கோவை மாநகரில் சாலை ஓரங்களில் ஆதவற்ற நிலையில் இருந்த 134 பேர் மீட்பு - ஒரே மாதத்தில் மாநகர போலீஸ் அதிரடி…!

இதில், கடந்த 13.06.2022-ஆம் தேதி முதல் 12.07.2022 ம் தேதி வரை, கோவை மாநகரில் குடும்பத்தால் கைவிடப்பட்ட ஆண், பெண் மற்றும் குழந்தைகளுடன் சாலையோரங்களில் இருந்து வந்த ஆதரவற்றவர்கள் மற்றும் வட மாநிலத்தைச் சார்ந்தவர்கள் என இதுவரை ஆதரவற்ற 114 ஆண்கள் மற்றும் 20 பெண்கள் மீட்கப்பட்டுள்ளனர்.


கோவை: கோவை மாநகர காவல் ஆணையர், பாலகிருஷ்ணன் உத்தரவின்பேரில், கோவை மாநகர ஆள் கடத்தல் தடுப்புப் பிரிவு மற்றும் குழந்தைகள் கடத்தல் தடுப்புப் பிரிவு காவல் ஆய்வாளர் ரோஸ்லின் தலைமையில் தனிப்படை அமைக்கப்பட்டது.

இதில், கடந்த 13.06.2022-ஆம் தேதி முதல் 12.07.2022 ம் தேதி வரை, கோவை மாநகரில் குடும்ப நபர்களால் கைவிடப்பட்ட ஆண், பெண் மற்றும் குழந்தைகளுடன் சாலையோரங்களில் இருந்து வந்த ஆதரவற்றவர்கள் மற்றும் வட மாநிலத்தைச் சார்ந்தவர்கள் என இதுவரை ஆதரவற்ற 114 ஆண்கள் மற்றும் 20 பெண்கள் மீட்கப்பட்டுள்ளனர்.

அவர்களின் மறுவாழ்வை கருத்தில் கொண்டு, ஆர்.எஸ்.புரம் காவல் நிலைய சரகம், ஆரோக்கியசாமி சாலையில் உள்ள கோவை மாநகராட்சி இரவு தங்கும் விடுதி மற்றும் அதே பகுதியில் உள்ள ஈர நெஞ்சம் காப்பகம் என இரு காப்பகங்களில் மீட்கபட்டவர்கள் ஒப்படைக்கப்பட்டுள்ளனர்.

இந்த காப்பகங்களில் நிர்வாகிகளாக பணிபுரியும் கங்காதரன் மற்றும் சுப்புலட்சுமி ஆகியோர் மேற்படி மீட்கப்பட்ட ஆதரவற்றவர்களை பெற்று கவனித்து அவர்களின் மறுவாழ்விற்கு முயற்சி மேற்கொண்டு வருகின்றனர்.

கோவை மாநகர காவல் துறையின் இந்த செயல்பாடுகளுக்கு, பொதுமக்கள் மத்தியில் நல்ல வரவேற்பு கிடைத்துள்ள நிலையில், தொடர்ந்து இப்பணியை செயல்படுத்த காவல் ஆணையர் உத்தரவிட்டுள்ளார். மேலும், இப்பணிகளை சிறப்பாக செய்து வரும் தனிப்படையினரின் செயலை காவல் ஆணையர் வெகுமதி வழங்கி பாராட்டியுள்ளார்.

அதேபோல், பெண்கள் மற்றும் குழந்தைகளுக்கு எதிராக ஏற்படக்கூடிய பாலியல் வன்கொடுமை, வரதட்சணை கொடுமை மற்றும் காவலன் உதவி செயலி, சம்மந்தமான விழிப்புணர்வு கோவை மாநகரில் 73 இடங்களில் நடத்தப்பட்டுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

Newsletter

கோவையில் தொடங்கிய இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் மக்கள் சந்திப்பு நடைப்பயணம்

மத்திய அரசின் மக்கள் விரோதக் கொள்கைகளை எதிர்த்தும், தொழிலாளர்களுக்கு எதிராக கொண்டு வரப்பட்டுள்ள தொழிலாளர் சட்டங்களை திரு...

தங்க நகை வழிப்பறி வழக்கு: குற்றவாளிக்கு 7 ஆண்டு சிறை; ரூ.5,000 அபராதம் - கோவை நீதிமன்றம் தீர்ப்பு

கடந்த 2020 ஆம் ஆண்டு கோவையில் 100 கிராம் தங்க நகையை கத்தி முனையில் வழிப்பறி செய்த வழக்கில் குற்றம் நிரூபிக்கப்பட்ட இளைஞர...

கிணத்துக்கடவு அருகே வாலிபர் கொடூரக் கொலை

கோவை மாவட்டம் பொள்ளாச்சியை அடுத்த சிக்கலாம்பாளையம் பகுதியைச் சேர்ந்த அஸ்வின் (22) என்ற வாலிபாரின் வீட்டிற்குள் நள்ளிரவில...

அரசூர் துணை மின் நிலையத்தில் நாளை (07.08.2026) மின்தடை

கோவையில் அரசூர் துணை மின் நிலையத்தில் நாளை காலை 9 மணி முதல் மாலை 5 மணி வரை மாதாந்திர பராமரிப்பு பணிகள் நடைபெறுவதால் செல்...

கதிர்நாயக்கன்பாளையம் துணை மின் நிலையத்தில் நாளை (07.08.2026) மின்தடை

கோவை கதிர்நாயக்கன்பாளையம் துணை மின் நிலையத்தில் நாளை மாதாந்திர பராமரிப்பு பணிகள் காலை 9 முதல் மாலை 5 மணி வரை நடைபெறும்....

பேருந்தில் கல்லூரி மாணவிக்கு பாலியல் தொல்லை; கோவையில் காவலர் கைது

பொள்ளாச்சியில் இருந்து கோவை வந்த பேருந்தில் பயணித்த கல்லூரி மாணவிக்கு பாலியல் தொல்லை அளித்ததாக, போத்தனூர் காவல் நிலைய கு...