலை பொருட்கள் பறிமுதல்; 4 பேர் கைது

கோவை மாநகரில் தடை செய்யப்பட்ட குட்கா மற்றும் புகையிலைப் பொருட்கள் விற்பனையை தடுக்க போலீசார் நடத்திய சோதனையில், வெவ்வேறு...