கோவையில் காதலை ஏற்க மறுத்த பெண்ணிற்கு கத்திகுத்து - சேலத்தை சேர்ந்த இளைஞர் வெறிச் செயல்..!

காதலை ஏற்க அந்த பெண் மறுத்ததால், மறைத்து வைத்திருந்த கத்தியால் முகம், தோள்பட்டை, தலை பகுதியில் அந்த பெண்ணை தாக்கியுள்ளார். இதையடுத்து, அங்கு பணியில் இருந்தவர்கள் இந்த வெறிச் செயலில் ஈடுபட்ட சேலத்தை சேர்ந்த தினேஷை மடக்கி பிடித்து ரேஸ்கோர்ஸ் காவல் நிலையத்தில் ஒப்படைத்தனர்


கோவை: கோவை குனியமுத்தூர் பகுதியை சேர்ந்த 21 வயது இளம் பெண் ஒருவர் லட்சுமி மில்ஸ் பகுதியில் உள்ள தனியார் நிறுவனத்தில் பைனான்ஸ் துறை பயிற்சி பணியாளராக வேலை செய்து வருகிறார்.

அந்த பெண்ணிற்கும், சேலம் மாவட்டம் நெத்திமேடு பகுதியை சேர்ந்த சண்முகலிங்கம் மகன் தினேஷ் (26) என்பவருடன் கடந்த 2 ஆண்டுகளுக்கு முன் இன்ஸ்டாகிராமில் பழக்கம் ஏற்பட்டதாக தெரிகிறது. இதையடுத்து, இருவரும் நண்பர்களாக பழகி வந்த நிலையில், தினேஷ் கடந்த சில நாட்களுக்கு முன் கோவை வந்து அந்த பெண்ணை சந்தித்து பேசியுள்ளார்.

பின்னர் அந்த பெண்ணிடம் தன் காதலை கூறியுள்ளார். ஆனால், அந்த பெண் காதலிக்க மறுத்துள்ளார். ஆனால், தொடர்ந்து தன்னை காதலிக்க வேண்டும் என தினேஷ் வற்புறுத்தியதால், அவரது எண்ணை அந்த பெண் பிளாக் செய்துள்ளார். இதனால், ஆத்திரமடைந்த தினேஷ் இன்று காலை அந்த பெண் பணியாற்றும் நிறுவனத்திற்கு வந்து தனது காதலை ஏற்றுக் கொள்ளுமாறு மிரட்டியுள்ளார்.

ஆனால் தொடர்ந்து, அந்த பெண் மறுத்ததால், மறைத்து வைத்திருந்த கத்தியால் தினேஷ், அந்த பெண்ணின் முகம், தோள்பட்டை, தலை பகுதியில் தாக்கியுள்ளார். இதையடுத்து, அங்கு பணியில் இருந்தவர்கள் தினேஷை மடக்கி பிடித்து ரேஸ்கோர்ஸ் காவல் நிலையத்தில் ஒப்படைத்தனர்.

இதையடுத்து, தினேஷை கைது செய்த போலீசார் கொலை முயற்சி உள்ளிட்ட பிரிவுகளின் கீழ் வழக்கு பதிவு செய்து அவரை நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர்.

பட்டப்பகலில் காதலை ஏற்க மறுத்த பெண்ணை சக ஊழியர்கள் முன்னால் இளைஞர் கத்தியால் குத்திய சம்பவம் அங்கு பரபரப்பை ஏற்படுத்தியது.

Newsletter

கோவையில் தொடங்கிய இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் மக்கள் சந்திப்பு நடைப்பயணம்

மத்திய அரசின் மக்கள் விரோதக் கொள்கைகளை எதிர்த்தும், தொழிலாளர்களுக்கு எதிராக கொண்டு வரப்பட்டுள்ள தொழிலாளர் சட்டங்களை திரு...

தங்க நகை வழிப்பறி வழக்கு: குற்றவாளிக்கு 7 ஆண்டு சிறை; ரூ.5,000 அபராதம் - கோவை நீதிமன்றம் தீர்ப்பு

கடந்த 2020 ஆம் ஆண்டு கோவையில் 100 கிராம் தங்க நகையை கத்தி முனையில் வழிப்பறி செய்த வழக்கில் குற்றம் நிரூபிக்கப்பட்ட இளைஞர...

கிணத்துக்கடவு அருகே வாலிபர் கொடூரக் கொலை

கோவை மாவட்டம் பொள்ளாச்சியை அடுத்த சிக்கலாம்பாளையம் பகுதியைச் சேர்ந்த அஸ்வின் (22) என்ற வாலிபாரின் வீட்டிற்குள் நள்ளிரவில...

அரசூர் துணை மின் நிலையத்தில் நாளை (07.08.2026) மின்தடை

கோவையில் அரசூர் துணை மின் நிலையத்தில் நாளை காலை 9 மணி முதல் மாலை 5 மணி வரை மாதாந்திர பராமரிப்பு பணிகள் நடைபெறுவதால் செல்...

கதிர்நாயக்கன்பாளையம் துணை மின் நிலையத்தில் நாளை (07.08.2026) மின்தடை

கோவை கதிர்நாயக்கன்பாளையம் துணை மின் நிலையத்தில் நாளை மாதாந்திர பராமரிப்பு பணிகள் காலை 9 முதல் மாலை 5 மணி வரை நடைபெறும்....

பேருந்தில் கல்லூரி மாணவிக்கு பாலியல் தொல்லை; கோவையில் காவலர் கைது

பொள்ளாச்சியில் இருந்து கோவை வந்த பேருந்தில் பயணித்த கல்லூரி மாணவிக்கு பாலியல் தொல்லை அளித்ததாக, போத்தனூர் காவல் நிலைய கு...