கோடநாடு கொலை வழக்கு: மணல் ஒப்பந்ததாரர் மகனிடம் 3-வது நாளாக போலீசார் தொடர் விசாரணை..!

இன்று 3-வது நாளாக செந்தில்குமாரிடம் தனிப்படை போலீசார் கோவை போலீஸ் பயிற்சி மைதானத்தில் உள்ள அலுவலகத்தில் வைத்து விசாரணை நடத்தி வருகின்றனர்.


கோவை: கோடநாடு கொலை வழக்கு தொடர்பாக, மணல் ஒப்பந்ததாரர் மகனிடம் 3-வது நாளாக போலீசார் தொடர் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

நீலகிரி மாவட்டம் கோத்தகிரி அருகே உள்ள ஜெயலலிதாவுக்கு சொந்தமான கோடநாடு எஸ்டேட்டில் கடந்த 2017-ம் ஆண்டு கொலை, கொள்ளை சம்பவம் நடந்தது.

இந்த வழக்கு தொடர்பாக மேற்கு மண்டல ஐ.ஜி.சுதாகர் தலைமையில் 5-தனிப்படைகள் அமைக்கப்பட்டு, தற்போது மறு விசாரணை நடந்து வருகிறது. தனிப்படை போலீசார் முன்னாள் எம்.எல்.ஏ. ஆறுக்குட்டி, ஜெயலலிதாவின் நேர்முக உதவியாளராக பணியாற்றிய பூங்குன்றன், சஜிவன் மற்றும் சசிகலாவிடமும் விசாரணை நடத்தினர்.

இந்த நிலையில் இந்த வழக்கு தொடர்பாக கோவையை சேர்ந்த தொழில் அதிபரும், மணல் ஒப்பந்ததாரருமான ஆறுமுகசாமியின் மகனான செந்தில்குமாரிடம் விசாரணை நடத்த முடிவு செய்த தனிப்படையினர் அவருக்கு விசாரணைக்கு ஆஜராக சம்மன் அனுப்பினர்.

நேற்று முன்தினம் அவர் கோவை காவலர் பயிற்சி வளாகத்தில் உள்ள விசாரணை அலுவலகத்தில் ஆஜராகினார். அவரிடம் ஐ.ஜி.சுதாகர் தலைமையிலான தனிப்படையினர் விசாரணை நடத்தினர்.

நேற்று 2-வது நாளாகவும் செந்தில்குமாரிடம் விசாரித்தனர். மேலும் அவரது தந்தையான ஆறுமுகசாமியிடமும் விசாரணை நடைபெற்றது. அவர் தனக்கு தெரிந்த தகவல்களை போலீசாரிடம் தெரிவித்தார்.

இந்த நிலையில் இன்று 3-வது நாளாக செந்தில்குமாரிடம் தனிப்படை போலீசார் கோவை போலீஸ் பயிற்சி மைதானத்தில் உள்ள அலுவலகத்தில் வைத்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

அவரிடம் கோடநாடு தொடர்பான கேள்விகளை கேட்டு விசாரணை மேற்கொண்டனர். கோடநாடு ஆவணங்கள் எப்படி வந்தது. இந்த வழக்கில் என்னென்ன தகவல்கள் தெரியும் என்பது உட்பட பல்வேறு கேள்விகளை கேட்டு தனிப்படையினர் விசாரணை மேற்கொண்டனர்.

அவரும் தனக்கு தெரிந்த தகவல்களை தனிப்படையினரிடம் தெரிவித்தார். அவற்றை போலீசார் பதிவு செய்து கொண்டனர்.

Newsletter

உலக புகையிலை ஒழிப்பு தினம்: போத்தனூர்-வெள்ளலூர் பகுதியில் காவல்துறை விழிப்புணர்வு முகாம்

உலக புகையிலை ஒழிப்பு தினத்தையொட்டி கோவை போத்தனூர் காவல் நிலையத்தின் சார்பில் வெள்ளலூர் குடியிருப்பு பகுதியில் போதைப்பொரு...

பேரூர் கோவிலில் ரூ.1.40 கோடி புதிய திருத்தேர்: பாலக்கால் பூஜையுடன் திருப்பணி தொடக்கம்

கோவை பேரூர் பட்டீஸ்வரர் கோவிலில் ரூ.1.40 கோடி மதிப்பீட்டில் புதிய திருத்தேர் அமைக்கும் திருப்பணிக்கான பாலக்கால் பூஜை நடை...

கோவையில் நெடுஞ்சாலைத்துறை வளர்ச்சி திட்டங்கள் குறித்து அமைச்சர் ஆதவ் அர்ஜுனா ஆய்வு

கோவை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் பொதுப்பணித்துறை அமைச்சர் ஆதவ் அர்ஜுனா நெடுஞ்சாலைத்துறை வளர்ச்சி திட்ட பணிகள் குறித்து...

கோவையில் சர்வதேச மாநாட்டில் சிறந்த அறிவியல் சிந்தனைகளுக்கு ரூ.1 லட்சம் பரிசு

கோவை தொழில்நுட்பக் கல்லூரியில் ஜூன் 3 முதல் 5 வரை நடைபெறும் AMCEHA 2026 சர்வதேச மாநாட்டில், சிறந்த அறிவியல் சிந்தனை மற்ற...

கோவை நேரு உள்விளையாட்டு அரங்கில் அமைச்சர் ஆதவ் அர்ஜுனா ஆய்வு

கோவையில் விளையாட்டு மற்றும் பொதுப்பணி துறை அமைச்சர் ஆதவ் அர்ஜுனா நேரு உள்விளையாட்டு அரங்கில் கபடி வீரர்களைச் சந்தித்து அ...

கோவையில் தடை செய்யப்பட்ட புகையிலை பொருட்கள் பறிமுதல்; 4 பேர் கைது

கோவை மாநகரில் தடை செய்யப்பட்ட குட்கா மற்றும் புகையிலைப் பொருட்கள் விற்பனையை தடுக்க போலீசார் நடத்திய சோதனையில், வெவ்வேறு...