கோவையில் கல்லூரி மாணவர்களை.குறி வைக்கும் போதை மாத்திரைகள் - இருவரை கைது செய்து ஆர்.எஸ். புரம் போலீசார் நடவடிக்கை.

ஆர்.எஸ்.புரம் போலீஸ் ஆய்வாளர் ஆனந்த ஜோதி தலைமையிலான போலீசார் போதை மாத்திரைகளை பதுக்கி வைத்து விற்பனையில் ஈடுபட்ட இருவரிடம் 114 போதை மாத்திரைகளை பறிமுதல் செய்து, கைது செய்தனர்.


கோவை: கோவையில் சமீப காலமாக இளைஞர்கள் மற்றும் கல்லூரி மாணவர்கள் இடையே வலி நிவாரணி மாத்திரைகளை போதை மாத்திரையாக பயன்படுத்தும் கலாச்சாரம் அதிகரித்து வருகிறது.

குறிப்பாக, கல்லூரி மாணவர்களை குறி வைத்து ஒரு கும்பல் போதை மாத்திரைகளை விற்பனை செய்து வருவதாக கிடைத்த ரகசிய தகவலை அடுத்து மாநகரில் மர்ம கும்பலை பிடிக்க தனிப்படைகள் அமைக்கப்பட்டு உள்ளது. தனிப்படை போலீசார் பல்வேறு கோணங்களில் விசாரணை நடத்தி போதை மாத்திரைகளை விற்பனை செய்யும் கும்பலை கைது செய்ய நடவடிக்கை எடுத்து வருகிறார்கள்.

இதுவரை மாநகரில் மட்டும் 20-க்கும் மேற்பட்டோர் போதை மாத்திரை விற்பனை செய்த வழக்கில் கைது செய்யப்பட்டு உள்ள நிலையில், தடாகம் ரோடு எரிமேடு, முத்தண்ணன் குளம் பகுதியில் சிலர் போதை மாத்திரைகளை பதுக்கி வைத்து விற்பனை செய்வதாக ஆர்.எஸ்.புரம் போலீசாருக்கு ரகசிய தகவல் கிடைத்தது.

இதனையடுத்து, ஆர்.எஸ்.புரம் போலீஸ் ஆய்வாளர் ஆனந்த ஜோதி தலைமையிலான போலீசார் தகவல்சம்பவ இடத்துக்கு விரைந்து சென்றனர். அங்கு போதை மாத்திரைகளை பதுக்கி வைத்து விற்பனையில் ஈடுபட்டஆர்.எஸ்.புரத்தை சேர்ந்த திருஞானம் (25), சாய்பாபா காலனியை சேர்ந்த அபாஸ் (32) ஆகியோரை போலீசார் கைது செய்தனர்.

அவர்களிடம் இருந்து 114 போதை மாத்திரைகளை போலீசார் பறிமுதல் செய்தனர். பின்னர் இருவரையும்நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர்.

Newsletter

கோவையில் தொடங்கிய இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் மக்கள் சந்திப்பு நடைப்பயணம்

மத்திய அரசின் மக்கள் விரோதக் கொள்கைகளை எதிர்த்தும், தொழிலாளர்களுக்கு எதிராக கொண்டு வரப்பட்டுள்ள தொழிலாளர் சட்டங்களை திரு...

தங்க நகை வழிப்பறி வழக்கு: குற்றவாளிக்கு 7 ஆண்டு சிறை; ரூ.5,000 அபராதம் - கோவை நீதிமன்றம் தீர்ப்பு

கடந்த 2020 ஆம் ஆண்டு கோவையில் 100 கிராம் தங்க நகையை கத்தி முனையில் வழிப்பறி செய்த வழக்கில் குற்றம் நிரூபிக்கப்பட்ட இளைஞர...

கிணத்துக்கடவு அருகே வாலிபர் கொடூரக் கொலை

கோவை மாவட்டம் பொள்ளாச்சியை அடுத்த சிக்கலாம்பாளையம் பகுதியைச் சேர்ந்த அஸ்வின் (22) என்ற வாலிபாரின் வீட்டிற்குள் நள்ளிரவில...

அரசூர் துணை மின் நிலையத்தில் நாளை (07.08.2026) மின்தடை

கோவையில் அரசூர் துணை மின் நிலையத்தில் நாளை காலை 9 மணி முதல் மாலை 5 மணி வரை மாதாந்திர பராமரிப்பு பணிகள் நடைபெறுவதால் செல்...

கதிர்நாயக்கன்பாளையம் துணை மின் நிலையத்தில் நாளை (07.08.2026) மின்தடை

கோவை கதிர்நாயக்கன்பாளையம் துணை மின் நிலையத்தில் நாளை மாதாந்திர பராமரிப்பு பணிகள் காலை 9 முதல் மாலை 5 மணி வரை நடைபெறும்....

பேருந்தில் கல்லூரி மாணவிக்கு பாலியல் தொல்லை; கோவையில் காவலர் கைது

பொள்ளாச்சியில் இருந்து கோவை வந்த பேருந்தில் பயணித்த கல்லூரி மாணவிக்கு பாலியல் தொல்லை அளித்ததாக, போத்தனூர் காவல் நிலைய கு...