JEE-நிலைத் தேர்வில் கோவையை சேர்ந்த மாணவி தமிழகத்தில் முதலிடம்..!

கோவையைச் சேர்ந்த தீக்‌ஷா திவாகர் என்ற மாணவி 100-க்கு 99.998 மதிப்பெண்கள் பெற்று தமிழக அளவில் முதலிடம் பிடித்துள்ளார்.


கோவை:JEE-நிலைத் தேர்வில் கோவையை சேர்ந்த மாணவி தமிழகத்தில் முதலிடம் பிடித்துள்ளார்.

மத்திய பொறியியல், தொழில்நுட்ப கல்வி நிறுவனங்களான ஐஐடி, ஐஐஐடி, என்ஐடி போன்ற உயர் தொழில் நுட்ப கல்வி நிறுவனங்களில் இளநிலைப் பொறியியல், தொழில்நுட்ப பட்டப்படிப்புகளில் சேருவதற்கு ஜேஇஇ எனப்படும் நுழைவுத் தேர்வு முதல் நிலை தேர்வு மற்றும் முதன்மை தேர்வு என இருகட்டமாக நடத்தப்பட்டு வருகிறது.

முதல்நிலை தேர்வில் தகுதி பெறுபவர்கள் என்.ஐ.டி. ஐஐஐடி உயர்கல்வி நிறுவனங்களில் சேர்க்கை பெறும் தகுதியை பெறுவார்கள். தற்காக நடத்தப்படும் முதல்நிலை தகுதி தேர்வில் வெற்றி பெறுபவர்களில் முதல் இரண்டரை லட்சம் பேர் முதன்மை தேர்வை எழுதலாம்.

இந்த முதன்மை தகுதி தேர்வில் தேர்ச்சி பெறுபவர்கள் மட்டுமே ஐஐடி கல்வி நிறுவனங்களில் சேர முடியும். முதற்கட்டமாக நடத்தப்பட்ட முதல் நிலை தேர்வை 7 லட்சத்து 69 பேர் எழுதினர்.

இதில் கோவையைச் சேர்ந்த தீக்‌ஷா திவாகர் என்ற மாணவி100-க்கு 99.998 மதிப்பெண்கள் பெற்று தமிழக அளவில் முதலிடம் பிடித்துள்ளார்.கோவை காளப்பட்டி சாலையில் உள்ள சுகுணா பிப் பள்ளியில் பயின்ற மாணவிக்கு பள்ளி சார்பாக பாராட்டு விழா நடைபெற்றது. இதில் பள்ளியின் தாளாளர் சுகுணா லட்சுமி,மற்றும் சுகுணா குழுமங்களின் தலைவர் லட்சுமி நாராயணசாமி மற்றும் மாணவியின் பெற்றோர் ஆகியோர் கலந்து மாணவிக்கு வாழ்த்துக்களை தெரிவித்தனர்.

இதில் செய்தியாளர்களை சந்தித்த தீக்‌ஷா திவாகர்தேர்வு கடினமாக இருந்த போதும்முக்கிய விடைகளைப் பார்த்ததும், அதிக மதிப்பெண்கள் எடுப்பேன் என்ற நம்பிக்கை ஏற்பட்டது எனவும் தெரிவித்தார்.மேலும் இந்த சாதனை புரிய உதவிய எனது பெற்றோர்கள், ஆசிரியர்கள், பள்ளி நிர்வாகம் என அனைவருக்கும் எனது நன்றிகளை தெரிவிப்பதாக கூறினார்.

Newsletter

கோவையில் தொடங்கிய இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் மக்கள் சந்திப்பு நடைப்பயணம்

மத்திய அரசின் மக்கள் விரோதக் கொள்கைகளை எதிர்த்தும், தொழிலாளர்களுக்கு எதிராக கொண்டு வரப்பட்டுள்ள தொழிலாளர் சட்டங்களை திரு...

தங்க நகை வழிப்பறி வழக்கு: குற்றவாளிக்கு 7 ஆண்டு சிறை; ரூ.5,000 அபராதம் - கோவை நீதிமன்றம் தீர்ப்பு

கடந்த 2020 ஆம் ஆண்டு கோவையில் 100 கிராம் தங்க நகையை கத்தி முனையில் வழிப்பறி செய்த வழக்கில் குற்றம் நிரூபிக்கப்பட்ட இளைஞர...

கிணத்துக்கடவு அருகே வாலிபர் கொடூரக் கொலை

கோவை மாவட்டம் பொள்ளாச்சியை அடுத்த சிக்கலாம்பாளையம் பகுதியைச் சேர்ந்த அஸ்வின் (22) என்ற வாலிபாரின் வீட்டிற்குள் நள்ளிரவில...

அரசூர் துணை மின் நிலையத்தில் நாளை (07.08.2026) மின்தடை

கோவையில் அரசூர் துணை மின் நிலையத்தில் நாளை காலை 9 மணி முதல் மாலை 5 மணி வரை மாதாந்திர பராமரிப்பு பணிகள் நடைபெறுவதால் செல்...

கதிர்நாயக்கன்பாளையம் துணை மின் நிலையத்தில் நாளை (07.08.2026) மின்தடை

கோவை கதிர்நாயக்கன்பாளையம் துணை மின் நிலையத்தில் நாளை மாதாந்திர பராமரிப்பு பணிகள் காலை 9 முதல் மாலை 5 மணி வரை நடைபெறும்....

பேருந்தில் கல்லூரி மாணவிக்கு பாலியல் தொல்லை; கோவையில் காவலர் கைது

பொள்ளாச்சியில் இருந்து கோவை வந்த பேருந்தில் பயணித்த கல்லூரி மாணவிக்கு பாலியல் தொல்லை அளித்ததாக, போத்தனூர் காவல் நிலைய கு...