கோவை சிறுவாணி அணையின் நீர்மட்டம் 26.14-அடியாக உயர்வு..!

தென்மேற்கு பருவமழை தொடர்ந்து பெய்து வருவதால், சிறுவாணி நீர் மட்டம் 26.14-அடியாக உயர்ந்திருக்கிறது. இதனால், கோவைக்கு வரக்கூடிய தண்ணீர் அளவு கூடுதலாக இருக்கும் என குடிநீர் வடிகால் வாரியத்தினர் தெரிவித்துள்ளனர்.


கோவை: மேற்குத் தொடர்ச்சி மலைத்தொடரில் பெய்யும் தொடர் மழையால், சிறுவாணி நீர் மட்டம், 26.14-அடியாக உயர்ந்திருக்கிறது.

கடந்த 11-நாட்களில், 691-மி.மீ., மழை பதிவாகியுள்ளது. மேற்குத் தொடர்ச்சி மலையில், கேரள வனப்பகுதியில் அமைந்திருக்கும். சிறுவாணி அணையில் தேக்கப்படும் தண்ணீரே, கோவை மக்களுக்கு மிக முக்கிய குடிநீர் ஆதாரம்.

அப்பகுதியில் பெய்யும் மழை அளவை, மாநகராட்சி மற்றும் குடிநீர் வடிகால் வாரியத்தினர் கண்காணித்து வருகின்றனர். ஜூன் முதல் செப்., வரை தென்மேற்கு பருவ மழை பெய்யும். ஆனால், கடந்த ஜூன் மாதம் போதிய மழைப்பொழிவு இல்லாததால், அணையின் நீர்மட்டம் குறைந்து கொண்டே வந்தது.

ஜூன், 30ல், 13.15-அடியாக நீர்மட்டம் இருந்தது.இம்மாதம் (ஜூலை) முதல் தேதியிலிருந்து, நீர்ப்பிடிப்பு பகுதியில் மழை பொழிவு காணப்படுகிறது. 1-ம் தேதியிலிருந்து, 10-ம் தேதி வரை, 10- நாட்களில், 637-மி.மீ., மழை பதிவாகியது. நேற்று (11ம் தேதி) காலை, 8:00 மணி வரை, அணையில், 54-மி.மீ., அடிவாரத்தில், 20-மி.மீ., பதிவானது.

26.14-அடியாக நீர்மட்டம் உயர்ந்திருக்கிறது. கடந்த, 11-நாட்களில், 691-மி.மீ., மழை பதிவாகியுள்ளது. இதன் மூலமாக, 13-அடிக்கு நீர் மட்டம் உயர்ந்திருக்கிறது.

குடிநீர் வடிகால் வாரியத்தினர் கூறுகையில், 'தென்மேற்கு பருவமழை தொடர்ந்து பெய்து வருவதால், சிறுவாணி நீர் மட்டம் 26.14-அடியாக உயர்ந்திருக்கிறது. 30-அடியை நீர்மட்டம் தாண்டும்போது, நீர் புகு கிணற்றில் உள்ள நான்கு வால்வுகளில், மூன்று தண்ணீருக்குள் மூழ்கி விடும். கோவைக்கு வரக்கூடிய தண்ணீர் அளவு கூடுதலாக இருக்கும்' என்றனர்.

Newsletter

கோவையில் தொடங்கிய இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் மக்கள் சந்திப்பு நடைப்பயணம்

மத்திய அரசின் மக்கள் விரோதக் கொள்கைகளை எதிர்த்தும், தொழிலாளர்களுக்கு எதிராக கொண்டு வரப்பட்டுள்ள தொழிலாளர் சட்டங்களை திரு...

தங்க நகை வழிப்பறி வழக்கு: குற்றவாளிக்கு 7 ஆண்டு சிறை; ரூ.5,000 அபராதம் - கோவை நீதிமன்றம் தீர்ப்பு

கடந்த 2020 ஆம் ஆண்டு கோவையில் 100 கிராம் தங்க நகையை கத்தி முனையில் வழிப்பறி செய்த வழக்கில் குற்றம் நிரூபிக்கப்பட்ட இளைஞர...

கிணத்துக்கடவு அருகே வாலிபர் கொடூரக் கொலை

கோவை மாவட்டம் பொள்ளாச்சியை அடுத்த சிக்கலாம்பாளையம் பகுதியைச் சேர்ந்த அஸ்வின் (22) என்ற வாலிபாரின் வீட்டிற்குள் நள்ளிரவில...

அரசூர் துணை மின் நிலையத்தில் நாளை (07.08.2026) மின்தடை

கோவையில் அரசூர் துணை மின் நிலையத்தில் நாளை காலை 9 மணி முதல் மாலை 5 மணி வரை மாதாந்திர பராமரிப்பு பணிகள் நடைபெறுவதால் செல்...

கதிர்நாயக்கன்பாளையம் துணை மின் நிலையத்தில் நாளை (07.08.2026) மின்தடை

கோவை கதிர்நாயக்கன்பாளையம் துணை மின் நிலையத்தில் நாளை மாதாந்திர பராமரிப்பு பணிகள் காலை 9 முதல் மாலை 5 மணி வரை நடைபெறும்....

பேருந்தில் கல்லூரி மாணவிக்கு பாலியல் தொல்லை; கோவையில் காவலர் கைது

பொள்ளாச்சியில் இருந்து கோவை வந்த பேருந்தில் பயணித்த கல்லூரி மாணவிக்கு பாலியல் தொல்லை அளித்ததாக, போத்தனூர் காவல் நிலைய கு...