வடக்கு மண்டலம்‌ வார்டு எண்‌.4 மற்றும்‌ 10-க்குட்பட்ட பகுதிகளில்‌ கோவை‌ மாநகராட்சி ஆணையாளர்‌ ஆய்வு..!

மாநகராட்சி வடக்கு மண்டலம்‌ வார்டு எண்‌.4 மற்றும்‌ 10-க்குட்பட்ட சரவணம்பட்டி சுகாதார ஆய்வாளர்‌ அலுவலகத்தில்‌, பிறப்பு -இறப்பு பதிவேடு, புகார்‌ பதிவேடு மற்றும்‌ வருகை பதிவேடுகளை மாநகராட்சி ஆணையாளர்‌ மு.பிரதாப்‌ நேரில்‌ பார்வையிட்டு ஆய்வு செய்தார்‌.


கோவை: வடக்கு மண்டலம்‌ வார்டு எண்‌.4 மற்றும்‌ 10-க்குட்பட்ட பகுதிகளில்‌ கோவை‌ மாநகராட்சி ஆணையாளர்‌ ஆய்வு மேற்கொண்டார்.

கோயம்புத்தூர்‌ மாநகராட்சி வடக்கு மண்டலம்‌ வார்டு எண்‌.4 மற்றும்‌ 10-க்குட்பட்ட சரவணம்பட்டி சுகாதார ஆய்வாளர்‌ அலுவலகத்தில்‌, பிறப்பு இறப்பு பதிவேடு, புகார்‌ பதிவேடு மற்றும்‌ வருகை பதிவேடுகளை மாநகராட்சி ஆணையாளர்‌ மு.பிரதாப்‌ நேரில்‌ பார்வையிட்டு ஆய்வு செய்தார்‌.

இதனைதொடர்ந்து, மாநகராட்சி தூய்மை பணியாளர்கள்‌ மக்கும்‌ குப்பை மற்றும்‌ மக்காத குப்பைகளை தரம்‌ பிரித்து சேகரிக்கும்‌ பணிகளில்‌ ஈடுபட்டு வருவதை நேரில்‌ பார்வையிட்டு ஆய்வு செய்த மாநகராட்சி ஆணையாளர்‌ மு.பிரதாப்‌, அப்பகுதியிலுள்ள பொதுமக்களிடம்‌ குப்பைகளை மக்கும்‌ குப்பை, மக்கா குப்பைகள்‌ என வகைப்படுத்தி தரம்‌ பிரித்து வழங்க விழிப்புணர்வு ஏற்படுத்த வேண்டுமென அறிவுரை வழங்கினார்‌.



மேலும், மாநகராட்சி வடக்கு மண்டலம் வார்டு எண் .4 மற்றும் 10 - க்குட்பட்ட சரவணம்பட்டி சுகாதார ஆய்வாளர் அலுவலகத்தில் தூய்மை பணியாளர்களுக்கான வருகைப் பதிவேடுகளை ஆய்வு செய்து, தூய்மைப் பணியாளர்கள் மேற்கொள்ளும் பணிகளில் குப்பை தரம் பிரிக்கும் பணிகள் குறித்தும், தூய்மைப் பணியாளர்கள் முகக்கவசம், கையுறைகள் அணிந்து பணிகளில் ஈடுபடுமாறும், அப்பகுதியிலுள்ள பொதுமக்களிடம் குப்பைகளை மக்கும் குப்பை, மக்கா குப்பைகள் என வகைப்படுத்தி தரம் பிரித்து வழங்க வேண்டுமெனவும் மாநகராட்சி ஆணையாளர் மு.பிரதாப், அறிவுறுத்தினார்.



பின்னர், மாநகராட்சி வடக்கு மண்டலம் வார்டு எண்.4 க்குட்பட்ட சரவணம்பட்டி பகுதியில் உள்ள அடுக்குமாடி குடியிருப்புகளின் வீடுகளில் உள்ள மொத்த குப்பைகளை மக்கும் மற்றும் மக்காத குப்பைகள் என தரம் பிரித்து நுண்ணுயிர் உரம் ( Micro Compost Centre ) தயாரிக்கும் மையங்களுக்கு அனுப்பும் பணிகள் முறையாக நடைபெறுகிறதா என மாநகராட்சி ஆணையாளர் மு.பிரதாப் நேரில் பார்வையிட்டு ஆய்வு செய்தார்.



மேலும், மாநகராட்சி வடக்கு மண்டலம் வார்டு எண் .4 க்குட்பட்ட சரவணம்பட்டி பகுதியிலுள்ள மேல்நிலை நீர்த்தேக்கத் தொட்டியில் உள்ள குடிநீரின் தரம் மற்றும் விநியோகிக்கும் பணிகள் குறித்து மாநகராட்சி ஆணையாளர் மு.பிரதாப் நேரில் பார்வையிட்டு ஆய்வு செய்தார்.



இந்நிகழ்வில்,‌ வடக்கு மண்டல தலைவர்‌ வே.கதிர்வேல்‌, மாநகரப்‌ பொறியாளர்‌ (பொ) எஸ்‌.அரசு, உதவி ஆணையாளர்‌ மோகனசுந்தரி, உதவி செயற்பொறியாளர்‌ செந்தில்பாஸ்கர்‌, மண்டல சுகாதார அலுவலர்‌ இராதாகிருஷ்ணன்‌ மற்றும்‌ மாநகராட்சி அலுவலர்கள்‌ உடன் இருந்தனர்.

இதனை தொடர்ந்து, மாநகராட்சி மேற்கு மண்டலம் வார்டு எண் 13 - க்குட்பட்ட பகுதியில் மத்திய அரசு அறிவியல் தொழில்நுட்பத்துறை பங்களிப்புடன் ரூ .2.5 கோடி மதிப்பீட்டில் 24 × 7 மணி நேரமும் குடிநீர் வழங்கும் பைலட் திட்டப்பணிகளின் செயல்பாடுகளான இணைய வழியில் சீரான குடிநீர் விநியோகம் செய்வதை கண்காணித்தல், மேம்படுத்துதல் பணி தற்போது நடைபெற்று வருவதை மாநகராட்சி ஆணையாளர் மு.பிரதாப் நேரில் பார்வையிட்டு ஆய்வு செய்தார்.



இந்நிகழ்வில், மாநகரப் பொறியாளர் ( பொ ) எஸ்.அரசு , 17-வது மாமன்ற உறுப்பினர் ப.வே.சுபஸ்ரீ சரத், உதவி செயற்பொறியாளர் ஹேமலதா, உதவி பொறியாளர் ராஜேஷ் வேணுகோபால், மற்றும் மாநகராட்சி அலுவலர்கள் உடன் இருந்தனர்.

Newsletter

கோவையில் தொடங்கிய இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் மக்கள் சந்திப்பு நடைப்பயணம்

மத்திய அரசின் மக்கள் விரோதக் கொள்கைகளை எதிர்த்தும், தொழிலாளர்களுக்கு எதிராக கொண்டு வரப்பட்டுள்ள தொழிலாளர் சட்டங்களை திரு...

தங்க நகை வழிப்பறி வழக்கு: குற்றவாளிக்கு 7 ஆண்டு சிறை; ரூ.5,000 அபராதம் - கோவை நீதிமன்றம் தீர்ப்பு

கடந்த 2020 ஆம் ஆண்டு கோவையில் 100 கிராம் தங்க நகையை கத்தி முனையில் வழிப்பறி செய்த வழக்கில் குற்றம் நிரூபிக்கப்பட்ட இளைஞர...

கிணத்துக்கடவு அருகே வாலிபர் கொடூரக் கொலை

கோவை மாவட்டம் பொள்ளாச்சியை அடுத்த சிக்கலாம்பாளையம் பகுதியைச் சேர்ந்த அஸ்வின் (22) என்ற வாலிபாரின் வீட்டிற்குள் நள்ளிரவில...

அரசூர் துணை மின் நிலையத்தில் நாளை (07.08.2026) மின்தடை

கோவையில் அரசூர் துணை மின் நிலையத்தில் நாளை காலை 9 மணி முதல் மாலை 5 மணி வரை மாதாந்திர பராமரிப்பு பணிகள் நடைபெறுவதால் செல்...

கதிர்நாயக்கன்பாளையம் துணை மின் நிலையத்தில் நாளை (07.08.2026) மின்தடை

கோவை கதிர்நாயக்கன்பாளையம் துணை மின் நிலையத்தில் நாளை மாதாந்திர பராமரிப்பு பணிகள் காலை 9 முதல் மாலை 5 மணி வரை நடைபெறும்....

பேருந்தில் கல்லூரி மாணவிக்கு பாலியல் தொல்லை; கோவையில் காவலர் கைது

பொள்ளாச்சியில் இருந்து கோவை வந்த பேருந்தில் பயணித்த கல்லூரி மாணவிக்கு பாலியல் தொல்லை அளித்ததாக, போத்தனூர் காவல் நிலைய கு...