'சிங்கப்பூரில் வேலை, கைநிறைய சம்பளம்' ஏமாற்றிய நபர், பணத்தை பறிகொடுத்தவர்கள் கோவையில் புகார் மனு..!

வெற்றி கொடி கட்டு பட பாணியில் சிங்கப்பூரில் வேலை வாங்கி தருவதாக கூறி ஏமாற்றிய தனியார் நிறுவனத்தின் மீது நடவடிக்கை எடுக்க கோரி கோவை மாவட்ட காவல் கண்காணிப்பாளர் அலுவலகத்தில் பாதிக்கப்பட்டவர்கள் புகார் மனு அளித்தனர்.



கோவை: சிங்கப்பூரில் வேலை வாங்கி தருவதாக கூறி ஏமாற்றிய தனியார் நிறுவனத்தின் மீது நடவடிக்கை எடுக்க கோரி கோவை மாவட்ட காவல் கண்காணிப்பாளர் அலுவலகத்தில் பாதிக்கப்பட்டவர்கள் புகார் மனு அளித்தனர்.



கோவை வடவள்ளி பகுதியில் எல்.எஸ். கன்ஸ்டிரக்ஷன் அபோர்ட் டூரிஸ்ட் அண்ட் டிராவல்ஸ் என்ற நிறுவனம் சிங்கப்பூரில் வேலை வாங்கித் தருவதாக கூறி ஏமாற்றி விட்டதாகவும், இதற்கு நடவடிக்கை எடுக்க கோரியும் 50-க்கும் மேற்பட்ட பாதிக்கப்பட்டவர்கள் கோவை மாவட்ட காவல் கண்காணிப்பாளர் அலுவலகத்தில் புகார் மனு அளித்தனர்.



இதுகுறித்து பாதிக்கப்பட்டவர்கள் தெரிவிக்கையில், செய்தித்தாள்களில் அந்நிறுவனத்தின் விளம்பரத்தை பார்த்து அந்நிறுவனத்தில் தொடர்பு கொண்டதாகவும், சிங்கப்பூரில் பல்வேறு இன்ஜினியரிங் வேலை, வாகன ஓட்டுநர், அட்மின் வேலைகளுக்கு வேலை வாங்கி தருவதாக கூறி ஒவ்வொருவரிடமிருந்தும் பதிவு செய்யும் வேலைக்கேற்ப ஒரு லட்சம் முதல் பணத்தைப் பெற்றுக் கொண்டதாகவும், விமான பயண சீட்டுகளையும் வழங்கிவிட்டு, கடந்த 8-ம் தேதி வாகனம் வந்து பிக்கப் செய்து கொண்டு சென்னை சென்று கொரோனா பரிசோதனைகள் எல்லாம் செய்துவிட்டு பின் சிங்கப்பூர் அழைத்து செல்வோம் எனக் கூறியதாகவும், ஆனால் 8-ம் தேதி மதியம் வரை வாகனம் எதுவும், தங்களை பிக்கப் செய்ய வரவில்லை என்றும், அந்நிறுவனத்தை தொலைப்பேசியில் தொடர்பு கொண்ட பொழுதும் லைன் கிடைக்காமல் இருந்ததாகவும், சிலர் நேரடியாக அங்கு சென்று பார்க்கும் பொழுது அந்நிறுவனம் பூட்டப்பட்டிருந்ததாகவும், பின்பு தான் தாங்கள் ஏமாற்றப்பட்டது தெரிய வந்ததாக தெரிவித்தனர்.



மேலும், அந்த நிறுவனம் தமிழகம் முழுவதும் இருந்து சுமார் 100-க்கும் மேற்பட்டவர்களிடம் இருந்து மூன்று கோடி ரூபாய் வரை பணத்தைப் பெற்றுக் கொண்டு ஏமாற்றியது தெரியவந்ததாகவும், இது குறித்து வடவள்ளி காவல் நிலையத்தில் புகார் தெரிவிக்க பட்டுள்ளதாகவும், கோவை மாவட்ட காவல் கண்காணிப்பாளர் அலுவலகத்திலும் புகார் மனு அளித்துள்ளதாக தெரிவித்தனர்.

மாவட்ட காவல் கண்காணிப்பாளர் உடனடியாக நடவடிக்கை மேற்கொண்டு தங்கள் பணத்தை மீட்டுத் தர வேண்டும் என கோரிக்கை விடுத்துள்ளனர்.



Newsletter

கோவையில் தொடங்கிய இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் மக்கள் சந்திப்பு நடைப்பயணம்

மத்திய அரசின் மக்கள் விரோதக் கொள்கைகளை எதிர்த்தும், தொழிலாளர்களுக்கு எதிராக கொண்டு வரப்பட்டுள்ள தொழிலாளர் சட்டங்களை திரு...

தங்க நகை வழிப்பறி வழக்கு: குற்றவாளிக்கு 7 ஆண்டு சிறை; ரூ.5,000 அபராதம் - கோவை நீதிமன்றம் தீர்ப்பு

கடந்த 2020 ஆம் ஆண்டு கோவையில் 100 கிராம் தங்க நகையை கத்தி முனையில் வழிப்பறி செய்த வழக்கில் குற்றம் நிரூபிக்கப்பட்ட இளைஞர...

கிணத்துக்கடவு அருகே வாலிபர் கொடூரக் கொலை

கோவை மாவட்டம் பொள்ளாச்சியை அடுத்த சிக்கலாம்பாளையம் பகுதியைச் சேர்ந்த அஸ்வின் (22) என்ற வாலிபாரின் வீட்டிற்குள் நள்ளிரவில...

அரசூர் துணை மின் நிலையத்தில் நாளை (07.08.2026) மின்தடை

கோவையில் அரசூர் துணை மின் நிலையத்தில் நாளை காலை 9 மணி முதல் மாலை 5 மணி வரை மாதாந்திர பராமரிப்பு பணிகள் நடைபெறுவதால் செல்...

கதிர்நாயக்கன்பாளையம் துணை மின் நிலையத்தில் நாளை (07.08.2026) மின்தடை

கோவை கதிர்நாயக்கன்பாளையம் துணை மின் நிலையத்தில் நாளை மாதாந்திர பராமரிப்பு பணிகள் காலை 9 முதல் மாலை 5 மணி வரை நடைபெறும்....

பேருந்தில் கல்லூரி மாணவிக்கு பாலியல் தொல்லை; கோவையில் காவலர் கைது

பொள்ளாச்சியில் இருந்து கோவை வந்த பேருந்தில் பயணித்த கல்லூரி மாணவிக்கு பாலியல் தொல்லை அளித்ததாக, போத்தனூர் காவல் நிலைய கு...