கோவை கே.சி.பி நிறுவனத்தில் 4-வது நாளாக தொடரும் சோதனை..!

முன்னாள் அமைச்சர் எஸ்.பி.வேலுமணியின் நண்பருக்கு சொந்தமான, கோவை கே.சி.பி நிறுவனத்தில் 4-வது நாளாக சோதனை தொடர்ந்து நடைபெற்று வருகிறது.


கோவை: கோவை கே.சி.பி நிறுவனத்தில் 4-வது நாளாக தொடர்ந்து சோதனை நடைபெற்று வருகிறது.

கோவை வடவள்ளியை சேர்ந்தவர் என்ஜினீயர் சந்திரசேகர். இவர் கோவை புறநகர் தெற்கு மாவட்ட அ.தி.மு.க எம்.ஜி.ஆர். இளைஞர் அணி செயலாளராக உள்ளார்.

கடந்த 6-ந் தேதி சந்திரசேகர் வீடு மற்றும் சகோதரர், சகோதரிகள் வீடு உட்பட 6 இடங்களிலும் சோதனை நடந்தது. சோதனையில் பல்வேறு ஆவணங்கள் மற்றும் லேப் டாப்பை போலீசார் எடுத்து சென்றதாகக் கூறப்பட்டது. கோவை பீளமேட்டில் கே.சி.பி. நிறுவனம் செயல்பட்டு வருகிறது.

இந்த நிறுவனத்தின் இயக்குனராக சந்திரபிரகாஷ் உள்ளார். இங்கு வருமான வரித்துறை சோதனை நடந்தது. நேற்று 3-வது நாளாக கே.சி.பி.நிறுவனம், ஆலயம் அறக்கட்டளையிலும் தொடர்ந்து சோதனை நடைபெற்றது. கே.சி.பி. நிறுவனத்தில் 3-வது நாளாக நேற்று காலை தொடங்கிய சோதனையானது விடிய, விடிய நடந்தது.

அப்போது அங்கிருந்த பல்வேறு ஆவணங்களைக் கைப்பற்றினர். மேலும் சந்திரபிரகாஷின் வீட்டிலும் சோதனை மேற்கொண்டனர். அப்போது அவரிடம் விசாரணை நடத்தினர். அந்த சமயம் அவருக்கு நெஞ்சுவலி ஏற்பட்டது. இதையடுத்து அவர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்றார்.

பின்னர் வீடு திரும்பிய அவரிடம் வருமான வரித்துறையினர் விசாரணை மேற்கொண்டனர். இந்த நிலையில் இன்று 4-வது நாளாக பீளமேட்டில் உள்ள கே.சி.பி. நிறுவனம் மற்றும் கொடிசியா அருகே உள்ள சந்திரபிரகாஷ் வீடுகளில் சோதனையில் ஈடுபட்டு வருகின்றனர்.

Newsletter

உலக புகையிலை ஒழிப்பு தினம்: போத்தனூர்-வெள்ளலூர் பகுதியில் காவல்துறை விழிப்புணர்வு முகாம்

உலக புகையிலை ஒழிப்பு தினத்தையொட்டி கோவை போத்தனூர் காவல் நிலையத்தின் சார்பில் வெள்ளலூர் குடியிருப்பு பகுதியில் போதைப்பொரு...

பேரூர் கோவிலில் ரூ.1.40 கோடி புதிய திருத்தேர்: பாலக்கால் பூஜையுடன் திருப்பணி தொடக்கம்

கோவை பேரூர் பட்டீஸ்வரர் கோவிலில் ரூ.1.40 கோடி மதிப்பீட்டில் புதிய திருத்தேர் அமைக்கும் திருப்பணிக்கான பாலக்கால் பூஜை நடை...

கோவையில் நெடுஞ்சாலைத்துறை வளர்ச்சி திட்டங்கள் குறித்து அமைச்சர் ஆதவ் அர்ஜுனா ஆய்வு

கோவை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் பொதுப்பணித்துறை அமைச்சர் ஆதவ் அர்ஜுனா நெடுஞ்சாலைத்துறை வளர்ச்சி திட்ட பணிகள் குறித்து...

கோவையில் சர்வதேச மாநாட்டில் சிறந்த அறிவியல் சிந்தனைகளுக்கு ரூ.1 லட்சம் பரிசு

கோவை தொழில்நுட்பக் கல்லூரியில் ஜூன் 3 முதல் 5 வரை நடைபெறும் AMCEHA 2026 சர்வதேச மாநாட்டில், சிறந்த அறிவியல் சிந்தனை மற்ற...

கோவை நேரு உள்விளையாட்டு அரங்கில் அமைச்சர் ஆதவ் அர்ஜுனா ஆய்வு

கோவையில் விளையாட்டு மற்றும் பொதுப்பணி துறை அமைச்சர் ஆதவ் அர்ஜுனா நேரு உள்விளையாட்டு அரங்கில் கபடி வீரர்களைச் சந்தித்து அ...

கோவையில் தடை செய்யப்பட்ட புகையிலை பொருட்கள் பறிமுதல்; 4 பேர் கைது

கோவை மாநகரில் தடை செய்யப்பட்ட குட்கா மற்றும் புகையிலைப் பொருட்கள் விற்பனையை தடுக்க போலீசார் நடத்திய சோதனையில், வெவ்வேறு...