அதிமுகவில் தற்போது நாடகம் நடக்கிறது - கோவையில் வி.சி.ஆறுகுட்டி பேட்டி…!

அதிமுகவில் என்ன நடக்கிறது என்பதை மக்களிடமும் தொண்டர்களிடமும் தான் கேட்க வேண்டும் எனவும், அதிமுகவில் தற்போது நாடகம் நடந்து கொண்டு இருக்கின்றது எனவும் முன்னாள் எம்.எல்.ஏ ஆறுகுட்டி தெரிவித்தார்.


கோவை: அதிமுகவில் தற்போது நாடகம் நடந்து கொண்டுள்ளது, கோடநாடு விசாரணைக்கு பின் முன்னாள் அதிமுக எம்.எல்.ஏ வி.சி.ஆறுகுட்டி தெரிவித்துள்ளார்.

கோவை காவலர் பயிற்சி பள்ளி வளாகத்தில் கோடநாடு கொலை, கொள்ளை வழக்கு விசாரணை நடைபெற்று வருகிறது. இன்றைய விசாரணைக்கு கவுண்டம்பாளையம் தொகுதி அதிமுக முன்னாள் எம்.எல்.ஏ ஆறுகுட்டி விசாரணைக்கு அஜராக சம்மன் அனுப்பபட்டு இருந்தது.

காலை 11:30 மணிக்கு விசாரணைக்கு ஆஜரான நிலையில், விசாரணை பிற்பகல் 2.30 மணி வரை விசாரணை நடைபெற்றது. விசாரணைக்கு பின்னர் முன்னாள் எம்எல்ஏ ஆறுகுட்டி பேட்டியளித்தார்.

அப்போது கனகராஜ் இரண்டு வருடங்கள் என்னிடம் ஓட்டுனராக இருந்ததால் அவர் தொடர்பான கேள்விகள் கேட்கப்பட்டது என தெரிவித்தார். கடந்த முறை விசாரணையின் போது விடுபட்ட சில கேள்விகளை கேட்டார்கள், அதற்கு பதில் கொடுக்கப்பட்டது என தெரிவித்த அவர், எப்பொழுது விசாரணைக்கு அழைத்தாலும் ஒத்துழைப்பு கொடுப்பதாக காவல்துறையிடம் தெரிவித்து இருப்பதாகவும் ஆறுகுட்டி தெரிவித்தார்.

மேலும் அதிமுகவில் என்ன நடக்கிறது என்பதை மக்களிடமும் தொண்டர்களிடமும் தான் கேட்க வேண்டும் எனவும், அதிமுகவில் தற்போது நாடகம் நடந்து கொண்டு இருக்கின்றது எனவும் முன்னாள் எம்.எல்.ஏ ஆறுகுட்டி தெரிவித்தார்.

கோடநாடு கொலை, கொள்ளை வழக்கு தொடர்பாக மூன்றாண்டுகளுக்கு முன் கோத்தகிரியில் வைத்து ஒரு முறையும், கடந்த ஏப்ரல் மாதம் கோவை காவலர் பயிற்சி பள்ளியில் ஒரு முறையும் ஆறுகுட்டியிடம் விசாரணை நடத்தப்பட்டது.

தற்பொழுது மூன்றாவது முறையாக மீண்டும் கோவை காவலர் பயிற்சி பள்ளி வளாகத்தில் இன்று ஆறுகுட்டியிடம் விசாரணை நடத்தப்பட்டு இருப்பது குறிப்பிடத்தக்கது.

Newsletter

கோவையில் தொடங்கிய இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் மக்கள் சந்திப்பு நடைப்பயணம்

மத்திய அரசின் மக்கள் விரோதக் கொள்கைகளை எதிர்த்தும், தொழிலாளர்களுக்கு எதிராக கொண்டு வரப்பட்டுள்ள தொழிலாளர் சட்டங்களை திரு...

தங்க நகை வழிப்பறி வழக்கு: குற்றவாளிக்கு 7 ஆண்டு சிறை; ரூ.5,000 அபராதம் - கோவை நீதிமன்றம் தீர்ப்பு

கடந்த 2020 ஆம் ஆண்டு கோவையில் 100 கிராம் தங்க நகையை கத்தி முனையில் வழிப்பறி செய்த வழக்கில் குற்றம் நிரூபிக்கப்பட்ட இளைஞர...

கிணத்துக்கடவு அருகே வாலிபர் கொடூரக் கொலை

கோவை மாவட்டம் பொள்ளாச்சியை அடுத்த சிக்கலாம்பாளையம் பகுதியைச் சேர்ந்த அஸ்வின் (22) என்ற வாலிபாரின் வீட்டிற்குள் நள்ளிரவில...

அரசூர் துணை மின் நிலையத்தில் நாளை (07.08.2026) மின்தடை

கோவையில் அரசூர் துணை மின் நிலையத்தில் நாளை காலை 9 மணி முதல் மாலை 5 மணி வரை மாதாந்திர பராமரிப்பு பணிகள் நடைபெறுவதால் செல்...

கதிர்நாயக்கன்பாளையம் துணை மின் நிலையத்தில் நாளை (07.08.2026) மின்தடை

கோவை கதிர்நாயக்கன்பாளையம் துணை மின் நிலையத்தில் நாளை மாதாந்திர பராமரிப்பு பணிகள் காலை 9 முதல் மாலை 5 மணி வரை நடைபெறும்....

பேருந்தில் கல்லூரி மாணவிக்கு பாலியல் தொல்லை; கோவையில் காவலர் கைது

பொள்ளாச்சியில் இருந்து கோவை வந்த பேருந்தில் பயணித்த கல்லூரி மாணவிக்கு பாலியல் தொல்லை அளித்ததாக, போத்தனூர் காவல் நிலைய கு...