திருப்பூரில் நஞ்சராயன் குளம் பாதுகாப்பு இயக்கத்தினர் மாவட்ட ஆட்சியரிடம் மனு..!

அரசு நிலத்தை தனியார் பள்ளியை நடத்திவரும் டிரஸ்டுக்கு விற்பனை செய்த விவகாரம் தொடர்பாக, முன்னாள் அதிமுக அமைச்சர் ஆர்.பி.உதயகுமார், வருவாய்த்துறை செயலாளர் மீது விசாரணை நடத்த லஞ்ச ஊழல் ஒழிப்பு துறைக்கு பரிந்துரைக்க வலியுறுத்தி ஆட்சியரிடம் மனு அளித்தனர்.



திருப்பூர்: திருப்பூரில் நஞ்சராயன் குளம் பாதுகாப்பு இயக்கத்தினர் மாவட்ட ஆட்சியரிடம் மனு அளித்தனர்.



திருப்பூர் நஞ்சராயன் குளக்கரையில் நீர்வழி பாதையில் உள்ள 50-கோடி ரூபாய் மதிப்புள்ள அரசு நிலத்தை ஒன்றரை கோடி ரூபாய்க்கு தனியார் பள்ளியை நடத்திவரும் டிரஸ்டுக்கு விற்பனை செய்ததில் நடைபெற்ற ஊழலில் தொடர்புடைய அதிமுகவின் முன்னாள் வருவாய்த்துறை அமைச்சர் ஆர் பி உதயகுமார், முன்னாள் வருவாய்த்துறை செயலாளர் அதுல்யா மிஸ்ரா மற்றும் திருப்பூர் மாவட்ட ஆட்சியாளர்களாக இருந்த கோவிந்தராஜன், விஜய கார்த்திகேயன் மீது விசாரிக்க லஞ்ச ஊழல் ஒழிப்புத்துறைக்கு பரிந்துரைக்க வேண்டும் எனவும், நில விற்பனையை ரத்து செய்து நீர்நிலை புறம்போக்கு வகைப்பாடு செய்து நஞ்சராயன் பறவைகள் சரணாலயத்திற்கு பயன்படுத்த வலியுறுத்தி நஞ்சராயன் குல பாதுகாப்பு இயக்கத்தினர் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் மனு அளித்தனர்.

திருப்பூர் ஊத்துக்குளி சாலையில் 440 ஏக்கர் பரப்பளவில் நொய்யல் ஆற்றின் துணை ஆறான நல்லாற்றின் குறுக்கே அமைந்துள்ளது நஞ்சராயன் குளம். தமிழ்நாட்டின் 17-வது பறவைகள் சரணாலயமாக தமிழ்நாடு அரசால் கடந்த 05-04-2022 ல் அறிவிக்கப்பட்டது. 181 பறவை இனங்கள், 40 வகை பட்டாம்பூச்சிகள், 76 வகை தாவரங்கள், 11 வகை நீர்வாழ் உயிரினங்கள், மற்றும் 16 வகை பூச்சி இனங்களுக்கு வாழ்விடமாகவும், வெளிநாட்டு பறவைகள் வலசை பாதையில் தங்கி செல்லும் இடமாகவும், 800 ஆண்டுகளுக்கு மேலாக இந்த குளம் உள்ளது. 40 ஆண்டுகளுக்கு முன்பு வரை அப்பகுதி மக்களுக்கும், விவசாயிகளுக்கும் மிகப்பெரிய நீராதாரமாகவும் இந்த குளம் விளங்கி வந்தது.

தற்போது இந்த குளத்தின் கரையில் இருந்து சாலை வரை 50 கோடி ரூபாய் மதிப்புள்ள 9 ஏக்கர் நிலத்தை வெறும் ஒன்றரை கோடி ரூபாய்க்கு குளத்திற்கு எதிரில் இயங்கிவரும் விகாஸ் வித்யாலயா பள்ளியை நடத்திவரும் விகாஸ் சேவா டிரஸ்டுக்கு தமிழ்நாடு அரசால் அளிக்கப்பட்டுள்ளது. அந்நிறுவனம் தற்போது குளக்கரையில் இருந்து சாலை வரை நீர்வழிப் பாதைகளை மறித்து கட்டுமான பணிகளை செய்து வருகிறது. ஏரியின் நீர் கசியும் பகுதியாகவும், இரண்டு மதகுகளிலும் இருந்து நீர் வெளியேறி செல்லும் இடமாகவும், நீர்வாழ் உயிரினங்கள், பறவைகள் வசிக்கும் பகுதியாக உள்ள இடத்தை நீர் நிலையாக, பறவைகள் சரணாலயத்தின் ஒரு பகுதியாக அறிவிப்பு செய்யாமல் ஏரியின் கரை முதல்கொண்டு அடிமாட்டு விலைக்கு தனியார் பள்ளிக்கு தாரை வார்க்கப்பட்டது. இது திருப்பூர் மக்களிடையே அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.



ஆகவே, விகாஸ் சேவா டிரஸ்டுக்கு அடிமாட்டு விலைக்கு 50 கோடி ரூபாய் மதிப்புள்ள நிலத்தை விற்பனை செய்ததை ரத்து செய்யக் கோரியும், மேற்படி நிலத்தை நீர் நிலையாக வகைப்பாடு செய்யக் கோரியும், நில விற்பனையில் நடைபெற்றுள்ள ஊழல் மீதும், இதற்கு துணைபோன அதிமுக முன்னாள் அமைச்சர் ஆர்பி உதயகுமார் மற்றும் அந்த துறை சார்ந்த அதிகாரிகள் மீது உரிய நடவடிக்கை எடுக்க கோரியும், பொதுமக்கள் மற்றும் நஞ்சராயன் குளம் பாதுகாப்பு இயக்கத்தின் சார்பில் மாவட்ட ஆட்சியரிடம் மனு கொடுக்கப்பட்டது.

Newsletter

உலக புகையிலை ஒழிப்பு தினம்: போத்தனூர்-வெள்ளலூர் பகுதியில் காவல்துறை விழிப்புணர்வு முகாம்

உலக புகையிலை ஒழிப்பு தினத்தையொட்டி கோவை போத்தனூர் காவல் நிலையத்தின் சார்பில் வெள்ளலூர் குடியிருப்பு பகுதியில் போதைப்பொரு...

பேரூர் கோவிலில் ரூ.1.40 கோடி புதிய திருத்தேர்: பாலக்கால் பூஜையுடன் திருப்பணி தொடக்கம்

கோவை பேரூர் பட்டீஸ்வரர் கோவிலில் ரூ.1.40 கோடி மதிப்பீட்டில் புதிய திருத்தேர் அமைக்கும் திருப்பணிக்கான பாலக்கால் பூஜை நடை...

கோவையில் நெடுஞ்சாலைத்துறை வளர்ச்சி திட்டங்கள் குறித்து அமைச்சர் ஆதவ் அர்ஜுனா ஆய்வு

கோவை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் பொதுப்பணித்துறை அமைச்சர் ஆதவ் அர்ஜுனா நெடுஞ்சாலைத்துறை வளர்ச்சி திட்ட பணிகள் குறித்து...

கோவையில் சர்வதேச மாநாட்டில் சிறந்த அறிவியல் சிந்தனைகளுக்கு ரூ.1 லட்சம் பரிசு

கோவை தொழில்நுட்பக் கல்லூரியில் ஜூன் 3 முதல் 5 வரை நடைபெறும் AMCEHA 2026 சர்வதேச மாநாட்டில், சிறந்த அறிவியல் சிந்தனை மற்ற...

கோவை நேரு உள்விளையாட்டு அரங்கில் அமைச்சர் ஆதவ் அர்ஜுனா ஆய்வு

கோவையில் விளையாட்டு மற்றும் பொதுப்பணி துறை அமைச்சர் ஆதவ் அர்ஜுனா நேரு உள்விளையாட்டு அரங்கில் கபடி வீரர்களைச் சந்தித்து அ...

கோவையில் தடை செய்யப்பட்ட புகையிலை பொருட்கள் பறிமுதல்; 4 பேர் கைது

கோவை மாநகரில் தடை செய்யப்பட்ட குட்கா மற்றும் புகையிலைப் பொருட்கள் விற்பனையை தடுக்க போலீசார் நடத்திய சோதனையில், வெவ்வேறு...