சர்வதேச தொழில் முனைவோர் அமைப்பு கோவை கிளையின் (டை) சார்பில் 'கிரீன்கான் 22' மாநாடு..!

வர்த்தகம் மற்றும் பூமியை பாதுகாக்க வேண்டிய அவசியம் குறித்த புரிதலுக்காக 'டை' கோயம்புத்தூர் கிரீன்கான் 22 என்ற ஒரு நாள் மாநாட்டுக்கு நாடு முழுவதிலும் இருந்து 300-க்கும் மேற்பட்ட தொழில் முனைவோர், நிறுவனர்கள், கொள்கைகளை உருவாக்குபவர்கள், சிந்தனைவாதிகள், தலைவர்கள், மாணவர்கள் கலந்து கொண்டனர்.



கோவை: வர்த்தகம் மற்றும் பூமியை பாதுகாக்க வேண்டிய அவசியம் குறித்த புரிதலுக்காக 'டை' கோயம்புத்தூர் கிரீன்கான் "22 என்ற ஒரு நாள் மாநாட்டை நடத்தியது.



இந்த மாநாட்டில் நாடு முழுவதிலும் இருந்து 300க்கும் மேற்பட்ட தொழில் முனைவோர், நிறுவனர்கள், கொள்கைகளை உருவாக்குபவர்கள், சிந்தனைவாதிகள், தலைவர்கள், மாணவர்கள் கலந்து கொண்டனர்.

கிரின் கான் 22, குறித்து "டை" அமைப்பின் கோயம்புத்தூர் தலைவர் ரஞ்சனா சிங்காஸ் கூறுகையில், "கிரீன் கான் 22 என்பது தொழில் மற்றும் சூழலியல் மீதான நமது அர்ப்பணிப்பை புரிந்து கொள்ளவும். ஒருங்கிணைக்கவும் அதற்கான வழியில் செயல்படவும் மேற்கொள்ளப்பட்டுள்ள ஒரு முயற்சியாகும்" என்றார்.

நிகழ்வில், நடிகரும் அரசியல் தலைவருமான கமல்ஹாசன் காணொளி மூலம் சிறப்புரையாற்றினார். சுற்றுச்சூழல் மீது அக்கறையும், அதை பாதுகாக்கும் எண்ணமும் கொண்டதாக வியாபாரம்/தொழில் இருந்தால் தான் அது நிலைத்து நிற்க முடியும், என்றார். 



வேறு பிளானட்டில் வாழ முடியும் என்று பேசினாலும், அது நடக்க குறைந்தது 10 தலைமுறை ஆகும். இப்போது, இருப்பது நமக்கு இந்த ஒரு உலகம் தான் என்று புரிந்துகொண்டு செயல்பட வேண்டும், என்று கேட்டுக்கொண்டார். டை அமைப்பு இப்படி ஒரு நிகழ்ச்சியை அமைந்ததற்கு தனது பாராட்டுக்களையும் தெரிவித்தார்.



நிகழ்வில் BJ அருண், டை அமைப்பின் குளோபல் ஹெட், டை எப்படி தொழில்முனைவோரை உருவாக்கவும், அவர்களுக்கு உதவியாகும் இருக்கின்றது என்பதை பற்றி விளக்கினார்.



பருவநிலை மாற்ற முன்னோடிகளுக்கான ஆரம்ப நிலை ஆதரவு, தண்ணீர் பாதுகாப்பு, இயற்கை அழகு, பயிர் கழிவு எரிபொருளால் இயங்கும் பேட்டரிகள், கோயில் பூக்களை மேம்படுத்துதல், பசுமை கட்டிடங்கள் மற்றும் பருவநிலை கட்டுப்பாட்டு முயற்சிகள் போன்ற பல்வேறு தளங்களில் இருந்து பலர் -- 'பேட் மேன்' என்று அழைக்கப்படும் டாக்டர் அருணாச்சலம் முருகானந்தம், கார்த்திக் சந்திரசேகர் (சங்கம் வென்ச்சர்ஸ்), ஃபர்ஹாத் காண்டிராக்டர் (சம்பவ் டிரஸ்ட்), மேகா தேசாய் ஆஷர் மற்றும் ப்ரிதேஷ் ஆஷர் (ஜூசி கெமிஸ்ட்ரி), நிஷிதா நிகிதா பலியார்சிங் (நெக்ஸஸ் பவர்), அங்கித் அகர்வால் (பூல்) ஜெ.ஜி. கிரிதர் சிஇஓ-சியாரா, ஜூய் ஜோஷி (காலநிலை கூட்டு) ஆகியோர் நிகழ்ச்சியில் சிறப்புரையாற்றினர்.



Newsletter

உலக புகையிலை ஒழிப்பு தினம்: போத்தனூர்-வெள்ளலூர் பகுதியில் காவல்துறை விழிப்புணர்வு முகாம்

உலக புகையிலை ஒழிப்பு தினத்தையொட்டி கோவை போத்தனூர் காவல் நிலையத்தின் சார்பில் வெள்ளலூர் குடியிருப்பு பகுதியில் போதைப்பொரு...

பேரூர் கோவிலில் ரூ.1.40 கோடி புதிய திருத்தேர்: பாலக்கால் பூஜையுடன் திருப்பணி தொடக்கம்

கோவை பேரூர் பட்டீஸ்வரர் கோவிலில் ரூ.1.40 கோடி மதிப்பீட்டில் புதிய திருத்தேர் அமைக்கும் திருப்பணிக்கான பாலக்கால் பூஜை நடை...

கோவையில் நெடுஞ்சாலைத்துறை வளர்ச்சி திட்டங்கள் குறித்து அமைச்சர் ஆதவ் அர்ஜுனா ஆய்வு

கோவை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் பொதுப்பணித்துறை அமைச்சர் ஆதவ் அர்ஜுனா நெடுஞ்சாலைத்துறை வளர்ச்சி திட்ட பணிகள் குறித்து...

கோவையில் சர்வதேச மாநாட்டில் சிறந்த அறிவியல் சிந்தனைகளுக்கு ரூ.1 லட்சம் பரிசு

கோவை தொழில்நுட்பக் கல்லூரியில் ஜூன் 3 முதல் 5 வரை நடைபெறும் AMCEHA 2026 சர்வதேச மாநாட்டில், சிறந்த அறிவியல் சிந்தனை மற்ற...

கோவை நேரு உள்விளையாட்டு அரங்கில் அமைச்சர் ஆதவ் அர்ஜுனா ஆய்வு

கோவையில் விளையாட்டு மற்றும் பொதுப்பணி துறை அமைச்சர் ஆதவ் அர்ஜுனா நேரு உள்விளையாட்டு அரங்கில் கபடி வீரர்களைச் சந்தித்து அ...

கோவையில் தடை செய்யப்பட்ட புகையிலை பொருட்கள் பறிமுதல்; 4 பேர் கைது

கோவை மாநகரில் தடை செய்யப்பட்ட குட்கா மற்றும் புகையிலைப் பொருட்கள் விற்பனையை தடுக்க போலீசார் நடத்திய சோதனையில், வெவ்வேறு...