இடைக்கால பொதுச் செயலாளராக EPS-தேர்வு: திருப்பூரில் போஸ்டர் ஒட்டி அதிமுகவினர் கொண்டாட்டம்..!

அதிமுக இடைக்கால பொதுச் செயலாளராக எடப்பாடி பழனிசாமி தேர்வானதை வரவேற்று திருப்பூரில் அதிமுகவினர் போஸ்டர் ஒட்டிய தங்களது மகிழ்ச்சியை வெளிப்படுத்தியுள்ளனர்.


திருப்பூர்: அதிமுக இடைக்கால பொதுச் செயலாளராக எடப்பாடி பழனிச்சாமி தேர்வானதை வரவேற்று திருப்பூரில் போஸ்டர் ஒட்டிய அதிமுகவினர்.



சென்னையில் இன்று நடைபெற்ற அதிமுக செயற்குழு மற்றும் பொதுக்குழு கூட்டத்தில் அக்கட்சியின் இடைக்கால பொதுச் செயலாளராக எடப்பாடி பழனிச்சாமி தேர்வு செய்யப்பட்டார்.‌

அதனை வரவேற்று தமிழகம் முழுவதும் உள்ள இ.பி.எஸ் ஆதரவாளர்கள் கொண்டாடி வருகின்றனர். திருப்பூர் மாவட்டத்தில் எடப்பாடி பழனிச்சாமி ஆதரவாக அதிமுகவினர் பட்டாசு வெடித்தும் இனிப்புகள் வழங்கி கொண்டாடி வருகின்றனர்.



மேலும், திருப்பூர் மாநகர் பகுதிகளான பழைய பேருந்து நிலையம், காங்கேயம் சாலை, அவினாசி சாலை பகுதிகளில், எடப்பாடி ஆதரவாளர்கள் கழகத்தின் இதயமாக விளங்கும் செயற்குழு மற்றும் பொதுக்குழுவால் ஒருமனதாக, கழக பொதுச் செயலாளராக தேர்ந்தெடுக்கப்பட்டுள்ள மக்கள் முதல்வர் எடப்பாடியாருக்கு வாழ்த்துக்கள் என போஸ்டர்கள் ஒட்டி தங்கள் மகிழ்ச்சியை வெளிப்படுத்தியுள்ளனர்.

Newsletter

கோவையில் தொடங்கிய இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் மக்கள் சந்திப்பு நடைப்பயணம்

மத்திய அரசின் மக்கள் விரோதக் கொள்கைகளை எதிர்த்தும், தொழிலாளர்களுக்கு எதிராக கொண்டு வரப்பட்டுள்ள தொழிலாளர் சட்டங்களை திரு...

தங்க நகை வழிப்பறி வழக்கு: குற்றவாளிக்கு 7 ஆண்டு சிறை; ரூ.5,000 அபராதம் - கோவை நீதிமன்றம் தீர்ப்பு

கடந்த 2020 ஆம் ஆண்டு கோவையில் 100 கிராம் தங்க நகையை கத்தி முனையில் வழிப்பறி செய்த வழக்கில் குற்றம் நிரூபிக்கப்பட்ட இளைஞர...

கிணத்துக்கடவு அருகே வாலிபர் கொடூரக் கொலை

கோவை மாவட்டம் பொள்ளாச்சியை அடுத்த சிக்கலாம்பாளையம் பகுதியைச் சேர்ந்த அஸ்வின் (22) என்ற வாலிபாரின் வீட்டிற்குள் நள்ளிரவில...

அரசூர் துணை மின் நிலையத்தில் நாளை (07.08.2026) மின்தடை

கோவையில் அரசூர் துணை மின் நிலையத்தில் நாளை காலை 9 மணி முதல் மாலை 5 மணி வரை மாதாந்திர பராமரிப்பு பணிகள் நடைபெறுவதால் செல்...

கதிர்நாயக்கன்பாளையம் துணை மின் நிலையத்தில் நாளை (07.08.2026) மின்தடை

கோவை கதிர்நாயக்கன்பாளையம் துணை மின் நிலையத்தில் நாளை மாதாந்திர பராமரிப்பு பணிகள் காலை 9 முதல் மாலை 5 மணி வரை நடைபெறும்....

பேருந்தில் கல்லூரி மாணவிக்கு பாலியல் தொல்லை; கோவையில் காவலர் கைது

பொள்ளாச்சியில் இருந்து கோவை வந்த பேருந்தில் பயணித்த கல்லூரி மாணவிக்கு பாலியல் தொல்லை அளித்ததாக, போத்தனூர் காவல் நிலைய கு...