சிங்காநல்லூர் நந்தா நகரில் அமைக்கப்பட்டுள்ள ஒருங்கிணைந்த சிசிடிவி கேமரா மையத்தை கோவை மாநகர காவல்துறை ஆணையாளர் துவக்கி வைத்தார்..!

கோவையை சேர்ந்த "ஜீனீஸ் தகவல் தொழில்நுட்ப" நிறுவனத்தின் பெரு நிறுவன சமூக பொறுப்புணர்வுடன் நந்தா நகரில் 32-கண்காணிப்பு கேமராக்கள் அமைக்கப்பட்டு இதன் ஒருங்கிணைந்த மையத்தின் துவக்க விழா இன்று நடைபெற்றது.



கோவை: கோவை சிங்காநல்லூர் நந்தா நகரில் அமைக்கப்பட்டுள்ள ஒருங்கிணைந்த சிசிடிவி கேமரா மையத்தை கோவை மாநகர காவல்துறை ஆணையாளர் துவக்கி வைத்தார்.

கோவை சிங்காநல்லூர் காவல் நிலைய பகுதியில் அமைந்துள்ளது நந்தா நகர். இப்பகுதி மக்கள் ஒத்துழைப்போடு சிங்காநல்லூர் காவல் துறையின் வழிகாட்டுதலின் படி கோவையை சேர்ந்த “ஜீனீஸ் தகவல் தொழில்நுட்ப" நிறுவனத்தின் பெரு நிறுவன சமூக பொறுப்புணர்வுடன் இங்கு 32 கண்காணிப்பு கேமராக்கள் அமைக்கப்பட்டு இதன் ஒருங்கிணைந்த மையத்தின் துவக்கவிழா இன்று (09.07.2022) காலை 10.30 மணிக்கு இப்பகுதியில் உள்ள கே.பி.ஆர். லே-அவுட் வாணியர் முன்னேற்றச் சங்க அரங்கில் நடைபெற்றது.

இதை கோவை மாநகர காவல் துறை ஆணையாளர் வி.பாலகிருஷ்ணன் சிறப்பு விருந்தினராகக் கலந்து கொண்டு சிசிடிவி கேமராக்கள் இயக்கத்தை துவக்கி வைத்தார். அப்போது அவர் பேசியதாவது:- இங்கு அமைக்கப்பட்டுள்ள கேமிராக்களை ஜீனீஸ் தகவல் தொழில்நுட்பம் மற்றும் சர்வீசஸ் பிரைவேட் லிமிடெட் நிறுவனத்தின் நிர்வாக இயக்குனர் தேவராஜ் பழனிசாமி இலவசமாக வழங்கியது மிகவும் மகிழ்ச்சி அளிக்கின்றது.

சமீபகாலத்தில் பாதுகாப்பு வசதி என்பது காவலர்கள் மற்றும் காவல்துறையில் பணியாற்றக்கூடிய, தொடர்புடையவர்களுக்கு இன்றைய காலகட்டத்தில் கண்காணிப்பு கேமராக்களின் பயன் மிகவும் பயனுள்ளதாக அமைந்துள்ளது. கடந்த காலங்களில் ஸ்டேன்டலோன் கேமிராக்களாக இருந்தது. இப்போது தொழில்நுட்ப முன்னேற்றத்தால் நெட்ஒர்க் கேமிராக்களாக இருப்பது மிக அதிக பயன்களைத் தருகின்றது.

யாரையாவது சந்தேகப்படும்படி இருந்தால் உடனடியாக நடவடிக்கை எடுக்கப்படும். தொழில்நுட்பத்தை நாம் எவ்வளவு முடியுமோ அவ்வளவு பயன்படுத்திக் கொள்ள வேண்டும். அது தான் புத்திசாலித்தனம். காவல்துறை எவ்வளவு அலர்ட்டாக இருந்தாலும். மனித தவறு என்பது சில சமயம் பாதுகாப்பு இடைவெளியை உருவாக்கிவிடும். தொழில்நுட்பத்துடன் கூடிய விடாமுயற்சிக்கு இந்த சிசிடிவி கேமிரா உறுதுணையாக இருக்கும்.

உங்கள் பகுதியில் உள்ள பாதுகாப்பு முழுமையாக இருக்க வேண்டும் என்ற அடிப்படையில் நீங்கள் கேமிரா அமைத்தது போல மற்ற இடங்களிலும் கேமிரா பொருத்தப்பட வேண்டும். அந்தந்த பகுதி மக்களின் ஒத்துழைப்பு இல்லாமல் காவல் துறையால் செயல்பட முடியாது.

முன்பு எல்லாம் வழிப்பறி, கொள்ளை என்று இருந்த குற்றங்கள் தற்போது பெரும்பாலான குற்றங்கள் இணைய குற்றங்களாக நடைபெறுகிறது. எங்கேயோ ஒரு இடத்திலிருந்து கொண்டு கணினி மூலம் உங்கள் பணம் மற்றும் கணினி, மொபைலில் உள்ள தகவல்கள் திருடப்படுகின்றன. உங்களது படங்களை எடுத்து மார்பிங் செய்து உங்கள் உறவினர்களுக்கு அனுப்பி உங்களிடம் பணம் பறிப்பது, லோன் தருகின்றோம் என்று செல்லி குறுஞ்செய்தி அனுப்பி உங்கள் வங்கி கணக்கிலிருந்து பணம் திருடுவது போன்ற குற்றங்கள் நடக்கின்றன.

சமீபத்தில் மாவட்ட ஆட்சியர் படம் மற்றும் உயர் காவல்துறை அதிகாரிகளின் படங்களை உபயோகப்படுத்தி பணம் கேட்டு தகவல் அனுப்பி ஏமாற்றுவது போன்ற குற்றங்கள் நடைபெறுகிறது. திருச்சியில் ஓய்வு பெற்ற காவல் துறை அதிகாரியிடம் இது போன்று ஒரு பணம் பறித்த சம்பவம் நடைபெற்றுள்ளது. எனவே லோன் ஆஃப் லின்க் வந்தால் உடனடியாக அழித்து விடவும். எனவே நாம் மிகவும் எச்சரிக்கையாக இருக்க வேண்டும்.

இவ்வாறு அவர் பேசினார்.

விழாவில் கோவை ஜீனீஸ் தகவல் தொழில்நுட்பம் மற்றும் சர்வீசஸ் பிரைவேட் லிமிடெட் நிறுவனத்தின் நிர்வாக இயக்குனர் தேவராஜ் பழனிசாமி 32 கேமராக்களை காவல்துறை ஆணையாளரிடம் முறையாக ஒப்படைத்து பேசியதாவது:-

எங்கள் நிறுவனம் இணையத்தள சைபர் பாதுகாப்பு வழங்கும் நிறுவனமாகும். இன்றைய காலகட்டத்தில் கணினி மற்றும் வீடுகளில் குற்றச் செயல்கள் மிகவும் அதிகம் ஆகிவிட்டது. சிறிய கவனக்குறைவும் கூட குற்றவாளிகள் வீட்டிற்குள் கைவரிசை காட்ட வசதியாகப் போய்விடும். இத்தகைய சூழ்நிலையில், நாளெல்லாம் வீட்டில் அமர்ந்து வீட்டைப் பாதுகாப்பது என்பது இயலாத விஷயம்.

இதற்குத் தீர்வாக சிசிடிவி கேமராக்கள் நமக்கு மிகவும் உதவியாக இருக்கின்றன. இந்த பகுதியில் அமைக்கப்பட்டுள்ள சிசிடிவி கேமராக்கள் இப்பகுதி மக்கள் தங்களது வீடு மற்றும் கடைகளை முழுமையாக கண்காணிக்க மிகவும் உதவியாக இருக்கும்.

அதிகரித்து வரும் குற்றங்களை பெரும்பாலும் தடுக்க முடியாது என்றாலும், அவற்றை கட்டுப்படுத்த சிசிடிவி கேமராக்கள் பெரிதும் உதவுகின்றன. அவை உங்கள் வீட்டையும் அலுவலகத்தையும் முற்றிலும் பாதுகாப்பான கண்காணிப்பில் வைத்திருக்க மிகவும் உதவியாக இருக்கும்.

இந்த கேமராக்கள் நிகழ் நேர வீடியோவைக் காண்பிக்கும். அடர்ந்த இருளிலும் தெளிவான காட்சியை வழங்கும் மேம்பட்ட அம்சங்களைக் கொண்ட சிசிடிவி கேமராக்களை நாங்கள் வழங்கியுள்ளோம். இவற்றின் வீடியோ தரம் மிகவும் சிறப்பாக இருக்கும்.

இந்த கேமராக்கள் அனைத்து திசைகளிலும் சுழலும் லென்ஸ்கள் உடன் 360 டிகிரியில் கவரேஜ் செய்து கொடுக்கிறது. இந்த கேமராக்களில் ஹெவி ஸ்டோரேஜ் கொடுக்கப்பட்டுள்ளது.

மேலும், இப்பகுதியின் ஒவ்வொரு அசைவையும் 24 மணி நேரமும் தொடர்ந்து கண்காணித்து நிகழ்வுகளை பதிவு செய்து குற்றங்களைத் தடுக்க இது காவல் துறைக்கு நல்ல உதவியாக இருக்கும் என்பதில் சிறிதும் ஐயமில்லை.

முன்னதாக விழாவிற்கு வந்திருந்தவர்களை கோவை சரகம் சிங்காநல்லூர் காவல் உதவி ஆணையாளர் எம்.ஜி. அருண்குமார் அவர்கள் வரவேற்றார். கோவை மாநகரம் தெற்கு, காவல் துணை ஆணையாளர் என். சிலம்பரசன் நன்றி கூறினார்.

Newsletter

உலக புகையிலை ஒழிப்பு தினம்: போத்தனூர்-வெள்ளலூர் பகுதியில் காவல்துறை விழிப்புணர்வு முகாம்

உலக புகையிலை ஒழிப்பு தினத்தையொட்டி கோவை போத்தனூர் காவல் நிலையத்தின் சார்பில் வெள்ளலூர் குடியிருப்பு பகுதியில் போதைப்பொரு...

பேரூர் கோவிலில் ரூ.1.40 கோடி புதிய திருத்தேர்: பாலக்கால் பூஜையுடன் திருப்பணி தொடக்கம்

கோவை பேரூர் பட்டீஸ்வரர் கோவிலில் ரூ.1.40 கோடி மதிப்பீட்டில் புதிய திருத்தேர் அமைக்கும் திருப்பணிக்கான பாலக்கால் பூஜை நடை...

கோவையில் நெடுஞ்சாலைத்துறை வளர்ச்சி திட்டங்கள் குறித்து அமைச்சர் ஆதவ் அர்ஜுனா ஆய்வு

கோவை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் பொதுப்பணித்துறை அமைச்சர் ஆதவ் அர்ஜுனா நெடுஞ்சாலைத்துறை வளர்ச்சி திட்ட பணிகள் குறித்து...

கோவையில் சர்வதேச மாநாட்டில் சிறந்த அறிவியல் சிந்தனைகளுக்கு ரூ.1 லட்சம் பரிசு

கோவை தொழில்நுட்பக் கல்லூரியில் ஜூன் 3 முதல் 5 வரை நடைபெறும் AMCEHA 2026 சர்வதேச மாநாட்டில், சிறந்த அறிவியல் சிந்தனை மற்ற...

கோவை நேரு உள்விளையாட்டு அரங்கில் அமைச்சர் ஆதவ் அர்ஜுனா ஆய்வு

கோவையில் விளையாட்டு மற்றும் பொதுப்பணி துறை அமைச்சர் ஆதவ் அர்ஜுனா நேரு உள்விளையாட்டு அரங்கில் கபடி வீரர்களைச் சந்தித்து அ...

கோவையில் தடை செய்யப்பட்ட புகையிலை பொருட்கள் பறிமுதல்; 4 பேர் கைது

கோவை மாநகரில் தடை செய்யப்பட்ட குட்கா மற்றும் புகையிலைப் பொருட்கள் விற்பனையை தடுக்க போலீசார் நடத்திய சோதனையில், வெவ்வேறு...