'மேட்ரிமோனி' வலைதளம் மூலம் கோவை பெண் மருத்துவரிடம் நூதன பண மோசடியில் ஈடுபட்ட கும்பல்..!

புகாரின் பேரில் வழக்குப்பதிவு செய்து ஆன்லைன் மூலமாக பழகி பெண் மருத்துவரிடம் இருந்து ரூ.19-லட்சத்து 59-ஆயிரத்து 920-பணத்தை மோசடி செய்த கும்பலை போலீசார் தேடி வருகின்றனர்.


கோவை: கோவை பீளமேடு அருகே அண்ணா நகரை சேர்ந்த 32 வயது பெண் டாக்டர் கோவை மாநகர சைபர் கிரைம் போலீசில் ஒரு புகார் அளித்தார்.

அந்த புகாரில் கூறியிருப்பதாவது:-

நான் மனநல மருத்துவராக உள்ளேன். இந்நிலையில் கடந்த சில மாதங்களுக்கு முன்பு ஆன்லைன் திருமணம் தகவல் மையம் மூலம் நெதர்லாந்து நாட்டைச் சேர்ந்த யுஷன் ஜியான் என்பவரின் அறிமுகம் கிடைத்தது. அவர் அங்குள்ள மருத்துவமனையில் அறுவை சிகிச்சை நிபுணராக பணியாற்றுவதாக கூறினார்.

மேலும், அவர் தான் இந்தியாவில் மருத்துவமனை கட்ட திட்டமிட்டு உள்ளதாகவும், விரைவில் இந்தியாவில் குடியேற உள்ளதாகவும் கூறினார். எனவே இந்திய பெண்ணை திருமணம் செய்ய உள்ளதாக தெரிவித்தார். அதை உண்மை என நம்பிய நான் அவருடன் பழகி வந்தேன்.

2 பேரும் அடிக்கடி செல்போன் மூலமாக பேசி வந்தோம். அதில் பேசிய பெண் ஒருவர் தான் டெல்லி விமான நிலையத்தில் உள்ள சுங்க வரித்துறை அதிகாரி பேசுவதாக தெரிவித்தார். அப்போது அவர் என்னிடம் நெதர்லாந்து நாட்டை சேர்ந்த யுஷன் ஜியான் தனது தாய் மோனிகா ஜியானுடன் வந்து இருப்பதாகவும், அவர் 1 லட்சம் யூரோ, இந்திய ரூபாய் மதிப்பில் 82 லட்சத்து 51 ஆயிரத்து 48 பணம் கொண்டு வந்து இருப்பதாகவும், இதற்கு வரியாக ரூ.19 லட்சத்து 59 ஆயிரத்து 920 பணத்தை உடனடியாக அவர்கள் கொடுக்கும் வங்கி கணக்கில் செலுத்துமாறு கூறினார்.

இதனையடுத்து, நான் உடனடியாக பணத்தை தயார் செய்து அவர் கொடுத்த வங்கி கணக்கிற்கு பணத்தை அனுப்பி வைத்தேன். அதற்கு அவர்களிடம் இருந்து எந்த பதிலும் வரவில்லை. இதையடுத்து நான் யுஷன் ஜியான் எண்ணுக்கு தொடர்பு கொண்ட போது அது சுவிட்ச் ஆப் செய்யப்பட்டு இருந்தது.

அப்போது தான் தெரிந்தது இது மோசடி கும்பலின் செயல் என்று. எனவே விசாரணை நடத்தி பணத்தை பெற்று தர வேண்டும். இவ்வாறு அவர் அளித்த புகாரில் கூறியிருந்தார்.

புகாரின் பேரில் வழக்குப்பதிவு செய்து ஆன்லைன் மூலமாக பழகி பெண் மருத்துவரிடம் இருந்து ரூ.19-லட்சத்து 59-ஆயிரத்து 920-பணத்தை மோசடி செய்த கும்பலை போலீசார் தேடி வருகின்றனர்.

Newsletter

கோவையில் தொடங்கிய இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் மக்கள் சந்திப்பு நடைப்பயணம்

மத்திய அரசின் மக்கள் விரோதக் கொள்கைகளை எதிர்த்தும், தொழிலாளர்களுக்கு எதிராக கொண்டு வரப்பட்டுள்ள தொழிலாளர் சட்டங்களை திரு...

தங்க நகை வழிப்பறி வழக்கு: குற்றவாளிக்கு 7 ஆண்டு சிறை; ரூ.5,000 அபராதம் - கோவை நீதிமன்றம் தீர்ப்பு

கடந்த 2020 ஆம் ஆண்டு கோவையில் 100 கிராம் தங்க நகையை கத்தி முனையில் வழிப்பறி செய்த வழக்கில் குற்றம் நிரூபிக்கப்பட்ட இளைஞர...

கிணத்துக்கடவு அருகே வாலிபர் கொடூரக் கொலை

கோவை மாவட்டம் பொள்ளாச்சியை அடுத்த சிக்கலாம்பாளையம் பகுதியைச் சேர்ந்த அஸ்வின் (22) என்ற வாலிபாரின் வீட்டிற்குள் நள்ளிரவில...

அரசூர் துணை மின் நிலையத்தில் நாளை (07.08.2026) மின்தடை

கோவையில் அரசூர் துணை மின் நிலையத்தில் நாளை காலை 9 மணி முதல் மாலை 5 மணி வரை மாதாந்திர பராமரிப்பு பணிகள் நடைபெறுவதால் செல்...

கதிர்நாயக்கன்பாளையம் துணை மின் நிலையத்தில் நாளை (07.08.2026) மின்தடை

கோவை கதிர்நாயக்கன்பாளையம் துணை மின் நிலையத்தில் நாளை மாதாந்திர பராமரிப்பு பணிகள் காலை 9 முதல் மாலை 5 மணி வரை நடைபெறும்....

பேருந்தில் கல்லூரி மாணவிக்கு பாலியல் தொல்லை; கோவையில் காவலர் கைது

பொள்ளாச்சியில் இருந்து கோவை வந்த பேருந்தில் பயணித்த கல்லூரி மாணவிக்கு பாலியல் தொல்லை அளித்ததாக, போத்தனூர் காவல் நிலைய கு...