கோவை சிறுவாணி குடிநீர் பிரதான குழாயில் உடைப்பு - குடிநீர் விநியோகம் பாதிப்பு…!

சிறுவாணி அணையின் அடிவாரத்தில் முள்ளங்காடு ராஜகாளியம்மன் கோவில் அருகே அடர்ந்த வனப் பகுதியில் இன்று காலையில் சிறுவாணி பிரதான குழாயில் உடைப்பு ஏற்பட்டது. எனவே, தொண்டாமுத்தூர், பாரதி பார்க் மற்றும் தாளியூர் பகுதிகளுக்கு செல்லும் சிறுவாணி பிரதான குழாய்களுக்கு நீர்வரத்து நிறுத்தப்பட்டது.


கோவை: கோவை தொண்டாமுத்தூர், பாரதி பார்க் மற்றும் தாளியூர் பகுதிகளுக்கு செல்லும் சிறுவாணி பிரதான குழாயில் உடைப்பு ஏற்பட்டதால் குடிநீர் விநியோகம் நிறுத்தப்பட்டது.

கோவை சிறுவாணி அணையில் இருந்து பெறப்படும் நீர் ராட்சச குழாய்கள் மூலம் சுத்திகரிப்பு நிலையத்திற்கு கொண்டுவரப்பட்டு, நீர் சுத்திகரிக்கப்படுகிறது. பின்னர் 1,000 எம்.எம். விட்டம் கொண்ட சிமெண்ட் மெயின் குழாய்கள் மூலமாக தொண்டாமுத்தூர் சுற்றுவட்டார கிராமங்களுக்கும், கோவையின் மாநகராட்சி பகுதிகளுக்கும் குடிநீர் விநியோகம் செய்யப்படுகிறது.

தற்போது சிறுவாணி நீர்ப்பிடிப்பு பகுதிகளில் மழை அதிகரித்துள்ளதால், அணையின் நீர்மட்டம் உயர்ந்து வருகிறது.



இந்நிலையில்‌, சிறுவாணி அணையின் அடிவாரத்தில் முள்ளங்காடு ராஜகாளியம்மன் கோவில் அருகே அடர்ந்த வனப் பகுதியில் இன்று காலையில் சிறுவாணி பிரதான குழாயில் உடைப்பு ஏற்பட்டது.



தகவலறிந்து வந்த குடிநீர் வாரிய ஊழியர்கள், குடிநீர் வரத்தை நிறுத்தி, குழாயை சீரமைக்கும் பணியில் ஈடுபட்டனர். ஆனால், அடர்ந்த வனப் பகுதி என்பதால் குடிநீர் குழாயை சீரமைக்கும் பணி இன்று மாலை ஆகியும் நிறைவடையவில்லை. அப்பகுதியில், யானை நடமாட்டம் இருந்ததால், பாதிலிலேயே பணிகள் நிறுத்தப்பட்டது. இதனால், குடிநீர் விநியோகம் நிறுத்தப்பட்டது. எனவே, தொண்டாமுத்தூர், பாரதி பார்க் மற்றும் தாளியூர் பகுதிகளுக்கு செல்லும் சிறுவாணி பிரதான குழாய்களுக்கு நீர்வரத்து பாதிக்கப்பட்டது.

இது குறித்து மாநகராட்சி அதிகாரிகள் கூறும் போது: அடர்வனப்பகுதி என்பதால் குழாய் சீரமைப்பு பணிகள் செய்வதில் சிக்கல் ஏற்பட்டுள்ளது. முதல்கட்டமாக ராட்சச குழாய்க்கு வரும் குடிநீர் நீர் எடுப்பு பகுதியில் நிறுத்தப்பட்டுள்ளது. நாளை அதிகாலையில் சென்று குழாய் உடைப்பு குறித்து ஆய்வு மேற்கொண்டு பணிகளை உடனடியாக செய்ய உள்ளதாக தெரிவித்தார்.

Newsletter

கோவையில் தொடங்கிய இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் மக்கள் சந்திப்பு நடைப்பயணம்

மத்திய அரசின் மக்கள் விரோதக் கொள்கைகளை எதிர்த்தும், தொழிலாளர்களுக்கு எதிராக கொண்டு வரப்பட்டுள்ள தொழிலாளர் சட்டங்களை திரு...

தங்க நகை வழிப்பறி வழக்கு: குற்றவாளிக்கு 7 ஆண்டு சிறை; ரூ.5,000 அபராதம் - கோவை நீதிமன்றம் தீர்ப்பு

கடந்த 2020 ஆம் ஆண்டு கோவையில் 100 கிராம் தங்க நகையை கத்தி முனையில் வழிப்பறி செய்த வழக்கில் குற்றம் நிரூபிக்கப்பட்ட இளைஞர...

கிணத்துக்கடவு அருகே வாலிபர் கொடூரக் கொலை

கோவை மாவட்டம் பொள்ளாச்சியை அடுத்த சிக்கலாம்பாளையம் பகுதியைச் சேர்ந்த அஸ்வின் (22) என்ற வாலிபாரின் வீட்டிற்குள் நள்ளிரவில...

அரசூர் துணை மின் நிலையத்தில் நாளை (07.08.2026) மின்தடை

கோவையில் அரசூர் துணை மின் நிலையத்தில் நாளை காலை 9 மணி முதல் மாலை 5 மணி வரை மாதாந்திர பராமரிப்பு பணிகள் நடைபெறுவதால் செல்...

கதிர்நாயக்கன்பாளையம் துணை மின் நிலையத்தில் நாளை (07.08.2026) மின்தடை

கோவை கதிர்நாயக்கன்பாளையம் துணை மின் நிலையத்தில் நாளை மாதாந்திர பராமரிப்பு பணிகள் காலை 9 முதல் மாலை 5 மணி வரை நடைபெறும்....

பேருந்தில் கல்லூரி மாணவிக்கு பாலியல் தொல்லை; கோவையில் காவலர் கைது

பொள்ளாச்சியில் இருந்து கோவை வந்த பேருந்தில் பயணித்த கல்லூரி மாணவிக்கு பாலியல் தொல்லை அளித்ததாக, போத்தனூர் காவல் நிலைய கு...