கோவை நீலாம்பூரில் பெட்டி கடையில் இருந்து 65 கிலோ குட்கா பறிமுதல் - உணவு பாதுகாப்புத்துறை அதிகாரிகள் திடீர் சோதனை..!

நீலம்பூர் அண்ணா நகர் பகுதியில் உள்ள பெட்டிக் கடையில் ஆய்வு செய்த அலுவலர்கள், அங்கிருந்து 65 கிலோ எடையுள்ள, ரூ.1.15 லட்சம் மதிப்பிலான தடைசெய்யப்பட்ட பல வகையான புகையிலை பொருட்களை பறிமுதல் செய்தனர்.


கோவை: கோவை நீலம்பூரில் ரூ.1.15 லட்சம்மதிப்புள்ள65 கிலோ தடை செய்யப்பட்ட புகையிலை பொருட்களை , உணவு பாதுகாப்பு துறையினர் பறிமுதல் செய்தனர்.

மாவட்ட உணவு பாதுகாப்பு நியமன அலுவலர் தமிழ்ச்செல்வன் தலைமையில், சூலூர் வட்டார உணவு பாதுகாப்பு அலுவலர் செல்வ பாண்டியன் சிங்காநல்லூர் பகுதி அலுவலர் செந்தில்குமார் ஆகியோர் நீலாம்பூரில் பகுதியில் உள்ள கடைகளில் சோதனை நடத்தினர்.

அப்போது, அண்ணா நகர் பகுதியில் உள்ள பெட்டிக் கடையில் ஆய்வு செய்த அலுவலர்கள், அங்கு தடை செய்யப்பட்ட புகையிலை பொருட்கள்விற்பனைக்கு இருப்பது கண்டுபிடிக்கப்பட்டது.

அந்த கடையில் இருந்து 65 கிலோ எடையுள்ள, ரூ.1.15லட்சம் மதிப்பிலான தடைசெய்யப்பட்ட பல வகையான புகையிலை பொருட்களை பறிமுதல் செய்தனர். பறிமுதல் செய்யப்பட்ட பொருட்களில் இருந்துஒரு பகுதியை ஆய்வுக்கு எடுத்த அதிகாரிகள், உதயகுமாரை சூலுார் போலீசாரிடம் ஒப்படைத்தனர்.

மாதிரி பகுப்பாய்வு அறிக்கையின் அடிப்படையில் சம்மந்தப்பட்ட நபர் மீது, உணவு பாதுகாப்பு துறைசார்பில், சட்டப்படி நடவடிக்கை எடுக்கப்படும், என அதிகாரிகள் கூறினர்.

Newsletter

உலக புகையிலை ஒழிப்பு தினம்: போத்தனூர்-வெள்ளலூர் பகுதியில் காவல்துறை விழிப்புணர்வு முகாம்

உலக புகையிலை ஒழிப்பு தினத்தையொட்டி கோவை போத்தனூர் காவல் நிலையத்தின் சார்பில் வெள்ளலூர் குடியிருப்பு பகுதியில் போதைப்பொரு...

பேரூர் கோவிலில் ரூ.1.40 கோடி புதிய திருத்தேர்: பாலக்கால் பூஜையுடன் திருப்பணி தொடக்கம்

கோவை பேரூர் பட்டீஸ்வரர் கோவிலில் ரூ.1.40 கோடி மதிப்பீட்டில் புதிய திருத்தேர் அமைக்கும் திருப்பணிக்கான பாலக்கால் பூஜை நடை...

கோவையில் நெடுஞ்சாலைத்துறை வளர்ச்சி திட்டங்கள் குறித்து அமைச்சர் ஆதவ் அர்ஜுனா ஆய்வு

கோவை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் பொதுப்பணித்துறை அமைச்சர் ஆதவ் அர்ஜுனா நெடுஞ்சாலைத்துறை வளர்ச்சி திட்ட பணிகள் குறித்து...

கோவையில் சர்வதேச மாநாட்டில் சிறந்த அறிவியல் சிந்தனைகளுக்கு ரூ.1 லட்சம் பரிசு

கோவை தொழில்நுட்பக் கல்லூரியில் ஜூன் 3 முதல் 5 வரை நடைபெறும் AMCEHA 2026 சர்வதேச மாநாட்டில், சிறந்த அறிவியல் சிந்தனை மற்ற...

கோவை நேரு உள்விளையாட்டு அரங்கில் அமைச்சர் ஆதவ் அர்ஜுனா ஆய்வு

கோவையில் விளையாட்டு மற்றும் பொதுப்பணி துறை அமைச்சர் ஆதவ் அர்ஜுனா நேரு உள்விளையாட்டு அரங்கில் கபடி வீரர்களைச் சந்தித்து அ...

கோவையில் தடை செய்யப்பட்ட புகையிலை பொருட்கள் பறிமுதல்; 4 பேர் கைது

கோவை மாநகரில் தடை செய்யப்பட்ட குட்கா மற்றும் புகையிலைப் பொருட்கள் விற்பனையை தடுக்க போலீசார் நடத்திய சோதனையில், வெவ்வேறு...