'மதுக்கடை வேண்டாம்'-கோவை மதுக்கரை பகுதியில் அமைய உள்ள மதுக்கடைக்கு வலுக்கும் எதிர்ப்புகள்..!

கோவை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் மதுக்கரை மார்க்கெட் பகுதியை சேர்ந்த பொதுமக்கள் மற்றும் கடைக்காரர்கள் மதுக்கடை வேண்டாம் என பதாகைகளை ஏந்தி மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் மனு அளித்தனர்.


கோவை: கோவை மாவட்டம் மதுக்கரை மார்க்கெட் பகுதியில் மதுபான கடைகள் அமைக்கும் பணிகள் மேற்கொள்ளப்பட்டு வரும் வரும் நிலையில், அப்பகுதி மக்கள் கடும் எதிர்ப்பு தெரிவித்து கோவை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் மனு அளித்து வருகின்றனர்.



அதன் தொடர்ச்சியாக இன்று கோவை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் மதுக்கரை மார்க்கெட் பகுதியை சேர்ந்த பொதுமக்கள் மற்றும் கடைக்காரர்கள் மதுக்கடை வேண்டாம் என பதாகைகளை ஏந்தி மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் மனு அளித்தனர்.



அப்பகுதியில் மதுக்கடை வருவதால் பொதுமக்களுக்கும் போக்குவரத்துக்கும் இடையூறு ஏற்படும் எனவும், இதனால் பொதுமக்களின் அமைதி சீர்குழையும் எனவும் அவர்கள் தெரிவித்தனர்.

எனவே, மதுபானக் கடையை வேறு இடத்திற்கு மாற்ற மாவட்ட நிர்வாகம் நடவடிக்கை எடுக்க வேண்டும் என கேட்டுக் கொண்டனர்.

Newsletter

கோவையில் தொடங்கிய இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் மக்கள் சந்திப்பு நடைப்பயணம்

மத்திய அரசின் மக்கள் விரோதக் கொள்கைகளை எதிர்த்தும், தொழிலாளர்களுக்கு எதிராக கொண்டு வரப்பட்டுள்ள தொழிலாளர் சட்டங்களை திரு...

தங்க நகை வழிப்பறி வழக்கு: குற்றவாளிக்கு 7 ஆண்டு சிறை; ரூ.5,000 அபராதம் - கோவை நீதிமன்றம் தீர்ப்பு

கடந்த 2020 ஆம் ஆண்டு கோவையில் 100 கிராம் தங்க நகையை கத்தி முனையில் வழிப்பறி செய்த வழக்கில் குற்றம் நிரூபிக்கப்பட்ட இளைஞர...

கிணத்துக்கடவு அருகே வாலிபர் கொடூரக் கொலை

கோவை மாவட்டம் பொள்ளாச்சியை அடுத்த சிக்கலாம்பாளையம் பகுதியைச் சேர்ந்த அஸ்வின் (22) என்ற வாலிபாரின் வீட்டிற்குள் நள்ளிரவில...

அரசூர் துணை மின் நிலையத்தில் நாளை (07.08.2026) மின்தடை

கோவையில் அரசூர் துணை மின் நிலையத்தில் நாளை காலை 9 மணி முதல் மாலை 5 மணி வரை மாதாந்திர பராமரிப்பு பணிகள் நடைபெறுவதால் செல்...

கதிர்நாயக்கன்பாளையம் துணை மின் நிலையத்தில் நாளை (07.08.2026) மின்தடை

கோவை கதிர்நாயக்கன்பாளையம் துணை மின் நிலையத்தில் நாளை மாதாந்திர பராமரிப்பு பணிகள் காலை 9 முதல் மாலை 5 மணி வரை நடைபெறும்....

பேருந்தில் கல்லூரி மாணவிக்கு பாலியல் தொல்லை; கோவையில் காவலர் கைது

பொள்ளாச்சியில் இருந்து கோவை வந்த பேருந்தில் பயணித்த கல்லூரி மாணவிக்கு பாலியல் தொல்லை அளித்ததாக, போத்தனூர் காவல் நிலைய கு...