வழக்குப்பதிவு செய்து இளங்கோவன், லோகநாதன் ஆகிய இருவரை கைது செய்த போலீசார் தலைமறைவாக உள்ள இருவரை தேடி வருகின்றனர். இந்த வழக்கில் கைது செய்யப்பட்ட இளங்கோவன் என்பவரின் தந்தை வால்பாறை சரகத்தில் உள்ள காவல் நிலையத்தில் காவலராக பணியாற்றி வருகிறார்.
கோவை: சூலக்கல் அருகே பால்காரரை வழிமறித்து 5000-பணம் பறித்த இருவர் கைது செய்யப்பட்டுள்ளனர்.
திருப்பூர் மாவட்டம் உடுமலை அருகே உள்ள துங்காவி பகுதியைச் சேர்ந்தவர் 32-வயதான முத்துக்குமார். தனியார் நிறுவனத்தில் பால் வாங்கி விற்பனை செய்து வரும் இவர், நேற்று முன்தினம் வடக்கிபாளையம் மற்றும் சூலக்கல் பகுதியில் பால் விற்பனை செய்துவிட்டு, தரைப்பாலம் அருகே இருசக்கர வாகனத்தில் சென்று கொண்டிருந்தார்.
அப்போது, அங்கு நின்று கொண்டிருந்த நான்கு பேர் திடீரென முத்துக்குமாரை வழிமறித்ததாகத் தெரிகிறது. பின்னர், அவரிடம் இருந்து ரூபாய் ஐந்தாயிரத்தைப் பறித்துக் கொண்டு அங்கிருந்து தப்பிச் சென்றதாகக் கூறப்படுகிறது.
அப்போது, முத்துக்குமார் அந்த அடையாளம் தெரியாத நபர்களின் வாகனப்பதிவு எண்ணைக் குறித்து வைத்து, சம்பவம் தொடர்பாக வடக்கிபாளையம் போலீசில் புகார் அளித்தார்.
புகாரையடுத்து போலீசார் வழக்குப்பதிவு செய்து கிணத்துக்கடவு பகுதியை சேர்ந்த இளங்கோவன் மற்றும் அம்பேத்கர் வீதியைச் சேர்ந்த லோகநாதன் ஆகிய இருவரை கைது செய்தனர்.
மேலும், தலைமறைவாக உள்ள இருவரை போலீசார் தேடி வருகின்றனர். இந்த வழக்கில் கைது செய்யப்பட்ட இளங்கோவன் என்பவரின் தந்தை வால்பாறை சரகத்தில் உள்ள காவல் நிலையத்தில் காவலராக பணியாற்றி வருவது குறிப்பிடத்தக்கது.