'பாதசாரிகளுக்கு வழி விடுங்கள்...!' போக்குவரத்து விதிமுறைகள் குறித்து கோவை Ksirs பள்ளி மாணவ மாணவிகள் விழிப்புணர்வு

போக்குவரத்து விதிகளை மதித்து, விபத்துக்களை தவிர்ப்போம் என்பதை வலியுறுத்தி, கோவை KSirs பள்ளியை சேர்ந்த பள்ளி மாணவ மாணவிகள், கோவை மாநகர போக்குவரத்து காவல்துறையுடன் இணைந்து லட்சுமி மில்ஸ் பகுதியில் விழிப்புணர்வு ஏற்படுத்தினர்.



கோவை: கோவை சின்னவேடம்பட்டி பகுதியில் செயல்பட்டு வரும் KSirsஎன்ற தனியார் பள்ளியை சேர்ந்த மாணவ - மாணவிகள், போக்குவரத்து விதிகளை பின்பற்ற வேண்டியஅவசியத்தை குறித்து பொதுமக்களிடம் விழிப்புணர்வு ஏற்படுத்தினர்.



சாலை விபத்துக்கள் நடக்க முக்கியகாரணமாக கருதப்படுவது,போக்குவரத்து விதிமீறல்கள் தான். குறிப்பாக, சிக்னல்களில் நிற்க பொறுமை இல்லாமல், சிவப்பு விளக்கு குறியீட்டை மீறி, வாகனங்களை இயக்குவதால், எதிர்புரம் வரும் வாகனங்கள் மற்றும் பாதசாரிகள் மீது மோதி விபத்துகள் மற்றும் உயிர் சேதம் ஏற்படும் அபாயம் உள்ளது.

எனவே, போக்குவரத்து விதிகளை மதித்து, விபத்துக்களை தவிர்ப்போம் என்பதை வலியுறுத்தி, கோவை KSirs பள்ளியை சேர்ந்த பள்ளி மாணவ மாணவிகள் விழிப்புணர்வுஏற்படுத்தினர். அதன்படி, கோவை மாநகர போக்குவரத்து காவல்துறையுடன் இணைந்து லட்சுமி மில்ஸ் பகுதியில் சாலை பாதுகாப்பு மற்றும் சாலை விதிமுறைகள் குறித்து பதாகைகள் ஏந்தி மாணவ மாணவிகள் விழிப்புணர்வு ஏற்படுத்தினர்.



நிகழ்ச்சியை கொடியசைத்து துவக்கி வைத்த கோவை மாநகர காவல் ஆணையாளர் பாலகிருஷ்ணன், வாகன ஓட்டிகளிடம் போக்குவரத்து விதிமுறைகள் குறித்தும் பாதுகாப்புடன் வாகனங்களை இயக்கும் முறைகள் குறித்து விளக்கமளித்தார்.



அப்பள்ளியை சேர்ந்த மாணவ மாணவிகள் சாலை பாதுகாப்பு போக்குவரத்து விதிமுறைகள் குறித்து பல்வேறு வாசகங்கள் அடங்கிய பதாகைகளை ஏந்தி பொதுமக்களிடையே விழிப்புணர்வு ஏற்படுத்தினர்.



விழிப்புணர்வு நிகழ்ச்சியின் ஒரு பகுதியாக, "Travel Safe with Road Discipline", என்ற பேட்ஜ்கள் வாகன ஓட்டிகளுக்கு வழங்கப்பட்டது.

இந்நிகழ்வில், போக்குவரத்து துணை ஆணையர் மதிவாணன் உட்பட பள்ளி தாளாளர்கள், லலிதா பிரகாஷ், தேவ பிரகாஷ், ஆசிரியர்கள் மற்றும் பள்ளிநிர்வாகத்தினர் என பலர் கலந்து கொண்டனர்.







Newsletter

கோவையில் தொடங்கிய இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் மக்கள் சந்திப்பு நடைப்பயணம்

மத்திய அரசின் மக்கள் விரோதக் கொள்கைகளை எதிர்த்தும், தொழிலாளர்களுக்கு எதிராக கொண்டு வரப்பட்டுள்ள தொழிலாளர் சட்டங்களை திரு...

தங்க நகை வழிப்பறி வழக்கு: குற்றவாளிக்கு 7 ஆண்டு சிறை; ரூ.5,000 அபராதம் - கோவை நீதிமன்றம் தீர்ப்பு

கடந்த 2020 ஆம் ஆண்டு கோவையில் 100 கிராம் தங்க நகையை கத்தி முனையில் வழிப்பறி செய்த வழக்கில் குற்றம் நிரூபிக்கப்பட்ட இளைஞர...

கிணத்துக்கடவு அருகே வாலிபர் கொடூரக் கொலை

கோவை மாவட்டம் பொள்ளாச்சியை அடுத்த சிக்கலாம்பாளையம் பகுதியைச் சேர்ந்த அஸ்வின் (22) என்ற வாலிபாரின் வீட்டிற்குள் நள்ளிரவில...

அரசூர் துணை மின் நிலையத்தில் நாளை (07.08.2026) மின்தடை

கோவையில் அரசூர் துணை மின் நிலையத்தில் நாளை காலை 9 மணி முதல் மாலை 5 மணி வரை மாதாந்திர பராமரிப்பு பணிகள் நடைபெறுவதால் செல்...

கதிர்நாயக்கன்பாளையம் துணை மின் நிலையத்தில் நாளை (07.08.2026) மின்தடை

கோவை கதிர்நாயக்கன்பாளையம் துணை மின் நிலையத்தில் நாளை மாதாந்திர பராமரிப்பு பணிகள் காலை 9 முதல் மாலை 5 மணி வரை நடைபெறும்....

பேருந்தில் கல்லூரி மாணவிக்கு பாலியல் தொல்லை; கோவையில் காவலர் கைது

பொள்ளாச்சியில் இருந்து கோவை வந்த பேருந்தில் பயணித்த கல்லூரி மாணவிக்கு பாலியல் தொல்லை அளித்ததாக, போத்தனூர் காவல் நிலைய கு...