பக்ரீத் பண்டிகையை ஒட்டி கோவை அன்னூர் ஆட்டு சந்தையில் களைகட்டிய வியாபாரம்..!

கொரோனா நோய் தொற்று கட்டுப்பாடுகளால் கடந்த 2-ஆண்டுகளாக பக்ரீத் பண்டிகைக்கு அன்னூர் ஆட்டுச் சந்தையில் பெரிய அளவில் விற்பனை நடைபெறாமல் இருந்த நிலையில், இந்த ஆண்டு சுமார் 50- முதல் 70-லட்சம் ரூபாய் அளவுக்கு விற்பனை நடைபெறும் என எதிர்பார்க்கப்படுகிறது.


கோவை: பக்ரீத் பண்டிகையையொட்டி அன்னூர் ஆட்டு சந்தை களைகட்டியது.

கோவை மாவட்டம், அன்னூர் அதன் சுற்று வட்டார கிராமங்களில் விவசாயம் பிரதான தொழிலாக உள்ளது. இங்குள்ள மக்கள் விவசாயத்துடன் சேர்ந்து ஆடு வளர்ப்பையும் செய்து வருகின்றனர்.

அன்னூரை சுற்றியுள்ள பகுதிகளில் புல்வெளிகள் நிறைந்த மேய்ச்சல் நிலங்கள் அதிகம் உள்ளதால் ஆடுகள் அதிக அளவில் வளர்க்கப்பட்டு வருகின்றன. அன்னூரில் வாரச்சந்தை உள்ளது. இந்த சந்தையானது வாரந்தோறும் சனிக்கிழமை நடைபெறும். அன்னூர் சந்தையில் விவசாயிகள் தங்கள் ஆடுகளை விற்பனை செய்வது வழக்கம்.

இந்த நிலையில், நாளை பக்ரீத் பண்டிகை கொண்டாடப்படுகிறது. இதனையொட்டி வார இறுதி நாளான இன்று, அன்னூர் சந்தையில் ஆடு விற்பனை களைகட்டியது. அன்னூர் மற்றும் சுற்றுவட்டாரப் பகுதிகளில் இருந்து விவசாயிகள் தங்கள் ஆடுகளை விற்பனைக்காக கொண்டு வந்திருந்தனர்.

கோவை, ஈரோடு, திருப்பூர், நீலகிரி மாவட்டங்களில் இருந்தும் கர்நாடகா, கேரள மாநிலங்களிலிருந்தும் ஆடுகளை வாங்க ஏராளமான வியாபாரிகள் குவிந்துள்ளனர்.

அன்னூரில் சாரல் மழை பெய்து வரும் நிலையில், சந்தையில் அதிகாலை முதலே ஆடுகள் விற்பனை களைகட்டியுள்ளது. சந்தை தொடங்கியதும் மழையில் நனைந்தவாறு வியாபாரிகள் போட்டி போட்டுக்கொண்டு ஆடுகளை வாங்கிச் சென்றனர். வெள்ளாடு, குரும்பாடு, செம்மறியாடு, மலையாடு உட்பட பல்வேறு வகையான ஆடுகள் விற்பனை செய்யப்பட்டு வருகின்றன.

குட்டிகள் 2 ஆயிரம் ரூபாயிலிருந்து 5 ஆயிரம் ரூபாய் வரையிலும், திடகாத்திரமான உடல் வாகுடன் சற்று எடை அதிகம் உள்ள ஆடுகள் 8 ஆயிரம் ரூபாய் முதல் அதிகபட்சமாக 25 ஆயிரம் ரூபாய் வரையிலும் விற்பனை செய்யப்பட்டு வருகின்றது.

அதே போல சந்தையில் நாட்டுக் கோழிகள் மற்றும் இறைச்சி வெட்டும் மரக்கட்டைகளும் அதிகளவில் விற்பனை செய்யப்பட்டு வருகிறது. கொரோனா நோய் தொற்று கட்டுப்பாடுகளால் கடந்த 2 ஆண்டுகளாக பக்ரீத் பண்டிகைக்கு அன்னூர் ஆட்டுச் சந்தையில் பெரிய அளவில் விற்பனை நடைபெறாமல் இருந்த நிலையில், இந்த ஆண்டு சுமார் 50 முதல் 70 லட்சம் ரூபாய் அளவுக்கு விற்பனை நடைபெறும் என எதிர்பார்க்கப்படுகிறது.

சந்தைக்கு வியாபாரிகள் அதிக அளவு வந்து செல்வதால் டீக்கடை, ஓட்டல் மற்றும் சிறு கடைகளிலும் வியாபாரம் விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. அதேபோல சந்தையில் அதிக அளவிலானோர் கூடியுள்ளதால் அன்னூரில் இருந்து மேட்டுப்பாளையம் வழியாக ஊட்டி செல்லும் சாலையில் அரைமணி நேரத்திற்கு மேலாக போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டுள்ளது.

Newsletter

கோவையில் தொடங்கிய இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் மக்கள் சந்திப்பு நடைப்பயணம்

மத்திய அரசின் மக்கள் விரோதக் கொள்கைகளை எதிர்த்தும், தொழிலாளர்களுக்கு எதிராக கொண்டு வரப்பட்டுள்ள தொழிலாளர் சட்டங்களை திரு...

தங்க நகை வழிப்பறி வழக்கு: குற்றவாளிக்கு 7 ஆண்டு சிறை; ரூ.5,000 அபராதம் - கோவை நீதிமன்றம் தீர்ப்பு

கடந்த 2020 ஆம் ஆண்டு கோவையில் 100 கிராம் தங்க நகையை கத்தி முனையில் வழிப்பறி செய்த வழக்கில் குற்றம் நிரூபிக்கப்பட்ட இளைஞர...

கிணத்துக்கடவு அருகே வாலிபர் கொடூரக் கொலை

கோவை மாவட்டம் பொள்ளாச்சியை அடுத்த சிக்கலாம்பாளையம் பகுதியைச் சேர்ந்த அஸ்வின் (22) என்ற வாலிபாரின் வீட்டிற்குள் நள்ளிரவில...

அரசூர் துணை மின் நிலையத்தில் நாளை (07.08.2026) மின்தடை

கோவையில் அரசூர் துணை மின் நிலையத்தில் நாளை காலை 9 மணி முதல் மாலை 5 மணி வரை மாதாந்திர பராமரிப்பு பணிகள் நடைபெறுவதால் செல்...

கதிர்நாயக்கன்பாளையம் துணை மின் நிலையத்தில் நாளை (07.08.2026) மின்தடை

கோவை கதிர்நாயக்கன்பாளையம் துணை மின் நிலையத்தில் நாளை மாதாந்திர பராமரிப்பு பணிகள் காலை 9 முதல் மாலை 5 மணி வரை நடைபெறும்....

பேருந்தில் கல்லூரி மாணவிக்கு பாலியல் தொல்லை; கோவையில் காவலர் கைது

பொள்ளாச்சியில் இருந்து கோவை வந்த பேருந்தில் பயணித்த கல்லூரி மாணவிக்கு பாலியல் தொல்லை அளித்ததாக, போத்தனூர் காவல் நிலைய கு...