திருப்பூரில் கால்நடை பராமரிப்புத் துறை மூலம் விநியோகிக்கப்படும் ஆடுகள் தரமற்று இருப்பதாக பயனாளிகள் புகார்..!

ஆடுகள் இறந்திருப்பதாக பயனாளிகள் தரப்பிலிருந்து புகார் பெறப்பட்டுள்ளது. இப்பிரச்சினைக்கு உயரதிகாரிகளின் ஆலோசனை பெற்று, அதற்கேற்ப நடவடிக்கை எடுக்கப்படும் என கால்நடை பராமரிப்புத் துறை அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.


திருப்பூர்: கால்நடை பராமரிப்புத்துறை சார்பில் விவசாயிகள் மற்றும் கால்நடை வளர்ப்போருக்கு ஆடு வளர்க்கும் திட்டத்தின் கீழ் அரசு நிதியுதவி வழங்கி வருகிறது. ஒவ்வொரு பயனாளிக்கும் தலா 5 ஆடுகள் வாங்க ஒரு ஆட்டுக்கு ரூ. 3,500 வீதம் 17 ஆயிரத்து 300 ரூபாய் அரசின் சார்பில் வழங்கப்படுகிறது.

அந்த வகையில், ஒவ்வொரு வட்டாரத்திலும் 100 பயனாளிகளுக்கு ஆடு வழங்க இலக்கு நிர்ணயிக்கப்பட்டுள்ளது. இதில், அவிநாசி வடுகபாளையம், சின்னேரிபாளையம் உள்ளிட்ட கிராமங்களில் உள்ள பயனாளிகளுக்கு சமீபத்தில் ஆடுகள் வழங்கப்பட்டது. வழங்கப்பட்ட ஆடுகள் தரமற்று இருப்பதாகவும், ஒரு ஆட்டின் விலை 1,000 முதல் 1,500 ரூபாய் வரை தான் தேறும் எனவும் பயனாளிகள் கூறினர்.

இதுகுறித்து கால்நடை பராமரிப்பு துறையினர் கூறுகையில், ஒவ்வொரு வட்டார அளவிலும் கால்நடை பராமரிப்புத்துறை சார்பில் மொத்த வியாபாரிகள் மூலம் ஆடுகள் வினியோகிக்கப்படுகிறது.

மொத்த வியாபாரிகளால் கொண்டு வரப்படும் ஆடுகள், பயனாளிகளுக்கு திருப்தியாக இல்லாவிட்டால், வேறு ஆடுகளை எடுத்து வரச்சொல்லி வாங்கிக் கொள்ளலாம். ஆடுகளை தேர்வு செய்வது பயனாளிகள் தான். பயனாளிகள் விருப்பப்பட்டால் சந்தைக்குச் சென்றும் கூட ஆடுகளை வாங்கிக்கொள்ளலாம் என்றனர்.

இதுகுறித்து கட்சி சார்பற்ற தமிழக விவசாயிகள் சங்க மாவட்ட தலைவர் ஈஸ்வரன் கூறியதாவது:-

அரசின் ஆடு வழங்கும் திட்டத்தில் முந்தைய ஆட்சியின் போது, ஒவ்வொரு வட்டார அளவில் உள்ள கால்நடை மருத்துவர் கணக்கிலும், அதற்கான தொகை வரவு வைக்கப்பட்டு விடும். பயனாளிகள் தங்களுக்கு விருப்பப்பட்ட சந்தைக்குச் சென்று, விரும்பிய ஆடுகளை வாங்கிக் கொள்ளலாம்.

அதற்கான தொகையைக் கால்நடை மருத்துவர்கள் விடுவித்து விடுவர். தற்போது இந்த நடைமுறையில் மாற்றம் செய்யப்பட்டு பொதுவாக ஒரு மொத்த வியாபாரி மூலம் ஆடுகள் வினியோகிக்கப்படுகிறது. அவ்வாறு கொண்டு வரப்படும் ஆடுகள், பயனாளிகளுக்கு திருப்தி அளிப்பதாக இல்லை என்ற புகாரும் வருகிறது. விவசாயிகளே நேரடியாகச் சந்தைக்குச் சென்று ஆடுகளை கொள்முதல் செய்து கொள்ளலாம் என கால்நடை பராமரிப்பு துறையினர் கூறினாலும், அதற்கான தொகையை விடுவிப்பதில், துறை ரீதியாக நடைமுறை சிக்கல் உள்ளது.

எனவே, பழைய நடைமுறைப்படி, அந்தந்த வட்டார கால்நடை மருத்துவர்கள் மூலம் விவசாயிகளே நேரடியாக ஆடுகளை கொள்முதல் செய்து கொள்ளும் வகையில் அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும்.

இவ்வாறு அவர் கூறினார்.

அவிநாசி, பல்லடம், திருப்பூர் உட்பட திருப்பூர் கோட்டத்துக்கு உட்பட்ட 5 வட்டாரத்தில் தலா 100 பயனாளிகள் தேர்வு செய்யப்பட்டு ஆடு வழங்கப்பட்டு வருகிறது. சில இடங்களில் ஆடுகள் அடுத்தடுத்து பலியாகின்றன. அவிநாசி ஒன்றியம், சின்னேரிபாளையம் கிராமத்தில் 3 ஆடுகள் பலியாகின.

இது குறித்து பயனாளிகள் கூறுகையில், அரசால் இலவசமாக வழங்கப்பட்ட ஆடுகள், சரிவர தீவனம் உட்கொள்ளாமல், சோர்ந்து போய் இருந்தன. சில ஆடுகள் இறந்தும் போயின. இறந்த ஆடுகளுக்கு பதிலாக, வேறு ஆடுகள் வழங்க ஏற்பாடு செய்வதாக கால்நடை பராமரிப்புத் துறையினர் உறுதி அளித்துள்ளனர் என்றனர்.

கால்நடை பராமரிப்பு துறை அதிகாரிகளிடம் கேட்டபோது, ஆடுகள் இறந்திருப்பதாகப் பயனாளிகள் தரப்பிலிருந்து புகார் பெறப்பட்டுள்ளது. இப்பிரச்சினைக்கு உயரதிகாரிகளின் ஆலோசனை பெற்று, அதற்கேற்ப நடவடிக்கை எடுக்கப்படும் என்றனர்.

கால்நடை வளர்ப்போர் சிலர் கூறியதாவது:-

அரசால் வழங்கப்பட்ட கால்நடைகளின் உண்மையான சந்தை மதிப்பை கால்நடை பராமரிப்புத் துறையினரிடம் இருந்து பெற்று வரும்படி, இன்சூரன்ஸ் நிறுவனத்தினர் கூறுகின்றனர்.

ஆனால் எங்கிருந்தோ ஒரு வியாபாரியிடம் இருந்து வாங்கப்படும் கால்நடைகளுக்கு, சந்தை மதிப்பை நிர்ணயித்துக் கொடுக்க கால்நடை பராமரிப்பு துறையினர் தயாராக இல்லை. இதனால், அவை இறந்தால் இன்சூரன்ஸ் தொகையும் கிடைப்பதில்லை.

இவ்வாறு அவர்கள் கூறினர்.

Newsletter

கோவையில் தொடங்கிய இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் மக்கள் சந்திப்பு நடைப்பயணம்

மத்திய அரசின் மக்கள் விரோதக் கொள்கைகளை எதிர்த்தும், தொழிலாளர்களுக்கு எதிராக கொண்டு வரப்பட்டுள்ள தொழிலாளர் சட்டங்களை திரு...

தங்க நகை வழிப்பறி வழக்கு: குற்றவாளிக்கு 7 ஆண்டு சிறை; ரூ.5,000 அபராதம் - கோவை நீதிமன்றம் தீர்ப்பு

கடந்த 2020 ஆம் ஆண்டு கோவையில் 100 கிராம் தங்க நகையை கத்தி முனையில் வழிப்பறி செய்த வழக்கில் குற்றம் நிரூபிக்கப்பட்ட இளைஞர...

கிணத்துக்கடவு அருகே வாலிபர் கொடூரக் கொலை

கோவை மாவட்டம் பொள்ளாச்சியை அடுத்த சிக்கலாம்பாளையம் பகுதியைச் சேர்ந்த அஸ்வின் (22) என்ற வாலிபாரின் வீட்டிற்குள் நள்ளிரவில...

அரசூர் துணை மின் நிலையத்தில் நாளை (07.08.2026) மின்தடை

கோவையில் அரசூர் துணை மின் நிலையத்தில் நாளை காலை 9 மணி முதல் மாலை 5 மணி வரை மாதாந்திர பராமரிப்பு பணிகள் நடைபெறுவதால் செல்...

கதிர்நாயக்கன்பாளையம் துணை மின் நிலையத்தில் நாளை (07.08.2026) மின்தடை

கோவை கதிர்நாயக்கன்பாளையம் துணை மின் நிலையத்தில் நாளை மாதாந்திர பராமரிப்பு பணிகள் காலை 9 முதல் மாலை 5 மணி வரை நடைபெறும்....

பேருந்தில் கல்லூரி மாணவிக்கு பாலியல் தொல்லை; கோவையில் காவலர் கைது

பொள்ளாச்சியில் இருந்து கோவை வந்த பேருந்தில் பயணித்த கல்லூரி மாணவிக்கு பாலியல் தொல்லை அளித்ததாக, போத்தனூர் காவல் நிலைய கு...