கிரைண்டர்களுக்கான ஜி.எஸ்.டி., வரி உயர்வு: கோவையில் ஆயிரக்கணக்கான தொழிலாளர்கள் வாழ்வாதாரம் பாதிப்பு

ஜிஎஸ்டி வரி உயர்வு காரணமாக எதிர்வரும் நாட்களில் வீட்டு பயன்பாடுக்கு விற்பனை செய்யப்படும் கிரைண்டர்களின் விற்பனை கடுமையாக பாதிக்கப்படும். பெரும்பாலான மக்கள் ரெடிமேட் இட்லி, தோசை மாவு வாங்க துவங்குவர். இதனால், கிரைண்டர் தயாரிப்பு தொழிலில் நேரடியாகவும் மறைமுகமாகவும் ஈடுபட்டுள்ள பல்லாயிரக்கணக்கான தொழிலாளர்களின் வாழ்வாதாரம் கேள்விக்குறியாகும்.


கோவை: கிரைண்டர்களுக்கு விதிக்கப்பட்டு இருந்த ஜிஎஸ்டி வரி 5 சதவீதத்திலிருந்து 18 சதவீதமாக அதிகரித்த காரணத்தால், ஆயிரக்கணக்கான தொழிலாளர்களின் வாழ்வாதாரம் பாதிக்கப்படும். எனவே, மக்கள் நலன் கருதி உடனடியாக வரியை குறைக்க மத்திய அரசுக்கு தொழில்துறையினர் கோரிக்கை விடுத்துள்ளனர்.

இது குறித்து கருத்து தெரிவித்துள்ள கோவை வெட் கிரைண்டர் மற்றும் உதிரிபாகங்கள் தயாரிப்பாளர்கள் சங்கத்தின்(COWMA), முன்னாள் தலைவர், சாஸ்தா.எம்.ராஜா கூறியதாவது:-



தொழில் நகரான கோவை, கிரைண்டர்கள் தயாரிப்பில் சர்வதேச அளவில் புகழ்பெற்று விளங்குகிறது. கிரைண்டர்கள் மற்றும் உதிரி பாகங்கள் தயாரிப்பில் 30 ஆயிரத்துக்கும் மேற்பட்ட தொழில் நிறுவனங்கள் ஈடுபட்டுள்ளன. நேரடியாகவும், மறைமுகமாகவும் 50 ஆயிரத்துக்கும் மேற்பட்ட தொழிலாளர்கள் இத்துறையில் வேலை வாய்ப்பு பெற்றுள்ளனர்.

வீட்டு பயன்பாட்டுக்கு 5 வகை மற்றும் வணிக பயன்பாட்டுக்கு இரண்டு வகை என பல்வேறு மாடல்களில் கிரைண்டர்கள் கோவை மாவட்டத்தில் உள்ள தொழில் நிறுவனங்களில் தயாரிக்கப்படுகின்றன.

ஜிஎஸ்டி வரி அறிமுகப்படுத்தப்பட்ட துவக்கத்தில் கிரைண்டர்களுக்கு அதிகபட்ச வரி 28 சதவீதம் விதிக்கப்பட்டது. இதனால், மக்களுக்கு ஏற்பட்ட பாதிப்பை அப்போதைய தமிழக அரசின் உதவியுடன் மத்திய அரசின் கவனத்திற்கு கொண்டு சென்ற காரணத்தால் கிரைண்டர்களுக்கு விதிக்கப்பட்ட வரி 12 சதவீதம் என்று மாற்றப்பட்டது.

அதற்குப் பின் தொடர்ந்து கோரிக்கை விடுத்த காரணத்தால், 5% ஆக வரி குறைக்கப்பட்டது. இதனால், கிரைண்டர் தயாரிப்பு தொழில் மீண்டும் கோவையில் புத்துயிர் பெற்றது. இத்தகைய சூழ்நிலையில், சமீபத்தில் நடந்த ஜிஎஸ்டி கவுன்சில் கூட்டத்தில் கிரைண்டர்களுக்கு விதிக்கப்பட்ட ஐந்து சதவீத வரி 18 சதவீதமாக மாற்றி அமைக்கப்பட்டுள்ளது.

இந்த நடவடிக்கை காரணமாக கிரைண்டர் உற்பத்தி தொழில் மிகுந்த நெருக்கடியான சூழ்நிலைக்கு தள்ளப்பட்டுள்ளது. பல்லாயிரக்கணக்கான தொழிலாளர்களின் வாழ்வாதாரம் கேள்விக்குறியாகி உள்ளது. இவை எல்லாவற்றுக்கும் மேல் மக்களுக்கு மிகுந்த பாதிப்பை ஏற்படுத்தியுள்ளது.

உதாரணமாக நான்காயிரம் ரூபாய்க்கு விற்கப்படும் கிரைண்டர் 5% வரி இருந்தபோது 200 ரூபாய் கூடுதலாக வசூலிக்கப்பட்டது. ஆனால், தற்பொழுது 18 சதவீதமாக வரி அதிகரிக்கப்பட்டுள்ளதால் 700 ரூபாய் கூடுதலாக மக்கள் விலை கொடுத்து வாங்க வேண்டிய அவல நிலை ஏற்பட்டுள்ளது.

ஏற்கனவே 'கொரோனா" நோய் தொற்று பரவல் காரணமாக ஏழை மற்றும் நடுத்தர மக்களுக்கு கடும் பொருளாதார நெருக்கடி ஏற்பட்டுள்ளது. இத்தகைய சூழ்நிலையில், தமிழர்களின் பாரம்பரிய உணவு வகைகளான இட்லி, தோசை உள்ளிட்ட பல்வேறு உணவு வகைகளை சமைக்க பயன்படும் மாவு கிரைண்டர்கள் கொண்டு தான் தயாரிக்கப்படுகின்றன.

ஜிஎஸ்டி வரி உயர்வு காரணமாக எதிர்வரும் நாட்களில் வீட்டு பயன்பாடுக்கு விற்பனை செய்யப்படும் கிரைண்டர்களின் விற்பனை கடுமையாக பாதிக்கப்படும். பெரும்பாலான மக்கள் ரெடிமேட் இட்லி, தோசை மாவு வாங்க துவங்குவர். இதனால், கிரைண்டர் தயாரிப்பு தொழிலில் நேரடியாகவும் மறைமுகமாகவும் ஈடுபட்டுள்ள பல்லாயிரக்கணக்கான தொழிலாளர்களின் வாழ்வாதாரம் கேள்விக்குறியாகும்.

தமிழகத்தின் பாரம்பரிய உணவு வகைகளான இட்லி, தோசை உள்ளிட்ட உணவு வகைகள் தற்போது வடமாநிலங்களிலும் மிகவும் பிரசித்தி பெற்று விளங்குகின்றன. எனவே, மக்கள் மற்றும் தொழில் துறையினர் நலனை கருத்தில் கொண்டு கிரைண்டர்களுக்கு விதிக்கப்படும் வரி மீண்டும் 5 சதவீதமாக குறைக்க மத்திய அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும்.

ஜி.எஸ்.டி., கவுன்சில் கவனத்திற்கு இந்த கோரிக்கையை எடுத்துச் செல்ல தேவையான நடவடிக்கைகள் எதிர்வரும் நாட்களில் மேற்கொள்ளப்படும்.

இவ்வாறு அவர் கூறினார்.

Newsletter

கோவையில் தொடங்கிய இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் மக்கள் சந்திப்பு நடைப்பயணம்

மத்திய அரசின் மக்கள் விரோதக் கொள்கைகளை எதிர்த்தும், தொழிலாளர்களுக்கு எதிராக கொண்டு வரப்பட்டுள்ள தொழிலாளர் சட்டங்களை திரு...

தங்க நகை வழிப்பறி வழக்கு: குற்றவாளிக்கு 7 ஆண்டு சிறை; ரூ.5,000 அபராதம் - கோவை நீதிமன்றம் தீர்ப்பு

கடந்த 2020 ஆம் ஆண்டு கோவையில் 100 கிராம் தங்க நகையை கத்தி முனையில் வழிப்பறி செய்த வழக்கில் குற்றம் நிரூபிக்கப்பட்ட இளைஞர...

கிணத்துக்கடவு அருகே வாலிபர் கொடூரக் கொலை

கோவை மாவட்டம் பொள்ளாச்சியை அடுத்த சிக்கலாம்பாளையம் பகுதியைச் சேர்ந்த அஸ்வின் (22) என்ற வாலிபாரின் வீட்டிற்குள் நள்ளிரவில...

அரசூர் துணை மின் நிலையத்தில் நாளை (07.08.2026) மின்தடை

கோவையில் அரசூர் துணை மின் நிலையத்தில் நாளை காலை 9 மணி முதல் மாலை 5 மணி வரை மாதாந்திர பராமரிப்பு பணிகள் நடைபெறுவதால் செல்...

கதிர்நாயக்கன்பாளையம் துணை மின் நிலையத்தில் நாளை (07.08.2026) மின்தடை

கோவை கதிர்நாயக்கன்பாளையம் துணை மின் நிலையத்தில் நாளை மாதாந்திர பராமரிப்பு பணிகள் காலை 9 முதல் மாலை 5 மணி வரை நடைபெறும்....

பேருந்தில் கல்லூரி மாணவிக்கு பாலியல் தொல்லை; கோவையில் காவலர் கைது

பொள்ளாச்சியில் இருந்து கோவை வந்த பேருந்தில் பயணித்த கல்லூரி மாணவிக்கு பாலியல் தொல்லை அளித்ததாக, போத்தனூர் காவல் நிலைய கு...