போதைப்பொருள் பயன்படுத்துவதால் மாணவர்களின் எதிர்காலம் சீர்குலைந்து வருகிறது. போதைப்பொருள் பயன்படுத்துவதும் விற்பதும் சட்டப்படி குற்றம் என இடுவம்பாளையம் பகுதியில் உள்ள அரசு மேல்நிலைப் பள்ளி மாணவர்களிடம் விழிப்புணர்வு நிகழ்ச்சி நடத்தப்பட்டது.
திருப்பூர்: அரசு மேல்நிலைப் பள்ளியில் மாணவர்களிடையே போதைப்பொருள் தடுப்பு குறித்த விளக்கங்களை திருப்பூர் மாநகர காவல் ஆணையர் உத்தரவு படி வழங்கப்பட்டது.
திருப்பூர் மாநகர காவல் ஆணையர் உத்தரவுப்படி வீரபாண்டி இன்ஸ்பெக்டர் ஆனந்த் மற்றும் சப் இன்ஸ்பெக்டர் ராஜேஷ்குமார் ஆகியோர் இடுவம்பாளையம் பகுதியில் உள்ள அரசு மேல்நிலைப் பள்ளியில் மாணவர்களிடையே போதைப்பொருள் தடுப்பு குறித்த விளக்க உரைகளை வழங்கினர்.
போதைப்பொருள் பயன்படுத்துவதால் மாணவர்களின் எதிர்காலம் சீர்குலைந்து வருவதாகவும், போதைப்பொருள் பயன்படுத்துவதும் விற்பதும் சட்டப்படி குற்றம், போதைப் பொருட்களை விற்பனை செய்பவர் மீது கடுமையான நடவடிக்கை எடுக்கப்பட்டு வருவதாகவும், மாணவர்களிடையே இன்ஸ்பெக்டர் ஆனந்த் தெரிவித்துள்ளார்.
இதனைத்தொடர்ந்து, சப் இன்ஸ்பெக்டர் ராஜேஷ் குமார் மற்றும் பள்ளி முதல்வர் ராஜேஸ்வரி ஆகியோர் மாணவர்களிடம் விழிப்புணர்வை ஏற்படுத்தினர். விழிப்புணர்வு நிகழ்ச்சியில் சுமார் ஆயிரத்துக்கு மேற்பட்ட மாணவர்கள் பங்கேற்றனர்.