கோவையில் சமையல் கேஸ் கசிவால் தீ விபத்து - பெண் தீ காயங்களுடன் அரசு மருத்துவமனையில் அனுமதி…!

பக்ரீத் பண்டிகையையொட்டி பிரியாணி சமைத்துக்கொண்டு இருந்தார், திடீரென கேஸ் கசிவு ஏற்பட்டு தீ பிடித்தது. கண்இமைக்கும் நேரத்தில் பெண்ணின் ஆடையில் தீ பிடித்தது. இது குறித்து போத்தனூர் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.



கோவை: கோவையில் சமையல் கேஸ் கசிவு ஏற்பட்டு பெண் தீ காயங்களுடன் அரசு மருத்துவமனையில் அனுமதி அனுமதிக்கப்ட்டுள்ளார்.

கோவை போத்தனூர் அருகே உள்ள சர்தார் சாகிப் வீதியை சேர்ந்தவர் அப்துல் கரீம். இவரது மனைவி ஆயிஷா (45). இவர்களுக்கு கடந்த 25 வருடங்களுக்கு முன்பு திருமணம் நடந்தது. 2 மகள்கள் உள்ளனர். 2 பேருக்கும் திருமணம் ஆகி விட்டது.

நேற்று பக்ரீத் பண்டிகையையொட்டி ஆயிஷாவின் வீட்டிற்கு அவரது 2 மகள்களும் வந்து இருந்தனர். அவர்களுக்காக கேஸ் அடுப்பில் பிரியாணி சமைத்துக்கொண்டு இருந்தார்.

அப்போது திடீரென கேஸ் கசிவு ஏற்பட்டு தீ பிடித்தது. கண்இமைக்கும் நேரத்தில் ஆயிஷாவின் ஆடையில் தீ பிடித்தது. இதனால் வலி தாங்க முடியாமல் அவர் சத்தம் போட்டுள்ளார்.

இதனை கேட்ட வீட்டில் இருந்தவர்கள் உடனடியாக அவரை மீட்டு கோவை அரசு மருத்துவமனையில் சேர்த்தனர். அங்கு மருத்துவர்கள் ஆயிஷாவை தீவிர சிகிச்சை பிரிவில் அனுமதித்து சிகிச்சை அளித்து வருகின்றனர்.

இது குறித்து போத்தனூர் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.

Newsletter

உலக புகையிலை ஒழிப்பு தினம்: போத்தனூர்-வெள்ளலூர் பகுதியில் காவல்துறை விழிப்புணர்வு முகாம்

உலக புகையிலை ஒழிப்பு தினத்தையொட்டி கோவை போத்தனூர் காவல் நிலையத்தின் சார்பில் வெள்ளலூர் குடியிருப்பு பகுதியில் போதைப்பொரு...

பேரூர் கோவிலில் ரூ.1.40 கோடி புதிய திருத்தேர்: பாலக்கால் பூஜையுடன் திருப்பணி தொடக்கம்

கோவை பேரூர் பட்டீஸ்வரர் கோவிலில் ரூ.1.40 கோடி மதிப்பீட்டில் புதிய திருத்தேர் அமைக்கும் திருப்பணிக்கான பாலக்கால் பூஜை நடை...

கோவையில் நெடுஞ்சாலைத்துறை வளர்ச்சி திட்டங்கள் குறித்து அமைச்சர் ஆதவ் அர்ஜுனா ஆய்வு

கோவை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் பொதுப்பணித்துறை அமைச்சர் ஆதவ் அர்ஜுனா நெடுஞ்சாலைத்துறை வளர்ச்சி திட்ட பணிகள் குறித்து...

கோவையில் சர்வதேச மாநாட்டில் சிறந்த அறிவியல் சிந்தனைகளுக்கு ரூ.1 லட்சம் பரிசு

கோவை தொழில்நுட்பக் கல்லூரியில் ஜூன் 3 முதல் 5 வரை நடைபெறும் AMCEHA 2026 சர்வதேச மாநாட்டில், சிறந்த அறிவியல் சிந்தனை மற்ற...

கோவை நேரு உள்விளையாட்டு அரங்கில் அமைச்சர் ஆதவ் அர்ஜுனா ஆய்வு

கோவையில் விளையாட்டு மற்றும் பொதுப்பணி துறை அமைச்சர் ஆதவ் அர்ஜுனா நேரு உள்விளையாட்டு அரங்கில் கபடி வீரர்களைச் சந்தித்து அ...

கோவையில் தடை செய்யப்பட்ட புகையிலை பொருட்கள் பறிமுதல்; 4 பேர் கைது

கோவை மாநகரில் தடை செய்யப்பட்ட குட்கா மற்றும் புகையிலைப் பொருட்கள் விற்பனையை தடுக்க போலீசார் நடத்திய சோதனையில், வெவ்வேறு...