கோவையில் கிட்னி தானம் செய்தால் ரூ.6.2-கோடி, அறுவை சிகிச்சை கட்டணமாக ரூ.4 லட்சம் பெங்களூரு மருத்துவர் நூதன மோசடி..!

போலீசார் நம்பிக்கை மோசடி பிரிவின் கீழ் மருத்துவர் மீது வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். கிட்னி தானமாக பெற்றுக்கொள்வதாக பணம் மோசடி நடைபெற்ற சம்பவம் கோவையில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.


கோவை: கோவையில் கிட்னி தானமாக பெறுவதாக பெண்ணிடம் 4-லட்சம் மோசடி செய்த பெங்களூரு மருத்துவர் மீது வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது.

கோவை ரத்தினபுரி பகுதியை சேர்ந்தவர் 40-வயது பெண். கூலி வேலைக்கு சென்று வருகிறார். இவருக்கு திருமணமாகி கணவரும், குழந்தைகளும் உள்ளனர். இவர் குடும்ப வறுமை காரணமாக கஷ்டப்பட்டு வந்தார்.

அப்போது அவரிடம் உறவினர் ஒருவர் பெங்களூரில் உள்ள மருத்துவமனையில் ஒரு கிட்னியை ரூ. 6.2 கோடிக்கு பெற்று கொள்வதாக கூறியதாகவும், அந்த மருத்துவரை அறிமுகப்படுத்தி வைத்ததாகவும், தெரிகிறது.

இந்நிலையில், அந்த பெண் பெங்களூரில் உள்ள தனியார் மருத்துவமனைக்கு சென்று மருத்துவரைச் சந்தித்துள்ளார். அப்போது சிறுநீரக மாற்று அறுவை சிகிச்சை பிரிவில் பணியாற்றும் பெங்களூரை சேர்ந்த மருத்துவர் தாமஸ் அரோன் பெனா (45) என்பவர் ரூ.6.2 கோடிக்கு உங்களது சிறுநீரகத்தை பெற்றுக் கொள்கிறோம்.

ஆனால், அறுவை சிகிச்சை கட்டணமாக ரூ.4 லட்சத்து 14-ஆயிரத்து 269-யை முன்கூட்டியே கட்ட வேண்டும் என தெரிவித்துள்ளார். அதன் பின்னர் நீங்கள் கட்டிய பணத்துடன் ரூ.6.2 கோடி உங்களுக்குக் கொடுக்கப்படும் என தெரிவித்துள்ளார். இதனால் தனது குடும்ப வறுமையை கருத்தில் கொண்டு கிட்னியை தானமாக கொடுக்க முடிவு செய்துள்ளார்.

இதனை அவர் குடும்பத்தினரிடம் தெரிவிக்கவில்லை என தெரிகிறது. அதன் பிறகு தனக்கு தெரிந்தவர்களிடம் பணத்தைக் கடனாகத் திரட்டி மருத்துவரின் வங்கி கணக்கில் சில மாதங்களுக்கு முன்பு ரூ.4,14,269-யை செலுத்தி உள்ளார். இந்த தகவல் எப்படியோ அந்த பெண்ணின் குடும்பத்தினருக்கு தெரியவந்தது.

உடனே அவர்கள் கிட்னி தானமாக கொடுப்பதற்கு எதிர்ப்பு தெரிவித்ததுடன், கொடுத்த பணத்தைத் திருப்பி வாங்குமாறு தெரிவித்துள்ளனர். பின்னர் தனது முடிவை மாற்றிக் கொண்ட அந்த பெண் தான் கொடுத்த பணத்தை திருப்பி கேட்டபோது மருத்துவர் தாமஸ் அரோன் பெனா கொடுக்க மறுத்துவிட்டார். இதனால் அதிர்ச்சி அடைந்த அந்த பெண் இதுகுறித்து ரத்தினபுரி போலீஸ் நிலையத்தில் புகார் அளித்தார்.

அதன்பேரில், போலீசார் நம்பிக்கை மோசடி பிரிவின் கீழ் மருத்துவர் மீது வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். கிட்னி தானமாக பெற்றுக்கொள்வதாக பணம் மோசடி நடைபெற்ற சம்பவம் கோவையில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

Newsletter

கோவையில் தொடங்கிய இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் மக்கள் சந்திப்பு நடைப்பயணம்

மத்திய அரசின் மக்கள் விரோதக் கொள்கைகளை எதிர்த்தும், தொழிலாளர்களுக்கு எதிராக கொண்டு வரப்பட்டுள்ள தொழிலாளர் சட்டங்களை திரு...

தங்க நகை வழிப்பறி வழக்கு: குற்றவாளிக்கு 7 ஆண்டு சிறை; ரூ.5,000 அபராதம் - கோவை நீதிமன்றம் தீர்ப்பு

கடந்த 2020 ஆம் ஆண்டு கோவையில் 100 கிராம் தங்க நகையை கத்தி முனையில் வழிப்பறி செய்த வழக்கில் குற்றம் நிரூபிக்கப்பட்ட இளைஞர...

கிணத்துக்கடவு அருகே வாலிபர் கொடூரக் கொலை

கோவை மாவட்டம் பொள்ளாச்சியை அடுத்த சிக்கலாம்பாளையம் பகுதியைச் சேர்ந்த அஸ்வின் (22) என்ற வாலிபாரின் வீட்டிற்குள் நள்ளிரவில...

அரசூர் துணை மின் நிலையத்தில் நாளை (07.08.2026) மின்தடை

கோவையில் அரசூர் துணை மின் நிலையத்தில் நாளை காலை 9 மணி முதல் மாலை 5 மணி வரை மாதாந்திர பராமரிப்பு பணிகள் நடைபெறுவதால் செல்...

கதிர்நாயக்கன்பாளையம் துணை மின் நிலையத்தில் நாளை (07.08.2026) மின்தடை

கோவை கதிர்நாயக்கன்பாளையம் துணை மின் நிலையத்தில் நாளை மாதாந்திர பராமரிப்பு பணிகள் காலை 9 முதல் மாலை 5 மணி வரை நடைபெறும்....

பேருந்தில் கல்லூரி மாணவிக்கு பாலியல் தொல்லை; கோவையில் காவலர் கைது

பொள்ளாச்சியில் இருந்து கோவை வந்த பேருந்தில் பயணித்த கல்லூரி மாணவிக்கு பாலியல் தொல்லை அளித்ததாக, போத்தனூர் காவல் நிலைய கு...